சௌபின் ரோல் பகத் பாசிலுக்காக எழுதப்பட்டது.. 6 மாதம் கஷ்டப்பட்டேன்.. ஆனால், லோகேஷ் பேட்டி!
சென்னை: ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் உருவாகி இருக்கும் கூலி திரைப்படம் பான் இந்திய திரைப்படமான ஆகஸ்ட் 15ந் தேதி வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் நாகார்ஜுனா அக்கினேனி, அமீர் கான், உப்சேந்திரா, சத்யராஜ், சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் இருந்த இரண்டாவது பாடலான மோனிகா பாடல் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இணையத்தில் அனைவரும் மோனிகா பாடலில் தாறுமாறாக ஆட்டம் போட்ட சௌபின் ஷாஹிரை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் அளித்து இருக்கும் பேட்டியில், சௌபின் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய பகத் பாசில் தான், அவருக்காகத்தான் அந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது என்றார். அந்த ரோல் சௌபினுக்காக எழுதப்படவில்லை. அது மற்றொரு முன்னணி நடிகருக்காக உருவாக்கப்பட்டது. அந்த கதாபாத்திரத்திற்காக ஆறு மாதங்கள் உழைத்தேன். ஆனால், அந்த நடிகர் இந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதன் பின், மலையாள நடிகர் ஃபஹாத் ஃபாசிலை அணுகி கதையை கூறினோர். ஆனால், அவருக்கு கால்ஷீட் பிரச்சனை இருந்ததால், அவரால் நடிக்க முடியாமல் போனது. அதன்பின் தான், மலையாள நடிகர் சௌபின் ஷாஹிரை சந்தித்து கதை சொன்னோம், அவர் இந்த ரோலில் நடிக்க ஒத்துக்கொண்டார். அவரது நடிப்பு இந்த கதாபாத்திரத்திற்கு புது உயிர் கொடுத்து உள்ளது என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

சௌபின் ஷாஹிர் : கூலி படத்தில் இருந்து இரண்டாவது பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மோனிகா கிக் கிக் மா.. ஐ லவ் யூ" பாடலில் பூஜாவுடன் சேர்ந்து மாஸாக ஆட்டம் போட்டு உள்ளார் சௌபின் ஷாஹிர். இவர் வேறு யாருமல்ல, மலையாள நடிகர் சௌபின் ஷாஹிர் என்பது இணையத்தில் தேடிய பலருக்கு தெரியவந்துள்ளது. கேரளாவின் கொச்சியில் பிறந்த சௌபின் ஷாஹிர், 1992ஆம் ஆண்டு வியட்நாம் காலனி என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமானார். இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர், நடித்த மஞ்சுமல் பாய்ஸ் படத்தை தமிழில் பார்த்த பலரும் இவரது நடிப்பை வெகுவாக பாராட்டினார்கள்


Click it and Unblock the Notifications











