கார்த்தி தான் பெரிய ஹீரோ.. விஜய் இல்லைன்னா அந்த படங்களை பண்ணவே மாட்டேன்.. லோகேஷ் கனகராஜ் பளிச்!

சென்னை: லோகேஷ் கனகராஜ் அவர்களின் திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் ஒரு சினிமாட்டிக் யுனிவர்ஸாக உருவாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. ஆனால், அவரே ஒரு பேட்டியில் தனக்கு பெரிய ஹீரோ கார்த்தி தான் என்று கூறியிருக்கிறார். ஏன் அப்படிச் சொன்னார் என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

லோகேஷ் கனகராஜ் கைதி படம் ஆரம்பிக்கும்போது LCU ஐடியாவே இல்லை என்றும், மக்கள் கொடுத்த வரவேற்பு மற்றும் ஆதரவின் காரணமாகவே அது ஒரு கன்வென்ஷனாக மாறியது என்றும் கூறுகிறார். மேலும், அந்த கதையின் கிளை கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை வைத்து இன்னும் நிறைய விஷயங்கள் பண்ணலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Lokesh Kanagaraj talks about LCU and VIjay movies in recent Coolie promotions

LCU கதாபாத்திரங்கள் திணிப்பு மாதிரி இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதாக லோகேஷ் கூறுகிறார். உதாரணமாக, லியோ படத்தில் ஜார்ஜ் மரியன் கதாபாத்திரம் ஒரு ஃபன் ஃபேக்டருக்காக வைக்கப்பட்டதே எனவும், அது லாஜிக்காக இருக்க வேண்டும் என்பதற்காகவே அந்த கதாபாத்திரம் கைதி படத்தில் இருந்த ஒரு ரெஃபரென்ஸாக இருக்கும்படி பார்த்துக்கொண்டோம் என்றார்.

மற்ற இயக்குனர்கள் ஏன் சினிமாட்டிக் யுனிவர்ஸை இன்னும் முயற்சி செய்யவில்லை என்ற கேள்விக்கு, எல்லோரும் ஒரு காலக்கட்டத்தில் ஏதாவது ஒரு படத்தைப் பார்த்து இன்ஸ்பையர் ஆகி தான் சினிமாவுக்கு வந்திருப்பார்கள் என்றும், அந்த மாதிரி ஒரு இடத்தை நிரப்ப ஆசை இருப்பதாக லோகேஷ் கூறினார். மேலும், வெற்றிமாறன் அந்த மாதிரி ஒரு யுனிவர்ஸில் படம் பண்ணினால், முதல் ஆளாக தான் பார்ப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், விஜய், கமல், ரஜினி போன்ற உச்ச நட்சத்திரங்களை இயக்கியிருந்தாலும், கார்த்தியை வைத்து மீண்டும் படம் பண்ணுவதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை எனக் கூறினார். கார்த்தி தான் தன்னுடைய பெரிய ஹீரோ என்றும், அவர் கொடுத்த ஆதரவால்தான் மற்ற விஷயங்கள் நடந்ததாகவும் லோகேஷ் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Lokesh Kanagaraj talks about LCU and VIjay movies in recent Coolie promotions
Photo Credit:

ஒருவேளை விஜய் அரசியலுக்குப் போய்விட்டால், லியோ 2, மாஸ்டர் 2 படத்தை யாரை வைத்து எடுப்பீர்கள் என்ற கேள்விக்கு, அவர் வந்தால் பண்ணுவேன், இல்லையென்றால் அந்த படம் பண்ண வேண்டியதில்லை, வேறு ஏதாவது படங்கள் பண்ணலாம் என்று திட்டவட்டமாக லோகேஷ் கூறினார். இதன் மூலம் விஜய்க்கும் லோகேஷுக்கும் உள்ள நட்பு எந்த அளவு ஆழமானது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.மேலும், தான் நடிகராக மாறுவதற்கு வாய்ப்பு வந்ததற்கான காரணம் பற்றி பேசிய லோகேஷ், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தனக்கு நல்ல நண்பர் என்பதாலும், அவர் பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கவில்லை என்பதாலும், தனக்கு கொஞ்சம் பிரேக் தேவைப்பட்டதாலும் நடிக்க சம்மதித்ததாக கூறினார். இது ஒரு முயற்சிதான் என்றும் அவர் தெரிவித்தார்.

கூலி படத்தில் வாட்சுக்கு முக்கியத்துவம் கொடுத்தது பற்றி கேட்டதற்கு, அது வாட்ச் ஃபேக்டரியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்றும், அந்த வாட்சை ஒரு செயின் மாதிரி பயன்படுத்த வேண்டும் என்பது தன்னுடைய ஐடியா என்றும் லோகேஷ் கூறினார். மேலும், ரோலக்ஸ் படத்துக்கு டைட்டில் வைத்தது எல்லாமே அந்த ஆர்வத்தின் காரணமாகத்தான் என்றும் அவர் சிரித்துக்கொண்டே கூறினார். பிஸ்மியின் கேள்விகளுக்கு ரொம்பவே பொறுமையாகவும் நிதானமாகவும் லோகேஷ் பதில் அளித்து கூலி படத்தை ப்ரோமோட் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X