தல தளபதி ரசிகர்களிடம் சிக்கி சின்னா பின்னமாகிட்டேன்.. லொள்ளு சபா மனோகர் கலகல பேட்டி!

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சிக்கு எப்பவுமே ரசிகர்கள் இருப்பார்கள்.

சந்தானம், லொள்ளு சபா மனோகர், சாமிநாதன், ஜீவா என ஏகப்பட்ட பிரபலங்கள் லொள்ளு சபாவில் இருந்து சினிமாவுக்கு வந்தனர்.

லொள்ளு சபா நிகழ்ச்சியில் ஒவ்வொரு சூப்பர் ஹிட் படங்களையும் எடுத்துக் கொண்டு மரண ட்ரோல் பண்ணி இயக்குநர் ராம் பாலா அசத்திவிடுவார்.

Lollu Sabha actor Manohar close call interview!

நம்ம ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு லொள்ளு சபா மனோகர் அளித்த கலகல பேட்டி வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.

தனது கைகளை உருட்டி வித்தியாசமான டோனில் பேசியே லொள்ளு சபா மனோகர் ரசிகர்களை சிரிக்க வைத்துவிடுவார்.

நகைச்சுவை நடிகர் செந்தில் அளவுக்கு சினிமாவில் ஷைன் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட அவருக்கு இன்னமும் வெள்ளித்திரையில் ஒரு மிகப்பெரிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், கிடைக்கிற வாய்ப்புகளில் எல்லாம் தனது நூறு சதவீத உழைப்பு போட்டு அசத்தி விடுவார்.

போக்கிரி படத்தை பேக்கிரி என கலாய்த்த பிறகு தான் அந்த நிகழ்ச்சிக்கு தளபதி ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக வேட்டு வைத்த சம்பவம் நடந்தது.

லொள்ளு சபா நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்த சமயத்தில் தல தளபதி ரசிகர்களிடம் பல முறை சிக்கி சின்னாபின்னமாகி உள்ள கதைகளை இந்த பேட்டியில் லொள்ளு சபா மனோகர் பகிர்ந்துள்ளார். வீடியோவை மிஸ் பண்ணாம பாருங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X