கடைசி நேரத்தில் கூட யாருமே இல்ல.. பரிதாபமாக உயிரிழந்த லொள்ளு சபா ஆண்டனி!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான லொள்ளு சபா ஆண்டனி காலமானார். நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்டனி கடந்த சில மாதமாக படுத்த படுக்கையாக இருந்த நிலையில் இன்று காலமானார். அவரது மறைவு பலரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் அனைவருக்கும் பிடித்தமான நிகழ்ச்சியாக, வயிறு வலிக்க வைத்த நிகழ்ச்சி தான் லொள்ளு சபா. 2003 ஆம் ஆண்டு முதல் 2008 வரை ஒளிபரப்பப்பட்ட லொள்ளு சபா நிகழ்ச்சி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. சந்தானம், சுவாமிநாதன், ஜீவா, மாறன், பாலாஜி, மனோகர், மதுமிதா ஆகியோர் நடித்தனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் சினிமாவில் நகைச்சுவை நடிகராக சினிமாவில் அறிமுகமான சந்தானம் தற்போது, ஹீரோவாக கலக்கி வருகிறார்.

லொள்ளு சபா ஆண்டனி: இந்த நிகழ்ச்சியில் சந்தானத்துடன் சேர்ந்து நடித்து லொள்ளு சபா ஆண்டனி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். கடந்த ஆண்டு நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த ஆண்டனிக்கு நடிகர் சந்தானம் மற்றும் நடிகர் சேஷுஆகியோர் உதவி செய்தானர். மேலும், பல உடல் நல பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த ஆண்டனியின் உயிர் இன்று அதிகாலை பிரிந்தது. இவரது மறைவு லொள்ளு சபா குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். இவர், சந்தானத்துடன் இனைந்து, சில படத்தின் காமெடி காட்சிகளில் நடித்துள்ளார்.
யாருமே இல்லை: கடந்த சில ஆண்டுக்கு முன் ஆண்டனி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் எலும்பும் தோலுமாக இருந்தார். அப்போது அவர், யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், லொள்ளு சபா நிகழ்ச்சி எனக்கு மிகப்பெரிய அளவில் பெயரை பெற்றுக் கொடுத்தது. அப்போது தான் எனக்கு ஆஸ்துமா பிரச்சனை வந்து அது சாதாரணமானது என்று தான் நான் நினைத்தேன். ஆனால், அது நுரையீரலில் நீர் கோர்த்து பெரிய பிரச்சனையாகி விட்டது. எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போவதற்கு முன்பே என்னுடைய மனைவி குழந்தைகள் என்னை விட்டு பிரிந்து போய்விட்டார்கள், இப்போது என்னை கவனித்துக்கொள்வதற்கு கூட யாரும் இல்லை என்று பேசி இருந்தார்.
கடந்த ஆண்டு லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான காமெடி நடிகர் சேசு மாரடைப்பால் காலமானார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென உயிரிழந்தார். இவர், சந்தானத்துடன் சேர்ந்து பல படத்தில் நடித்திருந்தார். தற்போது, லொள்ளு சபா குழுவில் இருந்த மற்றொரு நடிகரான ஆண்டனி உயிரிழந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











