வெறும் ரூ.6000 சம்பளம்..சந்தானம் இப்படி செய்வாருனு நினைக்கல.. லொள்ளு சபா மனோகர் வேதனை
சென்னை: ஒருகாலத்தில் தமிழ் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த 'லொள்ளு சபா' காமெடி நிகழ்ச்சியின் முக்கிய நட்சத்திரமாக இருந்தவர் லொள்ளு சபா மனோகர். தனது வித்தியாசமான பாடி லேங்குவேஜ், டைமிங் காமெடி மற்றும் கவுண்டர் வசனங்களால் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த அவர், தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருவதாக கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதைவிட, நடிகர் சந்தானம் குறித்து அவர் வெளிப்படையாக பேசிய சம்பள விஷயம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லொள்ளு சபா மனோகர்: பலரது சினிமா வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்த விஜய் டிவியின் 'லொள்ளு சபா' நிகழ்ச்சி 2003 முதல் 2007 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அன்றைய ஹிட் படங்களை நகைச்சுவையாக ரீமேக் செய்து ஒவ்வொரு வாரமும் சிரிப்பு வெடிகளை கொடுத்த அந்த நிகழ்ச்சி, இன்று வரை மீம்ஸ்களிலும் சமூக வலைதளங்களிலும் டிரெண்டாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் நடித்த பலருக்கும் பின் சினிமாவில் வாய்ப்புகள் பெற்று முன்னணி காமெடி நடிகர்களாக உயர்ந்தனர். அவர்களில் முக்கியமான மனோகரும் ஒருவர்.

பட வாய்ப்பு இல்லை: 'லொள்ளு சபா' நிகழ்ச்சிக்குப் பிறகு பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்த மனோகர், சமீபத்தில் அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், இப்போது எனக்கு பட வாய்ப்பே வருவதில்லை. பழைய கலைஞர்களை யாரும் தேடுவதில்லை. ஒருகாலத்தில் எல்லாரையும் சிரிக்க வைத்த நாங்கள் இன்று வாய்ப்புக்காக காத்திருக்கிறோம் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
சம்பளமே தரல: தொடர்ந்து நடிகர் சந்தானம் குறித்து பேசிய மனோகர், 'A1' படத்தில் நடித்ததற்காக ஒரு நாள் சம்பளமாக வெறும் 6,000 ரூபாய் தான் கொடுத்தார்கள். நண்பன் என்ற உரிமையிலேயே 'ஏம்பா... கொஞ்சம் கூடுதலா பார்த்துக்கோ' என்று சந்தானத்திடம் கேட்டேன். ஆனால் அவர் அதைப் பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. '6000 ரூபாய் தான்' என்று கையில் கொடுத்துவிட்டு சென்றார் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். மனோகரின் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. ஒருபுறம், சினிமாவில் பழைய கலைஞர்களுக்கு மரியாதையும் வாய்ப்பும் குறைந்து வருகிறது என்று ரசிகர்கள் கவலை தெரிவிக்க, மறுபுறம் நட்புக்கும் சம்பளத்துக்கும் இடையே இப்படியா நடந்தது? என சந்தானத்தையும் விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications