லாஸ்லியா - தர்ஷனின் பிரத்யேக பேட்டி.. கூகுள் குட்டப்பன் படத்தை பற்றி என்ன சொல்றாங்கன்னு பாருங்க!

சென்னை: பிக்பாஸ் போட்டியாளர்களான லாஸ்லியா மற்றும் தர்ஷன் இணைந்து அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.

தெனாலி படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் தயாரிக்கும் படம் கூகுள் குட்டப்பன்.

மலையாளத்தில் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் எனும் பெயரில் வெளியாகி வெற்றிப்பெற்ற அந்த படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகவுள்ளது.

பிக் பாஸ் பற்றி

பிக் பாஸ் பற்றி

கூகுள் குட்டப்பன் படத்தில் ஜோடி சேர்ந்துள்ள பிக் பாஸ் பிரபலங்களான லாஸ்லியாவும் தர்ஷனும், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தங்களுக்கு கிடைத்த புகழை மறக்காமல் மறைக்காமல் வெளிப்படையாக அழகு தமிழில் பேசியுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சி தங்களுக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு என்றும் கூறியுள்ளனர்.

கெமிஸ்ட்ரி எப்படி

கெமிஸ்ட்ரி எப்படி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் லாஸ்லியா கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆனது. லாஸ்லியாவை தங்கையை போல பார்த்து வந்த தர்ஷன் தற்போது அவருடன் ஜோடி போட்டு நடிக்க உள்ள நிலையில், இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி எப்படி இருக்கு என்கிற கேள்விக்கு, பிக் பாஸ் வீட்டிலேயே இருவரும் நன்றாக பேசி பழகி இருக்கிறோம். சினிமாவில் இன்னமும் நெருக்கமாக இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது என்றார்.

கெமிஸ்ட்ரி எப்படி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் லாஸ்லியா கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆனது. லாஸ்லியாவை தங்கையை போல பார்த்து வந்த தர்ஷன் தற்போது அவருடன் ஜோடி போட்டு நடிக்க உள்ள நிலையில், இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி எப்படி இருக்கு என்கிற கேள்விக்கு, பிக் பாஸ் வீட்டிலேயே இருவரும் நன்றாக பேசி பழகி இருக்கிறோம். சினிமாவில் இன்னமும் நெருக்கமாக இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது என்றார்.

செம தெளிவு

செம தெளிவு

லாஸ்லியா, தர்ஷன் இருவர் பற்றியும் ஏகப்பட்ட விமர்சனங்கள், விவாதங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுந்து வருகிறது. உங்களை தனிப்பட்ட முறையிலோ அல்லது குடும்பத்தினர் பற்றியோ ஆரோக்கியமாகவும் இழிவாகவும் பேசி வருகின்றனர். அதை எப்படி பார்க்குறீங்க? என்றதும் செம தெளிவாக நடிகை லாஸ்லியா, விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அதை பெரிதாக கண்டு கொள்வதில்லை. நாங்க மட்டுமல்ல சினிமாவில் இருக்கும் பலரும் பல காலமாக இதை பின் பற்றி வருகின்றனர் என்றே நினைக்கின்றேன் என்றே பதிலளித்துள்ளார்.

அந்த பயம் இருக்கு

அந்த பயம் இருக்கு

மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தை பார்த்துட்டீங்களா என்கிற கேள்விக்கு இருவரும் ஆம் என்றே பதில் அளித்தனர். மேலும், இலங்கை தமிழ் பேசி நடிப்பதாலே லாஸ்லியாவை இந்த படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அப்பாவாக நடிக்கும் கே.எஸ். ரவிக்குமாருடன் ஒரு எமோஷனல் சீன் இருக்கு அதை நினைச்சா தான் பயமா இருக்கு என தர்ஷன் பேசியுள்ள பிரத்யேக பேட்டியை மிஸ் பண்ணாம பாருங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X