நான் எடுக்க போகிற படத்தோட முன்னோட்டம் தான் லவ்டுடே.. வேற லெவல்ல இருக்கும்..மிரள் இயக்குநர் கலக்கல்!

சென்னை: இயக்குநர் சக்திவேல் இயக்கத்தில் நடிகர் பரத், வாணி போஜன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மிரள்.

இப்படமானது நவம்பர் 11ம் தேதி திரைக்கு வருகிறது. நீண்ட இடைவேளைக்கு பின் நடிகர் பரத் நடித்துள்ள இந்த த்ரில்லர் படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நடிகர் பரத், நடிகை வாணி போஜன் ஆகியோர் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

முக்கியமான படம்

முக்கியமான படம்

கேள்வி: வாணி போஜன், மிரள் படம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

பதில்: இது எனக்கு இரண்டாவது படம். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நடிகர் பரத் நிறைய படங்கள் நடித்துள்ளார். நிறைய வெற்றி படங்களும் கொடுத்துள்ளார். எனக்கு இந்த படம் முக்கியமான படமாகும் என்றார்.

8 மாத உழைப்பு

8 மாத உழைப்பு

கேள்வி: பரத், நீங்கள் இயக்குநரை பாராட்டியுள்ளீர்கள். எதனால்?

பதில்: நான் திரைத்துறைக்கு வந்து 19 வருடங்களாகின்றன. படம் பார்த்ததில் எனக்கு ரொம்ப திருப்தியாக இருக்கிறது. எங்கேயும் படம் போராடிக்காது. இயக்குநர், ரொம்ப அழகாக படத்தை கொண்டு போயிருக்கிறார். 20 நாட்கள் ஷூட்டிங்கிற்காக அவர் 8 மாதம் உழைத்துள்ளார். எமோஷனல் கலந்து என்டர்டெய்ன்மென்ட்டாக இப்படம் வந்துள்ளது என்றார்.

மற்ற கதாபாத்திரங்கள்

மற்ற கதாபாத்திரங்கள்

கேள்வி: பரத், இந்த படத்தில் உங்களுக்கு பிடித்த வசனம் என்ன?

பதில்: இப்படத்தில் வசனம் என்பது கிடையாது. வசனம் இல்லாமல் படம் எப்படி வரப்போகிறது என்று முதலில் கருதினேன். ஆனால் படம் நன்றாக வந்துள்ளது. படத்தை பொறுத்தவரை விண்ட்மில், மியூசிக்கல், அமைதி, ஒத்தடிப்பாதை ஆகியவை தான் கதாபாத்திரங்கள். இயக்குநர் என்னிடம் கூறுகையில், தென்காசி விண்ட்மில் என்று தான் கதையை ஆரம்பித்தார்.

பிரதீப்புக்கு வாழ்த்துக்கள்

கேள்வி: உங்களுடைய அடுத்த படமான லவ் படம் குறித்து...

பதில்: லவ் படமானது மிரள் படம் மாதிரி கதாநாயகன், கதாநாயகிக்கு சம அளவில் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள படம். தற்போதைய காலக்கட்டத்தில் நிஜவாழ்க்கையில் கணவன் & மனைவிக்கு இடையே நடைபெறும் கதை தான். இயக்குநரும், நடிகருமான பிரதீப் நடிப்பில் தற்பொழுது வெளிவந்துள்ள லவ் டுடே படம் வெற்றியடைந்துள்ளது லவ் படத்திற்கான முன்னோட்டமாகும். பிரதீப்புக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/8obJgEhR31o இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X