For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கை நழுவிப்போய் மீண்டும் வந்த அண்ணாத்த பட வாய்ப்பு... மனம் திறக்கிறார் ஸ்ரீரஞ்சனி

  |

  சென்னை : மாதவன்,விஜய் அஜித் சிம்பு விஷால், போன்ற முன்னனி நடிகர் நடிகைகளுடன் நடித்த "திரையுலக தாய்" என்றே காமெடியாக பலர் சொல்லக்கூடியவர் நடிகை ஸ்ரீரஞ்சனி. பெரும்பாலான தமிழ் நடிகர்களுக்கு அம்மாவாக அக்காவாக நடித்து வருகிறார்.

  Actress Sivaranjani Interview | Vinodaya Sitham | Annaatthe | Filmibeat Tamil

  கே.பாலச்சந்தரின் காசளவு நேசம் என்ற டிவி தொடர் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் மட்டுமே இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்

  பேய் படங்களில் ட்ரெண்டிங்கை ஏற்படுத்திய பீட்சா படம்... 9 ஆண்டு கொண்டாட்டம்! பேய் படங்களில் ட்ரெண்டிங்கை ஏற்படுத்திய பீட்சா படம்... 9 ஆண்டு கொண்டாட்டம்!

  சினிமா சீரியல் எதுவாக இருந்தாலும் குடும்ப உறவுகளின் முக்கிய குணச்சித்திர வேடத்தில் நடிக்க விரும்புவார் ஸ்ரீரஞ்சனி. தடகள போட்டியில் ஜூனியர் லெவல் நேஷனல் சாம்பியன். ஹாக்கி ப்ளேயர். திருமணத்திற்கு பின்பு விளையாட்டை ஓரங்கட்டிவிட்டார். பார்ப்பதற்கே மங்களகரமான புடவையும் மல்லிகைப்பூவையும் வைத்து தெய்வாம்சமாக நம்மோடு உரையாடத்தொடங்கினார் ஸ்ரீரஞ்சனி

  வினோதமான அர்த்தமுள்ள அம்மாவாக

  கேள்வி : நீங்கள் நடித்த வினோதயசித்தம் படம் பற்றி சொல்லுங்களேன்?

  பதில் : எல்லா விஷயத்துக்கும் ஒரு நேரம் வரனும்ன்னு சொல்வாங்கல்ல. அது இதான். இந்த படம் பார்த்தா அந்த உண்மை புரியும். வாழ்றது கொஞ்ச நாள். அத சிறப்பா நல்லா வாழனும். அத சொல்றதுதான் இந்த படம். இதுலயும் ஒரு அம்மா கேரக்டர் ல நடிச்சிருக்கேன். ரொம்ப அருமையான படம். எல்லா புத்தகம், வாழ்க்கை தத்துவம் ல்லாம் தேட தேவையே இல்ல. இந்த படம் ஒன்னே போதும். நிறைய நேரத்தை மிச்ச படுத்தும் . காலத்தின் ஓட்டத்தை புரிய வைக்கும் .

   ஹெட்மாஸ்டர் மாதிரி

  ஹெட்மாஸ்டர் மாதிரி

  கேள்வி : அம்மாவா உங்கள எல்லாருக்கும் தெரியும். வீட்ல உங்க கணவர் எப்படி?

  பதில் : வீட்ல அவரு ஒரு என்சைக்ளோ பீடியான்னே சொல்லலாம். அவர் ஸ்போர்ட்ஸ் ல இருக்கறதால உடல் சார்ந்த விஷயங்கள் சம்பந்த பட்ட புக்ஸ் நிறைய படிப்பாரு. நிறைய புக்ஸ் படிப்பாரு. அதுலயும் மெடிகல் புக்ஸ் ல்லாம் நிறைய படிச்சி, ரெஃபர் பண்ணுவாரு. நாங்களே எதுனா மெடிசன்லயோ மாத்திரயோ அவர் கிட்ட காட்டி, என்ன ஏதுன்னு டவுட் கேட்டுப்போம். ஒரு மினி டாக்டர்ன்னே சொல்லலாம். கேஷ்வலா ல்லாம் இருக்க மாட்டாரு. எங்க வீட்டுக்கு ஒரு ஹெட்மாஸ்டர் மாதிரி. பசங்களே இன்னமும் பயப்படுவாங்க. வீட்ல எங்க கண்ல படாததெல்லாம் கரெக்ட்டா அவர் கண்ல படும் ரொம்ப ஹானஸ்ட்டானவர் என்று புன்னகைத்தார் ஸ்ரீரஞ்சனி .

   வீடு VS ஷூட்டிங்

  வீடு VS ஷூட்டிங்

  கேள்வி : நிறைய ஷூட்டிங் பிசி-ல இருக்கறதால ஃபேமிலிய எப்படி மேனேஜ் பன்றீங்க

  பதில் : என்னால முடிஞ்ச அளவு சின்ன சின்ன சந்தோஷங்கள், நேரங்கள் எல்லாமே என்னோட பேமிலி க்கு நான் குடுத்துட்டு இருக்கேன். இதோ இன்னைக்கு காலைல நான் கெளம்பறப்ப வீட்ல சாம்பிராணி ஏத்தி வச்சிட்டு வந்தேன். என் பசங்கள எழுப்பி சொல்லிட்டு, அவங்க கூட கொஞ்ச நேரம் இருந்துட்டு வரேன். என் வீட்ல ரெண்டு மூனு நாய் குட்டில்லாம் இருக்கு. அதெல்லாம் கவனிச்சிட்டு இருப்பேன். ஷூட் வந்தாலும் நெனப்பு ல்லாம் அங்க இருக்கும். நைட் வீட்டுக்கு போயும் பசங்கள, கணவர பார்த்துட்டு பேசிட்டு,என்னால எவ்வளவு சின்ன அன்புலேர்ந்து பெரிய அன்பு வரை குடுக்க முடியுமோ குடுத்துட்டு இருக்கேன். வீட்ல இருக்கப்போ நானு, என் கணவர், பசங்க, என்னோட நாய்களோட ஜாலியா இருப்பேன். அவ்ளோதான்

   வாழ்க்கை வாழ்வதற்கே

  வாழ்க்கை வாழ்வதற்கே

  கேள்வி : சமீபத்தில் நிறைவேறிய உங்கள் ஆசை என்ன?

  பதில் : வாழ்க்கை ரொம்ப சின்னதுங்க. அதுல எவ்ளோ சந்தோஷமா இருக்க முடியுமோ இருந்துட்டு போயிடனும். யாரயாச்சும் பாக்கனுமா போயி பார்த்துடுங்க. போன் பண்ணி பேசனும்ன்னு தோனுதா பேசிடுங்க. எதாச்சும் வாங்கனும்ன்னா வாங்கிடுங்க. ரொம்ப நாளா ஒரு ஷூ வாங்கனும்ன்னு ஆச. அப்பறம் எதுக்கு இவ்ளோ செலவு பண்ணி வாங்கிட்டுன்னு நெனச்சேன். அப்பறம் ஒரு நாள் வாங்கிட்டேன். அது அப்படியே இருக்கு இன்னும். இனிமேல்தான் போடனும். அதுபோல, சின்ன சின்ன விஷயம் ஆசப்பட்டாலும் அத செஞ்சிடனும். அவ்ளோதான். அதுமட்டும் இல்லாம சின்ன சின்ன பொருட்கள் ல்லாம் ரொம்பவே பிடிக்கும்.. சின்ன பட்டாம்பூச்சி, மேகம், காக்கா, இங்க இருக்க பொருள்-ன்னு எல்லாமே ரொம்பவே ரசிப்பேன்.

   எம்எல்ஏ வீட்டுக்குள்ள ஷூட்டிங்

  எம்எல்ஏ வீட்டுக்குள்ள ஷூட்டிங்

  கேள்வி : விநோதயசித்தம் படத்துல நீங்க ரசிச்ச இடம் எது?

  பதில் : அந்த பட ஷூட் நடந்தது ஒரு பீச் வீட்லதான். அந்த ஒரு வீட்லயே மொத்த படமும் முடிஞ்சிட்டு. இந்தப்பக்கம் நிலம். அந்தபக்கம் கால வச்சா கடல். ரெண்டு உலகத்துக்கு நடுவுல நிக்கறமோன்னு ஒரு ஃபீல் வரும். அடிக்கடி பீச்-க்கு ஓடிபோயிடுவேன். அவ்ளோ பிடிக்கும் பீச். அன்னைகு ஒரு நாள் ஷூட் மேக மூட்டம் இருட்டு. நான் மட்டும் பீச் ல போயி நல்லா ஆட்டம் போட்டு வந்தேன். கரெக்ட்டா சமுத்திர கனி கண்டுபிடிச்சிட்டாரு. அவ்ளோ என்ஜாய் பண்ணி நடிச்ச படம் மற்றும் அந்த இடம் இது. படம் பாருங்க நீங்களும் ரொம்ப என்ஜாய் பண்ணி பார்ப்பீங்க.

   120 படங்களுக்கு மேல்

  120 படங்களுக்கு மேல்

  கேள்வி : 120 படங்களுக்கு மேல் நடித்த உங்க அனுபவம் எப்படி இருக்கு?

  பதில் : நிஜமாவே சந்தோஷமா இருக்கு. விதவிதமான நடிகர்கள், இயக்குனர்கள் ல்லாம் சந்திச்சிருக்கேன். எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. சின்ன சின்ன அடியெடுத்து வச்சி இந்த இடத்துக்கு நான் வந்துருக்கேன். டைரக்டர் என்ன விரும்புறாங்களோ அந்த மாதிரி நான் நடிச்சி குடுப்பேன். எப்படி வேணும்-ன்னு கேட்டு பண்ணுவேன். ரொம்பவே ரசிச்சி என்ஜாய் பண்றதால இன்னைக்கு இந்த இடத்துக்கு வந்துருக்கேன்.

  கேள்வி : உங்க பசங்களுக்கு நீங்க சொல்ற விஷயம், அறிவுரை என்ன?

  பதில் : வீட்ல நான் ஒரு அம்மா, மருமகள், மனைவி இது என் ட்ராவல். என் வாழ்க்கை என் கையில். அதே போல என் பசங்களோட வாழ்க்கை அது. அவங்க பயணம். என்ன செய்யனும் செய்யக்கூடாதுன்னு அவங்க கவனமா இருக்கனும். அவங்க அவங்க கணக்குபடி, பிடிச்ச மாதிரி வாழட்டும் இருக்கட்டும்.

   அண்ணாத்த ரஜினியுடன் ஸ்ரீரஞ்சனி

  அண்ணாத்த ரஜினியுடன் ஸ்ரீரஞ்சனி

  கேள்வி : அண்ணாத்த படத்துலயும் முக்கியமான கேரக்டர் ல நடிச்சிருக்கீங்களாமே

  பதில் : ஆமா.. பிரகாஷ்ராஜ் காம்பினேஷன் ல நடிச்சிருக்கேன். மத்த பட கமிட்மெண்ட் ல அண்ணாத்த படத்துக்கான ஷெட்யூல் வந்துச்சு. போக முடியல. அப்பறம் பார்த்தா கொஞ்ச நாள் ல யு டேர்ன் போட்டு இன்னொரு நாள் ல ஷூட் போற வாய்ப்பு கிடைச்சது. ரொம்பவே சந்தோஷம். ஷூட்-ல ல்லாம் நமக்கு முன்னாடி ரஜினி அல்ரெடி வந்து உட்கார்ந்துருப்பாரு. அவ்ளோ சின்சியர், பஞ்ச்வாலிட்டி எல்லாமே. மொத்த டீம் எல்லாருமே சூப்பர். அதெல்லாம் இன்னொரு வீடியோல சொல்லனும் நிறைய விஷயங்கள் இருக்கு.

  என்று திறந்தமனதோடு எளிமை அம்மாவாக நிறைய விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார் நடிகை ஸ்ரீரஞ்சனி. மேலும் நம்மோடு பகிர்ந்து கொண்ட பல மகிழ்வான நிகழ்வுகளின் வீடியோவை பிலிம்பீட் தமிழ் யூட்யூபில் காணலாம்.

  English summary
  Lucky to act in Annaatthe Movie sriranjini Exclusive interview
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X