மாறி மாறி புகார்..யார் நல்லவர் யார் கெட்டவர்..விரைவில் தெரியும்..சினேகன் விளக்கம்!

சென்னை : பாடலாசிரியர் சினேகன் தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் செயல்படுவதாக நடிகையும், பாஜக பிரமுகருமான நடிகை ஜெயலட்சுமி புகார் அளித்துள்ளதற்கு பாடலாசிரியர் சினேகன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியினுடைய நிர்வாகியாகவும் உள்ளார். இவர் 2015-ல் இருந்து சினேகன் அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.

இவரது அறக்கட்டளையின் பெயரில் போலியாக சமூக வலைதளங்கள் தொடங்கி சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பண வசூல் செய்து வருவதாக சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

சினேகன் அறக்கட்டளை

சினேகன் அறக்கட்டளை

சினேகன் அறக்கட்டளை மூலம் பலருக்கு பல உதவிகளை செய்து வருவதாகவும், ஆனால் சமீப காலமாக இணைய தளத்தில் தனது பவுண்டேஷன் பெயரை தவறாக பயன்படுத்தி வருவதாக சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி மீது புகார் கூறியிருந்தார். மேலும், எனது பெயரை பயன்படுத்தி போலி தொண்டு நிறுவனம் நடத்தி வரும் ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சட்டரீதியான நடவடிக்கை

சட்டரீதியான நடவடிக்கை

இந்நிலையில்,தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த சின்னத்திரை நடிகையும் பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமி, கவிஞர் சினேகனின் என் மீது கூறிய குற்றச்சாட்டுக்கு 7 நாட்களுக்குள் ஆதாரத்தோடு விளக்கமளிக்க நோட்டீஸ் வழங்கியுள்ளதாகவும் அப்படி தவறும் பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

பெண் என்றும் பாராமல்

பெண் என்றும் பாராமல்

இதையடுத்து, சினேகன் மீது ஜெயலட்சுமி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பாடலாசிரியர் சினேகன் என்பவர் தன்னுடைய அற்க்கட்டளை பெயரில் நான் பண மோசடி செய்திருப்பதாகவும், என் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், பலரை மயக்கி சினேகன் அவர்களுக்கு செல்ல வேண்டிய பணத்தை மோசடி செய்து விட்டதாகவும் பொய்யான புகார் ஒன்றை அளித்துள்ளார். பெண் என்றும் பாராமல் பொது வெளியில் அவமரியாதையாகவும், அவதூறாகவும், மிரட்டும் தோணியில் பேசும் சினேகன் மீது இந்திய தண்டனை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று புகார் மனுவில் கூறியுள்ளார்.

நியாயத்திற்காக போராடுவேன்

நியாயத்திற்காக போராடுவேன்

இந்நிலையில் பிலிம்பி பீட் சேனலுக்கு பேட்டி அளித்த சினேகனிடம் ஜெயலட்சுமி அளித்துள்ள புகார் குறித்து விளக்கமாக பேசினார்.

கேள்வி : நீங்கள் அரசியல் ரீதியாக அணுகுவதாக ஜெயலட்சுமி உங்கள் மீது குற்றம்சாட்டுகிறார்?

பதில் : நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை என்றாலும், என் தரப்பு நியாயத்திற்காக போராடுவேன். நான் அரசியலை இதில் கொண்டுவரவில்லை, கொண்டுவரவும் மாட்டேன், அரசியல் உதவி இதற்கு தேவையில்லை. என் பக்கம் நியாயம் இருக்கிறது, சட்டரீதியாக அணுகி இருக்கிறேன். இதற்காக சட்டம் என்ன கேட்கிறதோ அதற்கான பதிலை நான் கொடுக்க தயாராக இருக்கிறேன் என்றார்.

யார் நல்லவர்.. யார் கெட்டவர்

யார் நல்லவர்.. யார் கெட்டவர்

கேள்வி : ஜெயலட்சுமி நீங்கள் தொடர்பு கொள்ளவில்லை, போனில் அழைத்ததாக சொல்வது பொய் என குற்றம்சாட்டுகிறாரே?

பதில் : நான் அவரை அழைத்து பேசியதற்கான ஆதாரங்களை சட்டத்தின் முன் கொடுத்துவிட்டேன். இல்லை என்றால் இப்போது ஆதாரங்களை உங்கள் முன் காட்டி இருப்பேன். இதனால்,அது பற்றி ஊடகத்தின் முன்பேச நான் தயாராக இல்லை என்றார். நான் எங்கையும் யாரையும் தரக்குறைவாக பேசுவது இல்லை. அது போல காஃபி சாப்பிடலாம் என்று நான் கூறியதை அவர்கள் வேறுவிதமாக பேசுகிறார்கள். இதன் மூலமாக அவர் ஆதாயம் தேடப்பார்க்கிறார். விரையில் யார் நல்லவர் யார் கெட்டவர் என்பது வெளி உலகத்திற்கு தெரியத்தான் போகிறோம் என்றார்.

நேரில் விவாதிக்க தயார்

நேரில் விவாதிக்க தயார்

கேள்வி : கோர்ட் கேஸ் என்று போகாமல் இதை முடிக்க முடியாதா?

பதில் : ஜெயலட்சுமி தனது அறக்கட்டளையின் பெயரை சிநேகம் என்று வைத்து இருக்கிறார். நான் சினேகன் பவுண்டேஷன் என்று வைத்து இருக்கிறேன். அவர் பவுண்டேஷன் என்பதை மாற்றிவிட்டால் போதும், இப்போது கூட அவர்கள் நேரில் வந்தால் இந்த பிரச்சனையை பேசி தீர்த்து விடலாம். ஆனால்,எது நியாயமே அதை பேச வேண்டும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X