எந்த புத்தனும் என்னை குறை சொல்லவில்லை… சினேகன் பளீர் பதில் !

சென்னை : தமிழ் திரையுலகில் இதுவரை 700க்கும் மேற்பட்ட படங்களில் 2 ஆயிரத்து 500க்கும் அதிகமான பாடல்களை எழுதியவர் கவிஞர் சினேகன்.

நடிப்பின் மீதான ஆர்வம் காரணமாக உயர்திரு 420, ராஜராஜ சோழனின் போர்வாள், பூமி வீரன் என சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தன் மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான சினேகன் பிலிமி பீட்டுக்கு அளித்துள்ள பேட்டியில் சுவாரசியமான பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.

எதிர்பாராததை எதிர்பாருங்கள்

எதிர்பாராததை எதிர்பாருங்கள்

பிக் பாஸ் சீசன் 5ல் யார் வெற்றி பெருவார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த சினேகன், இதை விஜய் டிவிதான் முடிவு செய்ய வேண்டும், இதில் யார் வெற்றி பெருவார் என்பது எனக்கு தெரிவில்லை. தலைவர் சொல்வது போல எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்றார். நாம் ஒருவர் மீது நம்பிக்கை வைத்து இருப்போம் சேனலும் விளம்பர தாரரும் ஒருவர் மீது நம்பிக்கை வைத்து இருப்பார்கள். கடைசி நேரத்தில் மக்கள் வைத்த நம்பிக்கைக்கூட பொய்யாகி போய்விடும் என்றார்.

குதிரைப்பந்தயம்

என்னை பொருத்தவரை இதை ஒரு விளையாட்டாக பாருங்கள். குதிரைப்பந்தயம் போல இவங்க வரவேண்டும், அவங்க வரவேண்டும் என்று நினைக்காமல் மகிழ்ச்சியாக பாருங்கள். வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமையில் ஒவ்வொருவரும் அன்பாக பேசிக்கொள்வார்கள் . திங்கட்கிழமை வந்தால் மீண்டும் சண்டை. இதனால்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வாரங்கள் நீண்டு கொண்டே போகிறது. பிக் பாஸ் வீட்டில் இருக்க இருக்க வருமானம் கூடுகிறது என்றார்.

கட்டிப்புடி

கட்டிப்புடி

சினேகனின் கட்டிப்புடி வைத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சினேகன், என்னையும் என் அன்பையும் தேடி வருபவர்களுக்கு இது தவறாக தோன்றவில்லை. வேடிக்கை பார்ப்பவர்களுக்கு இது தவறாக தெரிந்தால் அதற்கு நான் பொருப்பாக முடியாது. உங்கள் சகோதரியை , உங்கள் தாயை தொடும் போது அன்பு மிகுதியாக இருக்கிறதா... காமம் மிகுதியாக இருக்கிறதா நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்றார். எந்த புத்தனும் என்னை குறை சொல்லவில்லை, குறை சொல்பவர்கள் உங்கள் வாழ்க்கையை சற்று திரும்பி பாருங்கள் நீங்கள் சரியா இருக்கிறீர்களா என்று ஒரே போட போட்டார் சினேகன்.

ஆனந்தம் விளையாடும் வீடு

ஆனந்தம் விளையாடும் வீடு

தொடர்ந்து பேசிய அவர் ஆனந்தம் விளையாடு குடும்ப உறவுகள் பற்றிய கதை மேலும் உறவை நேசிப்பவர்களுக்கு இத்திரைப்படம் ஒரு வரலாறாக இருக்கு எனவே இப்படத்தை நிச்சயம் குடும்பத்துடன் திரையரங்கு சென்று பாருங்கள் என்றார் சினேகன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X