தமிழர்களின் உணவின் சிறப்பை.. உணவே மருந்து பாடல் சொல்லும் .. பாடலாசிரியர் விவேக்!

Recommended Video

Server Sundharam Audio Launch | Santhanam | Santhosh Narayanan | Filmibeat Tamil

சென்னை : தமிழர்களின் உணவு முறை, உணவு பழக்கம் பற்றியது தான் சர்வர் சுந்தரம் படத்தில் வரும் உணவே மருந்து பாடல் என்று பாடலாசிரியர் விவேக் கூறினார்.

தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய பாடலாசிரியர் என்றால் விவேக்கை கூறலாம். சிறந்த வரிகளை இதுவரையில் தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு தந்து இருக்கிறார். இவர் தற்போது சந்தானம் நடிப்பில் வெளியாக இருக்கும் சர்வர் சுந்தரம் படத்தின் அனைத்து பாடல்களுக்கும் பாடல் வரிகள் எழுதி இருக்கிறார்.

Lyricist vivek interview

இந்த படம் வரும் ஜனவரி 31 வெளியாகிறது. கிட்டத்தட்ட இரண்டு வருட போராட்டத்திற்கு பிறகு இந்த படம் வெளியாகிறது. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டங்கள் ரசிகர்களை நன்கு கவர்ந்தவை அதனாலே இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது .

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் முக்கியமாக இந்த படத்தில் உணவே மருந்து என்று ஒரு பாடல் இருக்கிறது, பாடலின் வரிகளை விவேக் இயற்றி இருக்கிறார். அந்த பாடல் தமிழர்களின் உணவு பழக்கத்தில் உள்ள நன்மைகளை எடுத்து கூறுவது தான் பாடலின் சிறப்பம்சம். நாம் உணவு எடுத்து கொள்ளும் முறை பற்றிய சிறப்பை பற்றியும் இந்த பாடல் பேசியிருப்பது மற்றொரு சிறப்பு .

இந்த படத்தின் மற்ற அனைத்து பாடல்களையும் விவேக்கே இயற்றி இருக்கிறார். அவர் பல நாட்கள் சந்தோஷ் நாராயணனுடன் இருந்து தான் படத்திற்கு பாடல்கள் இயற்றி இருக்கிறார். அதனால் படத்தின் இசை வெளியீட்டின் போது சந்தோஷுடன் இருந்த அனைத்து நாட்களுக்கும் சேர்த்து உணவளித்த சந்தோஷ் மனைவிக்கு நன்றி தெரிவித்து கொண்டார் விவேக்.

இந்த படத்தின் மற்றொரு சிறப்பு படத்தில் நாகேஷ் பேரனான பிஜேஷ் சர்வர் சுந்தரம் படத்தின் மூலம் அறிமுகமாகிறார். நாகேஷ் என்றால் இன்றும் பலருக்கு ஞாபகம் வருவது அவரின் சர்வர் சுந்தரம் படம் தான். அந்த படத்தின் தலைப்பு வைக்கப்பட்ட இந்த படத்தில் பிஜேஷ் அறிமுகமாகிறார். மேலும் இந்த படத்தில் நாகேஷ் பேரனுடன் பணியாற்றியது எனக்கு பெருமையாக இருக்கிறது என்று விவேக் கூறினார்.

மேலும் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சோனியா அகர்வால் நான் நாகேஷ் சாருடன் காதல் கொண்டேன் படத்தில் பணியாற்றியுள்ளேன் அதற்கு பின் தற்போது நாகேஷ் பேரனுடனும் பணியாற்றியது ஒரே மாதிரியான இயல்பை கொடுத்தது என்று கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X