மாதவனின் மாறா படத்தில் என்னுடைய ரோல் இதுதான்.. நெடுஞ்சாலை, அதே கண்கள் நாயகி ஷிவதா பேட்டி!
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 8ம் தேதி ரிலீசாகவுள்ள மாதவனின் மாறா திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை ஷிவதாவின் பேட்டி வெளியாகி உள்ளது.
கேரளாவை சேர்ந்த இவர், 2008ம் ஆண்டு நின்னகாயி எனும் ஆல்பம் பாடல் மூலம் அறிமுகமானார்.
தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

ஆரி அர்ஜுனன் ஹீரோயின்
தொடர்ந்து சில மலையாள திரைப்படங்களில் நடித்த ஷிவதா, 2014ம் ஆண்டு நடிகர் ஆரி அர்ஜுனனின் நெடுஞ்சாலை படத்தில் நாயகியாக தமிழில் அறிமுகமானார். ஜீரோ, அதே கண்கள், இரவாக்காலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஷிவதா, தற்போது மாதவனின் மாறா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மாறா படத்தில் என்ன ரோல்
இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக விக்ரம் வேதா படத்திற்கு பிறகு நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள நிலையில், டாக்டர் கதாபாத்திரத்தில் ஷிவதா நடித்துள்ளதாக இந்த பேட்டியில் ரிவீல் செய்துள்ளார். சமீபத்தில் வெளியான மாறா டிரைலரிலும் ஷிவதா மிகவும் அழகாக இருக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் ரசிகர்களுக்காக மாற்றம்
மலையாள திரைப்படமான சார்லி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக்கான இந்த படம் அப்படியே காப்பி செய்யப்படாமல், தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும், திரையில் அந்த படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும் என்றார்.
ஊட்டி மேன்சன்
கேரளாவின் கொச்சி மற்றும் ஊட்டியில் ஏகப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. ஊட்டியில் உள்ள ஒரு மேன்சனில் நடைபெறும் தன்னுடைய போர்ஷன்கள் எல்லாம் அவ்வளவு அழகாக இருக்கும் என நடிகை ஷிவதா பேசும் பேட்டியை மிஸ் பண்ணாமல் பார்த்து ரசியுங்கள். வரும் ஜனவரி 8ம் தேதி அமேசான் பிரைமில் மாறா திரைப்படம் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











