இரவின் நிழல் படத்துல வந்த அந்த சீன்.. மோசமா பேசுனாங்க.. ஒரு மாசம் வெளியில வரல.. பிரிகிடா பேட்டி!
சென்னை: 'ஆஹா கல்யாணம்' என்ற வெப் தொடரில் பவி டீச்சராக நடித்து பிரபலமானவர் தான் நடிகை பிரிகிடா. அந்த படத்தை தொடர்ந்து பார்த்திபன் இயக்கி நடித்த 'இரவின் நிழல்' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். தற்போது விஜய் ஆண்டனியின் 'மார்கன்' படத்தில் நடித்துள்ளார். Rednool யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள பிரிகிடா பல விஷயம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.
நான் அந்த நடிகருடன் டேட்டிங் செல்கிறேன், இந்த நடிகருடன் டேட்டிங் செல்கிறேன் என பல விதமான செய்திகள் வருகின்றன. இதுபோன்ற வதந்திகளால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி ஒரு மாதம் வீட்டை விட்டு வெளியே வரவில்லை இருந்தேன். அதன் பிறகு தான் என்னுடைய அப்பா எனக்கு தைரியத்தை கொடுத்தார். இப்போது கூட எனக்கு திருமணமாகிவிட்டது என்றார்கள். அதே போல, நடிகர் நகுல் அவர்கள் என்னிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டார். நான் முடியாது என்பதால், படத்தில் இருந்து தூக்கிவிட்டார் என்று ஒரு வதந்தி பரவியது. அதுபோல் எதுவுமே நடக்கவில்லை நானும், நகுல் அவர்களும் இணைந்து ஒரு படத்தில் கமிட்டாகி இருந்தோம். ஆனால், சில காரணங்களால் அந்த படத்தில் நான் நடிக்கவில்லை. இதற்காக பலரும் பல விஷயத்தை பேசினார்கள். அப்படி வரும் வதந்திக்கு பதில் அளிக்காமல் அமைதியாக இருந்தாலே போதும்.

நடிகை பிரிகிடா பேட்டி: நான் இரவின் நிழல் படத்தில் நடித்த போது, நிர்வாணமாக நடித்து விட்டேன் என்று பலரும் இணையத்தில் மோசமான கருத்துக்களை பகிர்ந்தார்கள். ஆனால், அது அப்படி இல்லை, அது சினிமாவை சேர்ந்த பலருக்கும் நன்றாக தெரியும். அந்த காட்சிகள் நான் நடித்த போது, மெல்லியதாக ஒரு உடை அணிந்திருந்தேன், காலும், தலையும் மட்டும் தான் தெரியும். ஆனால், அது பலருக்கும் தெரியாமல் நான் நிர்வாணமாக நடித்து விட்டதாக என்னை மோசமான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார்கள். அதே படத்தில் நடித்த நடிகை ரேகா நாயர், அரை நிர்வாணமாக நடித்து இருந்ததால், நானும் நிர்வாணமாக நடித்து விட்டேன் என பலரும் என்னை திட்டு தீர்த்தார்கள் இருந்தாலும், அந்த படம்தான் எனக்கு ஒரு நல்ல பெயரை பெற்று கொடுத்து வாழ்க்கை கொடுத்த படம். இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை எனக்கு கொடுத்த பார்த்திபன் சாருக்கு ரொம்ப நன்றி.
பாராட்டினார்கள்: விஜய் ஆண்டனி சாருடன் மார்கன் படத்தில் நடித்து இருக்கிறோன் படத்தை பலர் பாராட்டி வருகிறார்கள்.அதில் நான் போலீசாக நடித்து இருக்கிறேன், குறுகிய காலத்திலேயே போலீஸ் ரோலில் நடிப்பது என்பது யாருக்கும் கிடைக்காது. அதிர்ஷ்ட வசமாக அந்த ரோல் எனக்கு கிடைத்தது. என்னால் அந்த ரோலில் பண்ண முடியுமா என யோசித்து, நடிகை அனுஷ்கா அவர்களை மனதில் வைத்துக்கொண்டு நடித்தேன். நான் நடித்தது ஒரு சில படங்களாக இருந்தாலும், அதில், புது புது ரோலில் நடிக்கும் போது தான், என்னால் என்ன முடியும் என்பது எனக்கு தெரியவரும் என்பதால், போலீஸ் ரோலில் துணித்து நடித்தேன். படம் பார்த்தவர்கள் பாராட்டினார்கள் என்றார்.


Click it and Unblock the Notifications











