மாயி படத்துக்கப்புறம் மீண்டும் சினிமாவில் நடிக்கிறேன்.. ’வா மா மின்னல்’ தீபா ஓப்பன் டாக்!
சென்னை: சரத்குமாரின் மாயி படத்தில் மொக்கைச்சாமியாக நடித்த வடிவேலுவுக்கு பெண் பார்க்கும் படலம் காமெடி மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் இன்றளவும் ரசித்து பார்க்கப்படுகிறது.
Recommended Video
"வா மா மின்னல்" என அழைத்ததும் மின்னல் வேகத்தில் கிராஸ் செய்து செல்லும் அந்த காட்சியில் நடித்த தீபா பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த திரைப்பட விழாவில் அவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

என்ன படம்
இயக்குநர் கதிர்வேல் இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி, யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ராஜவம்சம் திரைப்படத்தில் தான் "வா மா மின்னல்" தீபா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராஜவம்சம் படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் தனது திரைப்பயணம் குறித்து பேசியுள்ளார்.

மாயி படத்தில்
இயக்குநர் சூர்ய பிரகாஷ் இயக்கத்தில் கடந்த 2000ம் ஆண்டு வெளியான சரத்குமாரின் மாயி படத்தில் இடம்பெற்ற அந்த சூப்பர் ஹிட் காமெடி இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரைட்டான ஒன்று தான். மாயி அண்ணன் வந்திருக்காக.. மாப்பிள்ளை மொக்கைச்சாமி வந்திருக்காக என ஆரம்பிக்கும் அந்த காமெடியில் "வா மா மின்னல்" என்றதும் மின்னல் வேகத்தில் வந்து செல்வார் நடிகை தீபா.

வாய்ப்பு வரல
அந்த காமெடி காட்சியில் கருப்பு மேக்கப் போட்டு கண்களை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு நடித்திருந்த காரணத்தால் தன்னை யாருமே அடுத்த அடுத்த படங்களுக்கு புக் செய்யவில்லை என்றும் அதன் காரணமாகவே வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் மேடையில் வெளிப்படையாக பேசி உள்ளார் நடிகை தீபா.

இயக்குநருக்கு நன்றி
அதன் பிறகு சின்னத்திரையில் கிடைத்த வாய்ப்புகளில் நடித்து வந்த தனக்கு ராஜவம்சம் திரைப்படம் மூலம் மீண்டும் சினிமாவில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் இயக்குநர் கதிர் சார் அவருக்கு ரொம்ப நன்றி நிச்சயம் இந்த படம் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை தரும் வெற்றியடையும் என பாராட்டி பேசியுள்ளார்.
சிம்புவுடன் மோதும் சசிகுமார்
சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் எம்ஜிஆர் மகன் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. இந்நிலையில், அடுத்ததாக வரும் நவம்பர் 26ம் தேதி திரையரங்குகளில் ராஜவம்சம் வெளியாகிறது. சிம்புவின் மாநாடு திரைப்படம் 25ம் தேதி வெளியாகும் நிலையில் இரண்டு படங்களுக்கு இடையே போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. யார் படம் வந்தாலும், கொரோனா ஊசி போட்டாத்தான் தியேட்டருக்குள் அனுமதியாம்.


Click it and Unblock the Notifications











