Madan Babu: குடல் கேன்சர்.. ஒரு வருடமா பட்ட கஷ்டம்.. மதன் பாபு மகள் கண்ணீர் பேட்டி!

சென்னை: நீங்கள் கேட்டவை என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மதன் பாபு. அந்த படத்தை தொடர்ந்து விஜய்யின் பூவே உனக்காக, ப்ரண்ட்ஸ், கண்ணுக்குள் நிலவு, யூத், நடிகர் அஜித்துடன் வில்லன், கமல்ஹாசனின் பம்மல் கே சம்மந்தம், வசூல் ராஜா எம்பிபிஎஸ் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். வித்தியாசமான சிரிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்த மதன் பாபு, புற்று நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த வாரம் உயிரிழந்தார்.

தந்தையில் மரணத்தில் இருந்து மீள முடியாத துயரத்தில் இருக்கும் மதன் பாபுவின் மகள் ஜனனி, Galatta Pink சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், அப்பாவிற்கு புற்றுநோய் இருப்பது எதர்ச்சியாக எடுத்த ஒரு டெஸ்டில் தான் தெரியவந்தது. விஜயா மருத்துவமனையில் ஒரு நிகழ்ச்சிக்காக அப்பா சென்று இருந்தார். அங்கு எடுக்கப்பட்ட டெஸ்டில் தான் புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறி இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து 'பயாப்சி' செய்தோம். அப்போதுதான் புற்றுநோய் இருப்பது தெரிந்து உடைந்து போனோம்.

Madan Babu Daughter Janani
Photo Credit:

நகைச்சுவை நடிகர் மதன்பாபு: அவருக்கு குடல் புற்று நோய் இருப்பது தெரிந்ததும் அதற்கான மருந்துகளை அப்பா சாப்பிட ஆரம்பித்தார். எல்லாம் சரியாகிவிடும் என பாஸிட்டிவாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஆனால், புற்றுநோய் நான்காவது கட்டத்திற்கு சென்று விட்டது. அந்த கட்டத்திற்கு சென்றுவிட்டதால், அது லிவருக்கும் பரவிவிட்டது. குடத் புற்றுநோய் எப்படி வந்தது. அதற்கான அறிகுறி என்ன என்று எதுவுமே தெரியவில்லை. அது வந்த பிறகு தான் இது எப்படி வந்தது இதற்கான அறிகுறி என்ன என்பது தெரியவில்லை. அது வந்த பின்பு தான் இதனால் தான், அந்த பிரச்சனை எல்லாம் வந்துதா என்றே தெரியும்.

நிஜத்தில் ஹீரோ: அப்பா, ஆபத்தான கட்டத்தில் தான் இரண்டு மாதங்களாக இருந்தார். இதனால், எப்போதுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கும் என்று தெரியும் என்பதால், எங்களால், அந்த இழப்பை எங்களால் தாங்கிக் கொள்ள முடிந்தது. இருந்தாலும் அப்பா இல்லாமல் அம்மா எப்படி காலத்தை கடக்க போகிறார் என்றே தெரியவில்லை. அவர்கள் இருவரும் அவ்வளவு அட்டாச்மென்டாக இருந்தார்கள். இப்பொழுது கூட அப்பா எங்களுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று தான் என் மனது சொல்கிறது என்றார். அவர் திரைப்படத்தில் வேண்டுமானால், நகைச்சுவை நடிகராக இருக்கலாம் ஆனால், நிஜத்தில் அவர் ஒரு ஹீரோ போலத்தான் இருந்தார்.

பலருக்கும் தெரியாது: அப்பாவிற்கு சினிமா வட்டாரங்கள் மட்டுமல்லாமல், அப்பா பாக்ஸிங் இருந்ததால் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால், நான்கு மாதத்திற்கு முன்பு தான் இந்த வீட்டிற்கு வந்தோம். இதற்கு முன் நாங்கள் ஒரு அப்பார்ட்மெண்டில் இருந்தோம். அதில் எங்களால் மேனேஜ்மெண்ட் செய்ய முடியவில்லை என்பதால் இந்த வீட்டிற்கு வந்தோம். இந்த வீட்டிற்கு வந்து நான்கு மாதங்கள் தான் ஆகிறது. இதனால் பலருக்கு வீடு தெரியவில்லை. இந்த விஷயம் கேள்விப்பட்ட பிறகு பலரும் எங்களை தொடர்பு கொண்டார்கள். ஆனால், அந்த சூழ்நிலையில் எங்களால் யாரையும் தொடர்பு கொண்டு பேச முடியாமல் போய்விட்டது. இதுதான் பலர் அப்பாவின் இறுதி சடங்கில் பலர் கலந்து கொள்ள முடியாமல் போனது என மதன் பாபுவின் மகள் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X