வில்லனா நடிக்க ஆசை.. சிரிப்பு மன்னன் மதன் பாப் லாக்டவுன் பேட்டி!
சென்னை: தனது தனித்துவமான சிரிப்பால் 90ஸ் கிட்ஸ் முதல் 2K கிட்ஸ் வரை சிரிக்க வைத்து வரும் சிரிப்பு மன்னன் மதன் பாப் அளித்த சிறப்பு பேட்டி வெளியாகி இருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் போல சந்திக்கும் நபர்களிடத்தில் குட்டிக் கதை சொல்லி அசத்தும் வழக்கத்தை கொண்டவர்.
மலையாள சினிமாவில் பி.யூ. சின்னப்பாகவாக நடித்துள்ள மதன் பாபு, கிட்டத்தட்ட 160க்கும் மேற்பட்ட படங்களை பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு திடீரென டிரெண்டான கான்ட்ராக்டர் நேசமணி கதாபாத்திரம் இடம்பெற்ற விஜய்யின் பிரெண்ட்ஸ் படத்தில் மேனேஜர் கதாபாத்திரத்தில் நகைச்சுவையில் மிரட்டியிருப்பார் மதன் பாப்.
அதுகுறித்த கேள்வியை கேட்ட போது, நேசமணிக்கு ஏன் ஹெல்மெட் கொடுக்கவில்லை என வக்கீல் நோட்டீஸே தனக்கு விளையாட்டாக வந்தது என்றார்.
ஆழமான ஜோக்குக்கு ஏற்றவாறே தான் தொடர்ந்து சிரிப்பதாகவும் இந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
எத்தனையோ கதாபாத்திரங்களில் எத்தனையோ டாப் நடிகர்களுடன் நடித்துள்ள மதன் பாப்-க்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், மதன் பாப்பின் சிரிப்பு பேட்டியை கண்டு ரசிக்க வீடியோ லிங்க்கை க்ளிக் செய்யுங்க!


Click it and Unblock the Notifications











