நான் ஒரு இசைக்கலைஞன்.. என்னை நடிகராக மாற்றியது பாலச்சந்தர்.. மதன்பாபு உருக்கம்!
சென்னை : இசைக்கலைஞராக இருந்த என்னை நடிகராக மாற்றியவர் இயக்குநர் கே. பாலச்சந்தர் தான் என்று மதன்பாபு கூறியுள்ளார்.
நடிகர் மதன்பாபுவை நாம் அதிக படியான காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பார்த்திருப்போம், இவரின் நகைச்சுவையும் சிரிப்பும் அனைவருக்கும் பிடித்தமானது. எக்கசக்கமான காமெடி பாத்திரங்களில் நடித்து அசத்தி இருக்கிறார்.

தற்போதைய சினிமா ரசிகர்கள் பலருக்கு தெரியாத ஒரு விசயம் மதன்பாபு ஒரு இசைகலைஞர் என்பது. நடிகர் மதன்பாபுவின் உண்மையான பெயர் கிருஷ்ணமூர்த்தி. இவர் நடிப்பதற்கு முன் இசைக்கலைஞராக பயணித்து வந்த போது இசை ட்ரூப் வைத்திருந்தாகவும் அதில் தன் தம்பியுடன் பணியாற்றும் போது மதன் & பாபு ட்ரூப் என்ற பெயர் வைத்திருந்ததாகவும். பின் அதையே பலரும் கூப்பிட இவருக்கு பெயர் மதன்பாபு என்றானது .
இவர் ஆரம்ப காலத்தில் இசை ட்ரூப் வைத்திருந்தபோது இவருடன் இளையராஜா கங்கை அமரன் எல்லாம் பணியாற்றியிருக்கிறார்கள். மேலும் ஏ.ஆர்.ரகுமான் இவர்கள் குழுவில் கீபோர்ட் வாசித்து இருக்கிறார். இதை ஒரு படத்தின் இசை வெளியீட்டில் ஏ.ஆர்.ரகுமானே கூறியிருந்தார்.

80களின் இறுதியில் சினிமா வளர்ச்சியும் சினிமா வழியான விளம்பர வளர்ச்சியும் உச்சத்தில் இருந்த போது விளம்பரங்களுக்கு பின்னணி இசை அமைக்க பாம்பே செல்ல வேண்டிய நிலையில், தென்னிந்திய சினிமாக்களுக்கு பல விளம்பரங்களுக்கு இசை அமைத்தது மதன்பாபு தான் . விளம்பரங்களுக்கு மட்டுமல்ல நாடகங்கள் ,மேடை நாடகங்கள், கச்சேரிகள் மற்றும் மேஜிக் சோக்கள் என பலவற்றில் மதன் பாபுவின் பங்கு இருக்கிறது .

மேலும் பல படங்களில் இசைக்கலைஞர்கள் பின்னணியில் நின்று இசை கருவிகளை வைத்து வாசிப்பது போன்ற காட்சிகள் இருந்தால் பல படங்களில் மதன்பாபுவின் குழு தான் இருக்கும். அந்த அளவுக்கு மிகவும் பிரபலமான இசைக்குழுவை நடத்தி வந்தார் மதன்பாபு .

மதன்பாபுவை இயக்குனர் பாலச்சந்தர் தான் தனது படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினார். பின்பு கமலின் தேவர் மகன் படத்தில் நடித்திருந்தார். அதன் பின் படி படியாக மிக பெரிய காமெடி நட்சத்திரமாக உயர்ந்தார் மதன்பாபு.
மேலும் சமீபத்தில் தனது நண்பரான மனோபாலாவுடன் ஒரு நேர்காணலில் தனது அப்பா நடிகர் காக்கா ஶ்ரீனிவாசன் என்று தவறாக விக்கிபீடியாவில் இருப்பதாகவும் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று அந்த தகவலை நகைச்சுவையாக பகிர்ந்து இருந்தார் .
சினிமா சிலரை தேடி வந்து வாழ்வு தரும் அதே போல் தான் தன்னையும் இந்த சினிமா மிக பெரிய அளவில் வாழ வைத்திருப்பதாகவும் கூறினார். மேலும் அந்த நேர்காணலில் என்னை வாழ வைத்த மக்களுக்கு நன்றி என கூறியிருந்தார் மதன்பாபு.


Click it and Unblock the Notifications











