பாகுபலி காளக்கேயர்களின் கிளிக்கி மொழியை நீங்களும் பேசலாம்.. சொல்லித்தர வருகிறார் மதன் கார்கி!

சென்னை: எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம், இந்திய சினிமாவின் மார்க்கெட்டை உலக அரங்குக்கு உயர்த்தியது.

Recommended Video

MADHAN KARKY INTERVIEW PROMO | V-CONNECT | FILMIBEAT TAMIL

ஹாலிவுட் படங்களான ஸ்டார் வார்ஸ், ஸ்டார் டிரெக், அவதார் உள்ளிட்ட படங்களுக்கு புதிதாக மொழிகள் உருவாக்கப்பட்டு படமாக்கப்பட்டது போல, நாமும் ஒரு புது மொழியை உருவாக்க வேண்டும் என்ற ராஜமெளலியின் கனவை, மதன் கார்க்கி நிறைவேற்றியுள்ளார்.

Madhan karky introduced kiliki language promo video

பாகுபலி படத்தில் காளக்கேயர்கள் எனும் அரக்கர்களை போன்று தோற்றம் கொண்ட மனிதர்கள் வித்தியாசமான மொழியை பேசி இருப்பார்கள். ஆரம்பத்தில் பார்த்த ரசிகர்களுக்கு, இது என்னடா கக்கடா, புக்கடா என கத்துகின்றனர் என்றே தோன்றியது.

ஆனால், இது ஒரு புது மொழி என்றும், அவதார் படத்தில் நாவி மொழி உருவாக்கியது போல, மதன் கார்க்கி இந்த படத்திற்காக கிளிக்கி எனும் புதிய மொழியை உருவாக்கி உள்ளார் என்பதும் தெரியவந்த பிறகு, ஆச்சர்யம் தொற்றிக் கொண்டது.

இந்த மொழிக்கு இலக்கணம் இருக்கிறதா? அனைவராலும் பேச முடியுமா? போன்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கும் விதமாக, சமீபத்தில், கிளிக்கி மொழியின் முழு வடிவத்தையும், கடந்த இரு ஆண்டுகளாக கடின உழைப்பைக் கொட்டி மதன் கார்க்கி உருவாக்கி இருந்தது முழுமை அடைந்தது.

கிளிக்கி மொழி குறித்தும், அதன் இலக்கணம் குறித்தும், அதை எப்படி ஈஸியா பேசலாம் என்பது குறித்தும், மதன் கார்க்கியே நம்ம பிலிமி பீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்துள்ளார்.

அதன் புரொமோ வீடியோ தற்போது, வெளியாகி உள்ளது. விரைவில் முழு வீடியோவையும் கண்டு ரசிக்கலாம்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X