திரும்ப நடிக்க ஆசை வருது: மாதவி நான் சினிமாவில் நடித்த 17 வருட காலமும் கோல்டன் பீரியட் என ரொம்பகாலத்திற்குப் பிறகு வாய் திறந்துள்ளார் வஞ்சிர மீன் கண்ணழகி மாதவி. மாதவியை மறக்க முடியுமா? தமிழிலும்,மலையாளத்திலும், தெலுங்கிலும் ஒருகாலத்தில் சக்கை போடு போட்டவர் மாதவி. ரஜினி, கமல், மம்முட்டி, மோகன்லால்,சிரஞ்சீவி உள்ளிட்ட தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களுடன் ஒரே நேரத்தில் மாறி மாறிநடித்து அசத்திய அசாத்தியமான நடிகை.ரொம்ப காலமாக மாதவியைப் பற்றிய செய்திகளே இல்லாமல் இருந்தது. அவர்எங்கே இருக்கிறார், என்ன பண்ணுகிறார் என்று சினிமா ரசிகர்களிடையே ஆர்வம்இருந்து வந்தது.இந் நிலையில்தான் திடுதிப்பென சில நாட்களுக்கு முன்புசென்னைக்கு வந்துஇறங்கினார் மாதவி. நடிப்பதற்காக வரவில்லை. மாறாக தனது கணவர்,குழந்தைகளுடன் (3 பொண்ணுங்களாம் மாதவிக்கு!) கோவில், குளமாகசுற்றுவதற்காக வந்திருந்தார்.நிறைய மாறிப் போயிருக்கிறார் மாதவி. உப்பிய உடல், இன்னும் பெரிதாகிப் போனகண்கள், தங்க நிற டை அடித்து அழகாக பாப் செய்யப்பட்டிருந்த முடி எனஅடையாளமே காண முடியாத அளவுக்கு மாறிப் போயுள்ளார் மாதவி. ஆனால் முகம்மட்டும் அப்படியே.எப்படி இருக்கீங்க, என்ன பண்றீங்க என்று குந்த வைத்து குசலம் விசாரித்தால்,சந்தோஷமா அமெரிக்காவில் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறேன். எனது கணவர்ரால்ப் ஜெய்தீப சர்மா. இவர் ஒரு வித்தியாசமான மனிதர். அப்பா பஞ்சாபி. அம்மாஜெர்மனி. அமெரிக்காவிலேயே செட்டிலாகி விட்டவர்.1996ம் வருடம் நான் விடுமுறையில் அமெரிக்கா சென்றிருந்த போது, சர்மாவைச்சந்தித்தேன். ஒரே வாரத்தில், பெற்றோர்கள் சம்மத்துடன் திருமணம் செய்துகொண்டேன். கல்யாணம்னா ஒரு கல்யாணம் இல்லை. நாலு தடவை கல்யாணம்செஞ்சேன.அமெரிக்காவில் பதிவு திருமணம், பிறகு அங்குள்ள கோவிலில் முறைப்படிதிருமணம், எங்க அப்பா, அம்மா விருப்பப்படி, திருப்பதியில் ஒரு முறை திருமணம்.பிறகு என் கணவர் குடும்பத்தார் விருப்பப்படி ஹிமாயன் இன்ஸ்டிடியூட்டில் ஒருறைதிருமணம் என நான்கு முறை சர்மாவுக்கு கழுத்தை நீட்டினேன்.என் கணவர் நியூ ஜெர்சியில் சொந்தமாக பார்மசுடிகல் நிறுவனம் நடத்தி வருகிறார். 2இடங்களில் கிளைகள் உள்ளன. கணவர் தான் சேர்மன். நான் வைஸ் சேர்மன்.எங்களுக்கு டிபனி கவ்ரிகா (8), பிரிசில்லா அர்பனா (4), எவெலின் திவ்யா (1) ஆகிய3 மகள்கள் என்று சுய சரிதையை சொல்லி நிறுத்தினார் மாதவி.1979ல் தூர்பு படமரா என்ற தெலுங்கு படத்தின் மூலம் தான் நான் சினிமாவுக்குவந்தேன். தமிழில் முதல் படம் ராஜபார்வை. கமலின் நடிப்பும் இளையராஜாவின்இசையுமாக அந்தப் படமே ஒரு தேவ சுகம்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளம், ஒரியா என 7மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தேன். சிவாஜி, ரஜினி, கமல், பிரேம் நசீர், என்டி.ராமராவ், நாகேஸ்வரராவ், சிரஞ்சீவி,ராஜ்குமார், அமிதாப் பச்சன் என்று பெரிய பெரிய கதாநாயகர்களுடன் இணைந்துநடிக்கிற பாக்கியம் கிடைத்தது.17 வருடங்கள் கதாநாயகியாக வாழ்ந்தேன். பெயர் புகழ், பணம் மூன்றும் போதும்போதும் என்கிற அளவுக்கு கிடைத்தது.அந்த திருப்தியுடன் சினிமாவை விட்டு விலகி திருமணம் செய்து கொண்டேன்.திருமணமாகி 10 வருடங்களுக்கு பின், நாங்கள் இந்தியா வந்திருக்கிறோம். எனக்கும்,என் கணவருக்கும் ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகம். அதனால் இங்கே வந்ததும்,திருவண்ணாமலை சென்றோம். அருணாசலேஸ்வரரை வணங்கினோம்.ரிஷிகேஷ் செல்ல திட்டமிட்டு இருக்கிறோம். இனி அடுத்து எப்போ இந்தியாவருவோம் என்று தெரியவில்லை என்றார்.நான் நடித்த 17 வருடங்களும் எனக்கு கோல்டன் பீரியட் ஆக இருந்தது. நிறையகற்றுக்கொண்டேன். பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்து இருக்கிறேன். சினிமாவில்இருந்ததால் தான் பல கோடி மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுகடவுள் கொடுத்த வரப்பிரசாதம்.சினிமாவில் மறக்க முடியாத அனுபவம் என்று கூறினால் கமலஹாசனுடன்ராஜபார்வை படத்தில் நடித்தது. நடிப்பக்காக பல விருதுகளை பெற்றது. ரசிகர்களைசந்தித்தது. இப்படி எல்லாமே மறக்க டியாத அனுபவங்கள்.என்னுடன் நடித்த பல ஹீரோக்கள இன்னும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள் (ஆமாங்க,விட மாட்டேங்கிறாங்க!). அவர்களிடம் அந்த அளவுக்கு திறமை இருக்கிறது (தீரமாட்டேங்குது!). ஏதோ ஒரு சக்தி (மகா சக்திங்காணும்!) இருக்கிறது. அதைப் பார்த்துநான் ஆச்சரியப்படுகிறேன் (ரசிகர்கள் பயப்படுறாங்க). அவர்களுக்கு என்வாழ்த்துக்கள்.அந்த காலத்தில் சாவித்திரி 25 வருடங்களாக கதாநாயகியாக நடித்தார். அடுத்ததலைமுறையில் என் போன்றவர்கள் 17 அல்லது 18 வருடங்கள் நடித்தோம்.இப்போது வரும் கதாநிாயகிகள் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் சிலர் அதுவும்இல்லாமல் ஒரு படம், இரண்டு படத்துடன் போய் விடுகிறார்கள் (ஆனா நீங்க சேர்த்தடப்பை விட இவங்க 3 மடங்கு அதிகமாக சேர்த்து விடுகிறார்களே!)ரஜினி நிறைய தத்துவங்கள் சொல்வார். நிறைய ஆன்மீக புத்தகங்களை எனக்கு படிக்ககொடுத்து இருக்கிறார். அவர் ஒரு நல்ல மனிதர். நல்ல நண்பர் (அப்ப கமல்?).நல்ல படங்களை பார்க்கும் போது, திரும்பவும் நடிக்க ஆசை வருகிறது என்றார்மாதவி.தப்பே இல்லை மேம்...

By Staff

நான் சினிமாவில் நடித்த 17 வருட காலமும் கோல்டன் பீரியட் என ரொம்பகாலத்திற்குப் பிறகு வாய் திறந்துள்ளார் வஞ்சிர மீன் கண்ணழகி மாதவி.

மாதவியை மறக்க முடியுமா? தமிழிலும்,மலையாளத்திலும், தெலுங்கிலும் ஒருகாலத்தில் சக்கை போடு போட்டவர் மாதவி. ரஜினி, கமல், மம்முட்டி, மோகன்லால்,சிரஞ்சீவி உள்ளிட்ட தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களுடன் ஒரே நேரத்தில் மாறி மாறிநடித்து அசத்திய அசாத்தியமான நடிகை.

ரொம்ப காலமாக மாதவியைப் பற்றிய செய்திகளே இல்லாமல் இருந்தது. அவர்எங்கே இருக்கிறார், என்ன பண்ணுகிறார் என்று சினிமா ரசிகர்களிடையே ஆர்வம்இருந்து வந்தது.

இந் நிலையில்தான் திடுதிப்பென சில நாட்களுக்கு முன்புசென்னைக்கு வந்துஇறங்கினார் மாதவி. நடிப்பதற்காக வரவில்லை. மாறாக தனது கணவர்,குழந்தைகளுடன் (3 பொண்ணுங்களாம் மாதவிக்கு!) கோவில், குளமாகசுற்றுவதற்காக வந்திருந்தார்.

நிறைய மாறிப் போயிருக்கிறார் மாதவி. உப்பிய உடல், இன்னும் பெரிதாகிப் போனகண்கள், தங்க நிற டை அடித்து அழகாக பாப் செய்யப்பட்டிருந்த முடி எனஅடையாளமே காண முடியாத அளவுக்கு மாறிப் போயுள்ளார் மாதவி. ஆனால் முகம்மட்டும் அப்படியே.

எப்படி இருக்கீங்க, என்ன பண்றீங்க என்று குந்த வைத்து குசலம் விசாரித்தால்,

சந்தோஷமா அமெரிக்காவில் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறேன். எனது கணவர்ரால்ப் ஜெய்தீப சர்மா. இவர் ஒரு வித்தியாசமான மனிதர். அப்பா பஞ்சாபி. அம்மாஜெர்மனி. அமெரிக்காவிலேயே செட்டிலாகி விட்டவர்.

1996ம் வருடம் நான் விடுமுறையில் அமெரிக்கா சென்றிருந்த போது, சர்மாவைச்சந்தித்தேன். ஒரே வாரத்தில், பெற்றோர்கள் சம்மத்துடன் திருமணம் செய்துகொண்டேன். கல்யாணம்னா ஒரு கல்யாணம் இல்லை. நாலு தடவை கல்யாணம்செஞ்சேன.

அமெரிக்காவில் பதிவு திருமணம், பிறகு அங்குள்ள கோவிலில் முறைப்படிதிருமணம், எங்க அப்பா, அம்மா விருப்பப்படி, திருப்பதியில் ஒரு முறை திருமணம்.பிறகு என் கணவர் குடும்பத்தார் விருப்பப்படி ஹிமாயன் இன்ஸ்டிடியூட்டில் ஒருறைதிருமணம் என நான்கு முறை சர்மாவுக்கு கழுத்தை நீட்டினேன்.

என் கணவர் நியூ ஜெர்சியில் சொந்தமாக பார்மசுடிகல் நிறுவனம் நடத்தி வருகிறார். 2இடங்களில் கிளைகள் உள்ளன. கணவர் தான் சேர்மன். நான் வைஸ் சேர்மன்.

எங்களுக்கு டிபனி கவ்ரிகா (8), பிரிசில்லா அர்பனா (4), எவெலின் திவ்யா (1) ஆகிய3 மகள்கள் என்று சுய சரிதையை சொல்லி நிறுத்தினார் மாதவி.

1979ல் தூர்பு படமரா என்ற தெலுங்கு படத்தின் மூலம் தான் நான் சினிமாவுக்குவந்தேன். தமிழில் முதல் படம் ராஜபார்வை. கமலின் நடிப்பும் இளையராஜாவின்இசையுமாக அந்தப் படமே ஒரு தேவ சுகம்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளம், ஒரியா என 7மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தேன். சிவாஜி, ரஜினி, கமல், பிரேம் நசீர், என்டி.ராமராவ், நாகேஸ்வரராவ், சிரஞ்சீவி,ராஜ்குமார், அமிதாப் பச்சன் என்று பெரிய பெரிய கதாநாயகர்களுடன் இணைந்துநடிக்கிற பாக்கியம் கிடைத்தது.

17 வருடங்கள் கதாநாயகியாக வாழ்ந்தேன். பெயர் புகழ், பணம் மூன்றும் போதும்போதும் என்கிற அளவுக்கு கிடைத்தது.

அந்த திருப்தியுடன் சினிமாவை விட்டு விலகி திருமணம் செய்து கொண்டேன்.திருமணமாகி 10 வருடங்களுக்கு பின், நாங்கள் இந்தியா வந்திருக்கிறோம். எனக்கும்,என் கணவருக்கும் ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகம். அதனால் இங்கே வந்ததும்,திருவண்ணாமலை சென்றோம். அருணாசலேஸ்வரரை வணங்கினோம்.

ரிஷிகேஷ் செல்ல திட்டமிட்டு இருக்கிறோம். இனி அடுத்து எப்போ இந்தியாவருவோம் என்று தெரியவில்லை என்றார்.

நான் நடித்த 17 வருடங்களும் எனக்கு கோல்டன் பீரியட் ஆக இருந்தது. நிறையகற்றுக்கொண்டேன். பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்து இருக்கிறேன். சினிமாவில்இருந்ததால் தான் பல கோடி மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுகடவுள் கொடுத்த வரப்பிரசாதம்.

சினிமாவில் மறக்க முடியாத அனுபவம் என்று கூறினால் கமலஹாசனுடன்ராஜபார்வை படத்தில் நடித்தது. நடிப்பக்காக பல விருதுகளை பெற்றது. ரசிகர்களைசந்தித்தது. இப்படி எல்லாமே மறக்க டியாத அனுபவங்கள்.

என்னுடன் நடித்த பல ஹீரோக்கள இன்னும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள் (ஆமாங்க,விட மாட்டேங்கிறாங்க!). அவர்களிடம் அந்த அளவுக்கு திறமை இருக்கிறது (தீரமாட்டேங்குது!). ஏதோ ஒரு சக்தி (மகா சக்திங்காணும்!) இருக்கிறது. அதைப் பார்த்துநான் ஆச்சரியப்படுகிறேன் (ரசிகர்கள் பயப்படுறாங்க). அவர்களுக்கு என்வாழ்த்துக்கள்.

அந்த காலத்தில் சாவித்திரி 25 வருடங்களாக கதாநாயகியாக நடித்தார். அடுத்ததலைமுறையில் என் போன்றவர்கள் 17 அல்லது 18 வருடங்கள் நடித்தோம்.இப்போது வரும் கதாநிாயகிகள் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் சிலர் அதுவும்இல்லாமல் ஒரு படம், இரண்டு படத்துடன் போய் விடுகிறார்கள் (ஆனா நீங்க சேர்த்தடப்பை விட இவங்க 3 மடங்கு அதிகமாக சேர்த்து விடுகிறார்களே!)

ரஜினி நிறைய தத்துவங்கள் சொல்வார். நிறைய ஆன்மீக புத்தகங்களை எனக்கு படிக்ககொடுத்து இருக்கிறார். அவர் ஒரு நல்ல மனிதர். நல்ல நண்பர் (அப்ப கமல்?).

நல்ல படங்களை பார்க்கும் போது, திரும்பவும் நடிக்க ஆசை வருகிறது என்றார்மாதவி.

தப்பே இல்லை மேம்...

More from Filmibeat

Read more about: madhavi dwells into memories
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X