»   »  குடைக்குள் மறுபடியும் மழை!

குடைக்குள் மறுபடியும் மழை!

Subscribe to Oneindia Tamil

சினிமாவை விட்டு நான் ஒதுங்கவில்லை, பதுங்கியுள்ளேன், அடுத்தடுத்து வெளியாக உள்ள படங்கள் மூலம் மீண்டும் பாயப் போகிறேன் என்கிறார்மதுமிதா.

பித்தன் பார்த்திபனின் கண்டுபிடிப்பு மதுமிதா. குடைக்குள் மழையாக வந்த மதுமிதா, விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே நடித்துள்ளார்.இடையில் காணாமல் போய் விட்டார்.

இனி மதுமிதா அவ்ளவுதான் என பலரும் நினைத்துக் கொண்டிருக்க, இதுவரை பதுங்கியிருந்தேன், இனிமேல் பாயப் போகிறேன் என கூறுகிறார்மதுமிதா.

இடையில் காணாமல் போனது குறித்து மது கூறுகையில், இடையில் படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. உடனே, எனக்கு கல்யாணம்,இனிமேல் நடிக்க மாட்டேன் என்று கதையைக் கட்டி விட்டு விட்டார்கள்.

ஆனால் இப்போதைக்கு நான் நடிப்பை விட மாட்டேன். இதுவரை பதுங்கியிருந்தேன். இனிமேல் பாய்ச்சல்தான். விஷ்வா தயாரிப்பில் புதியபடத்தில் நடிக்கப் போகிறேன். இந்தப் படம் குறித்து இன்னும் அறிவிக்காமல் உள்ளனர். பெயரும் இதுவரை வைக்கவில்லை.

எனது நடிப்பில் வளர்ந்து வந்து, இடையில் நின்று போன பட்டாசு படமும் மறுபடியும் ஷூட்டிங்குக்குத் தயாராகி விட்டது. இந்தப் படங்கள் வந்தால்மறுபடியும் நான் ஒரு ரவுண்டு வருவேன்.

இதுதவிர நான் ஒரு குறும்படத்திலும் நடித்துள்ளேன். ஆணிவேர் என்பது அதன் பெயர். வெளிநாட்டு பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது.ஈழத் தமிழர்கள் குறித்த படம் அது. அதில் எனது நடிப்பு பாராட்டப்பட்டது என்று சந்தோஷம் குமிழிட சொல்கிறார் மதுமிதா.

Read more about: actress madhimitha is back

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil