மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான் வேல்யூலாம் அப்போ தெரியல.. மனம் திறந்த மதுபாலா.. சுவாரஸ்ய சாட்!
சென்னை: அழகன் படத்தில் அறிமுகமாகி, சின்ன சின்ன ஆசைகளுடன் ரோஜாவில் பூத்த நடிகை மதுபாலாவின் வீடியோ சாட் வெளியாகி வைரலாகி வருகிறது.
51வயதை எட்டியுள்ள நடிகை மதுபாலா, நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தனது மறக்கமுடியாத திரை வாழ்க்கை குறித்த பல மேஜிக்குகளை அடுக்கிக் கூறியுள்ளார்.

மனித வாழ்க்கையே ஒரு மேஜிக் தான் என தொடங்கிய மதுபாலா, தனக்கு சினிமாவில் ஆரம்பத்தில் கிடைத்த அசத்தலான காம்பினேஷன் எல்லாம் இறைவன் கொடுத்த வரம், என்னால் ஒன்றும் நிகழவில்லை என தன்னடக்கத்துடன் பேசியுள்ளார்.
1991ம் ஆண்டு மம்முட்டி நடிப்பில் வெளியான அழகன் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை மதுபாலா, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து அசத்தி உள்ளார்.
ரோஜா, ஜென்டில்மேன், மிஸ்டர் ரோமியோ, இருவர் உள்ளிட்ட ஏகப்பட்ட தமிழ் படங்களில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
மிஸ்டர் ரோமியோ படத்தில் பாடல் காட்சிகளில் நடிக்க தான் மிகவும் சிரமப்பட்டதாகவும், பிரபுதேவா மாஸ்டர் வச்சு பென்ட் எடுத்துட்டார் என்றும் கூறியிருக்கிறார்.
மேலும், இப்போது இருப்பது போல மற்ற பிரபலங்களை பற்றி எளிதில் அறிந்து கொள்ளும் வசதியெல்லாம் இல்லை என்று சொன்ன, மதுபாலா, ரோஜா படத்திற்கு இசையமைக்கும் போது, ஏதோ ஒரு சின்ன பையன் மியூசிக் பண்றான்னு தான் முதலில் நினைச்சேன். தொடர்ந்து ஜென்டில்மேன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைக்கும் போது தான் அவரது திறமை தனக்கு தெரிந்ததாகவும் கூறியுள்ளார்.
அக்னி நட்சத்திரம் படம் பார்க்கும் போது, மணிரத்னத்தின் இயக்கத்தை வியந்து, இதுபோன்ற ஒரு படத்தில் தான் நடிக்க வேண்டும் என நினைத்ததாகவும், ரோஜா படத்தில் அந்த கனவு பலித்தது, தனக்கு கடவுள் கொடுத்த பரிசு என்றும் கூறியுள்ளார்.
சமீபத்தில், பாபி சிம்ஹாவுடன் நடித்த அக்னி தேவி படம் பற்றியும், தனது தோழியான ரம்யா கிருஷ்ணன் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கியது குறித்தும் விவரமாக பேசியுள்ள வீடியோவை க்ளிக் செய்து பாருங்க!


Click it and Unblock the Notifications











