மதுரை சிஸ்டர்ஸ் சீரியலில் ...ஷூட்டிங் ஸ்பாட்டில் சுனிதா மற்றும் சங்கவி ஸ்பெஷல் பேட்டி

சென்னை: நான் ஜோடியாகவே இருக்கிறேன் என்று மதுரை சிஸ்டர்ஸ் சீரியலில் நடித்து கொண்டிருக்கும் நடிகை சுனிதா தெரிவித்து உள்ளார் .

காஸ்ட்யூம் டிசைனர் தான் தனக்கு டார்ச்சர் தருவதாகவும், தற்போது சீரியல்களில் ஹீரோ - ஹீரோயின் ரொமான்ஸ் டிரெண்ட்டாக ஆக உள்ளது என்றும் தெரிவித்தார்.

மற்றொரு நடிகையாக நடித்துள்ள சங்கவி கூறுகையில், நான் காதலிக்கிறேனோ இல்லையோ... எனது சகோதரிகள் அந்த வேலையை கனக்கச்சிதமாக செய்கிறார்கள் என்றார் சிரித்தபடி. சென்னை முகப்பேரில், மதுரை சிஸ்டர்ஸ் சீரியலுக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகை சுனிதா, சங்கவி ஆகியோர் நமது பிலீம்பீட்டுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

முகப்பேரில் பிரம்மாண்டம்

முகப்பேரில் பிரம்மாண்டம்

கேள்வி: கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் மதுரை சிஸ்ட்ர்ஸ் சீரியல் குறித்து நீங்கள் இருவரும் கூற விரும்புவது:

பதில்: இந்த சீரியல் ரொம்ப நல்ல வந்திருக்கிறது. கடந்த 21ம் தேதி ஒளிபரப்பை துவங்கியதால் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. மதுரையை மையமாக வைத்து நடைபெறுவதால் மதுரையை போன்று செட் அமைத்துள்ளோம். தத்ரூபமான சாமி சிலைகள், சூப்பர் மார்க்கெட் போன்றவைகளை நாங்களே தயார் செய்துள்ளோம். இந்த சீரியல் மீதான எதிர்பார்ப்பு எங்களுக்கு அதிகமாக இருக்கிறது. தொடர்ந்து ஷூட்டிங் நடைபெற்று கொண்டிருக்கிறது. சின்சியராக வேலை பார்த்து கொண்டிருக்கிறோம்.

பூகம்பம் ஏற்பட போகிறது

கேள்வி: உங்கள் இருவரது கதாபாத்திரம் எப்படிப்பட்டது.?

பதில்: உணர்வு பூர்வமான, பாசமான கதாபாத்திரம். அதாவது அந்த காலங்களில் ஒரே குடும்பத்தில் பல அண்ணன், தங்கைகள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்று நாம் அடித்து கொண்டிருக்கிறோம். எனது அம்மா, மாமா போன்றவர்கள் இன்றும் பாசத்துடன் இருக்கின்றனர் என்றார் நடிகை சங்கவி.

இந்த சீரியல்களில் பாசமான அக்கா & தங்கைகளாக நடித்து இருக்கிறோம். எங்களுடன் நடிகை சாயாசிங்கும், ஐராவும் நடித்துள்ளனர். கடைக்குட்டியாக நடித்துள்ள ஐரா ஜாலியான டைப். ஐரா, கொஞ்சம் அமைதியாக இருந்தால் ஏதோ பூகம்பம் நடக்கபோகிறது என்று அர்த்தம். அவளும் அமைதியாக இருக்க மாட்டா. எங்களை அமைதியாக இருக்கவிட மாட்ட. உண்மையான சகோதரிகளாக வாழ்ந்திருக்கிறோம். இதற்கு அப்புறமும் அப்படியே இருக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். இந்த தொடரில் மதுரை லாங்வேஜில் ஓரளவு பேசியுள்ளோம் என்றனர் இருவரும் .

கிளிசரின் போடவில்லை?

கிளிசரின் போடவில்லை?

கேள்வி: நடிகை சுனிதா, உங்கள் கண்கள் அனைவரையும் மிரட்டும் வகையில் அமைந்துள்ளன. இது குறித்து நீங்கள் கூற விரும்புவது:

பதில்: அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. கிளிசரின் போட்டு அழுததெல்லாம் ஒரு காலம். அடுத்தவர்களை அழுக வைத்து பழகியதால், இந்த சீரியலில் அழுகை இல்லாமல் நடித்திருக்கிறேன். தற்போது நான் கிளிசரின் போடவில்லையென்றால் கண்ணீர் வருவதில்லை. என்னை பொறுத்தவரை காஸ்ட்யூம் டிசைனர் என்றாலே டார்ச்சர் என்று தான் நான் சொல்வேன்.

அழுகை இல்லை

அழுகை இல்லை

கேள்வி: சுனிதா, மதுரை சிஸ்டர்ஸ் சீரியலை மக்கள் ஏன் பார்க்க வேண்டும்?

பதில்: தற்போது வரும் சீரியல்களில் ஹீரோ & ஹீரோயின் ரொமான்ஸ் அதிகமாக உள்ளது. அதை உடைக்க வேண்டும் என்பது தான். நான்கு ஆண்கள் அல்லது அண்ணன் தம்பிகள் நான்கு பேர் என்னவெல்லாம் சாதிக்கிறார்கள் என்பதை மையமாக வைத்து சீரியல் இருக்கிறது. ஆனால் இந்த சீரியலில் நான்கு பெண்களை மையமாக வைத்து, அதாவது சகோதரிகள் சந்திக்கின்ற பிரச்னைகளும், அவைகளை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பது தான் கதை. இந்த சீரியலில் மாமனார், மாமியார் போன்ற கதாபாத்திரங்கள் இதுவரையில் இடம் பெறவில்லை.

சாயாசிங் இனிமையானவர்

சாயாசிங் இனிமையானவர்

கேள்வி: திரைப்பட நடிகை சாயா சிங் இந்த தொடரில் நடிப்பது குறித்து நீங்கள் இருவரும் கூற விரும்புவது...

பதில்: நடிகை சாயா சிங் ரொம்ப இனிமையானவர். அவர் நடித்த திருடா திருடி படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா... மன்மத ராசா பாடல் இன்றளவும் எங்களால் மறக்க முடியவில்லை. திருடா திருடி படத்தில் கட்டை விரலுக்கு பக்கத்து விரல் அந்த விபரம் அவரிடம் கேட்டேன். அது அவருடைய விரலே அல்ல என்றும் தெரிவித்தார். அவர் நடித்த ஆனந்தபுரத்து வீடு படமும் மிக அருமையாக இருக்கும். நாங்கள் அனைவரும் அவருடன் போட்டோஸ் எடுத்து கொண்டோம். நாங்கள் இருக்கும் இடம் ஜாலியாக இருக்கும். உண்மையான சகோதரிகளாக பழகி வருகிறோம் என்றனர்.

நான் ஜோடியாகிவிட்டேன்

நான் ஜோடியாகிவிட்டேன்

கேள்வி: நடிகை சுனிதா, நீங்கள் சினிமாவில் நடிப்பது குறித்து...

பதில்: நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு வந்தது. நான் தான் கொஞ்சம் தள்ளி போட்டிருக்கிறேன் என்றார்.

கேள்வி: நடிகை சாயாசிங் அவருடன் பணிபுரிந்த கிருஷ்ணாவை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். நீங்கள் இருவரும் யாரையாவது காதலிக்கிறீர்களா?

பதில்: நடிகை சுனிதா கூறும்போது, நான் ஏற்கனவே ஜோடியாகி விட்டேன். சங்கவிக்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.

கேள்வி: சுனிதா நீங்கள் ரசிகர்ளுக்கு கூற விரும்புவது?

பதில்: நாங்கள் செய்யும் தவறினை ரசிகர்கள் தான் கண்டுபிடித்து கூறுகின்றனர். நல்ல டிஆர்பி ரேட்டிங் அமைந்த அனைத்து சீரியல்களில் நடித்தது ரொம்ப சந்தோஷம். இதுவரை நான் நடித்த அனைத்து சீரியல்களுக்கும் பொதுமக்கள் ஆதரவு தந்தார்கள். இந்த சீரியலுக்கும் ஆதரவு தர வேண்டும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X