விடாமுயற்சி படத்தில் த்ரிஷாவின் காதலன் ‘பிரகாஷ்’ யாரு?.. மகிழ் திருமேனி லோகேஷை மிஞ்சிடுவாரு போல!

சென்னை: விடாமுயற்சி திரைப்படம் தனக்கு அஜித் குமாரால் கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லி எஸ்கேப் ஆகிவிட்டார் இயக்குநர் மகிழ் திருமேனி. இந்த கதையை படமாக்க வேண்டும். இப்படித்தான் படமாக்க வேண்டும் என அனைத்தையும் அஜித் குமாரே ஸ்கெட்ச் போட்டுக் கொடுக்க, அதை படமாக்கிய வேலையை மட்டுமே தான் பார்த்ததாக போஸ்ட் ரிலீஸ் பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

மேலும், விடாமுயற்சி படத்தில் கடைசி வரை காட்டப்படாத அந்த பிரகாஷ் கதாபாத்திரம் குறித்த கேள்விக்கும் மறைக்காமல் ஓபனாக பதிலளித்துள்ளார் மகிழ் திருமேனி. பிரேக் டவுன் படம் பற்றிய கேள்விகளுக்கு மட்டும் இப்போதைக்கு அதுபற்றி பேச வேண்டாம் என்றும் சில மாதங்கள் கழித்து பதில் அளிக்கிறேன் என எஸ்கேப் ஆகிவிட்டார்.

Vidamuyarchi Ajith Kumar Magizh Thirumeni

விடாமுயற்சி திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் குவிந்த நிலையிலும், படம் 100 கோடி ரூபாய் வரை உலகளவில் வசூல் செய்திருப்பதாக கூறுகின்றனர். இரண்டாவது வார இறுதியில் படம் லாபகரமாக மாறுமா? என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

யாரு அந்த பிரகாஷ்?: விடாமுயற்சி படத்தில் சவதீகா பாடல் முடிந்ததும் ஒட்டுமொத்த தியேட்டரும் சைலண்ட் ஆகிவிடுகிறது. த்ரிஷா தனக்கு இன்னொருவருடன் தொடர்பு இருப்பதாகவும் இந்த திருமண பந்தத்தில் இருந்து விலகுவதாக சொல்லும் இடத்தில் ரொம்பவே பயந்தேன். ரசிகர்கள் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும் என ஆனால், அனைவரும் அமைதியாக அதை பார்த்து ரசித்தனர். கடைசி வரை யாரு அந்த பிரகாஷ் என்பதை ஏன் ரிவீல் செய்யவில்லை என்றால் இந்த படத்தின் எண்ட் ஓபனாக இருக்க வேண்டும் என நானும் அஜித் சாரும் விரும்பியது தான் காரணம் எனக்கூறியுள்ளார் மகிழ் திருமேனி.

அந்த பிரகாஷே பொய்யா இருக்கலாம்: விடாமுயற்சி படத்தின் தொடக்கத்தில் தான் இன்னொருவரை விரும்புவதாகவும் அதனால் உங்களை விவாகரத்து செய்யப் போகிறேன் என அஜித்திடம் த்ரிஷா சொல்ல அவரை அவரது அம்மா வீட்டுக்கு விட காரில் செல்லும் போது அர்ஜுன் மற்றும் ரெஜினா இருவரும் த்ரிஷாவை கடத்திச் செல்ல அவர்களை மீட்கிறார் அஜித். கடைசியில், அஜித் தன்னை எந்தளவுக்கு காதலிக்கிறார் என்பதை தெரிந்துக் கொண்டு அந்த பிரகாஷ் வேண்டாமென்று அஜித்துடனே இணைந்து விடுகிறார் த்ரிஷா. இந்நிலையில், த்ரிஷா சொல்லும் பிரகாஷ் என்பவர் உண்மையில் இல்லாமலே இருக்கலாம் என புதிய பேட்டியில் மகிழ் திருமேனி பதில் அளித்துள்ளது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

ஃபேக் ஃபிளாஷ்பேக் இருக்காதுன்னு சொன்னாரே?: லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் ஃபேக் ஃபிளாஷ்பேக் இருந்தது போல விடாமுயற்சி படத்திலும் ஃபேக் காதலரா? என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இதே மகிழ் திருமேனி படம் வெளியாவதற்கு முன்னதாக தனது படத்தில் ஃபேக் ஃபிளாஷ்பேக் எல்லாம் இருக்காது என உருட்டிவிட்டு இப்போ பிரகாஷே ஃபேக் என ஏன் சொல்கிறார் என கேட்டு வருகின்றனர். மேலும், அப்போ அஜித்தே அர்ஜுன், ரெஜினாவை செட் செய்து மீண்டும் த்ரிஷாவுடன் சேரத்தான் த்ரிஷாவை காரில் கூட்டிச் சென்றாரா? என்றும் இன்னொரு கதையை கிளப்பி நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். எப்படி இருந்தாலும், படம் பெரியளவில் வசூல் செய்யவில்லை என்றும் தனது அடுத்த படத்திற்காக உஷாராக பேசுவது போல மகிழ் திருமேனி எஸ்கேப் ஆகும் கருத்துக்களையே பேட்டிகளில் கூறி வருகிறார் என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X