விஜய் சேதுபதியோ, நித்திலனோ மகாராஜா படத்தோட ஹீரோ இல்லை.. நட்டி நட்ராஜ் சொன்னது யாரை தெரியுமா?

சென்னை: நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நட்டி நட்ராஜ், அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, பாரதிராஜா, தேனப்பன், திவ்யபாரதி, அருள்தாஸ் மற்றும் சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ள மகாராஜா திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

மகாராஜா திரைப்படம் முதல் நாளில் அதிகபட்சமாக 7 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அரண்மனை 4, கருடன் படத்தை தொடர்ந்து இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி படமாகவும் தமிழ் சினிமாவில் வெளியான தரமான படமாகவும் இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Vijay Sethupathi Natty Natraj Maharaja

லோகேஷ் கனகராஜ், கீர்த்தி சுரேஷ், கவின் உள்ளிட்ட பலர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படத்தை பாராட்டி உள்ளனர். இந்நிலையில், அந்த படத்தில் வரதராஜன் என்னும் போலீஸ் அதிகாரியாக நடித்த நட்டி நட்ராஜ் படத்தின் உண்மையான நாயகன் யார் என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மக்கள் பாராட்டும் மகாராஜா: மகாராஜா படம் ரொம்பவே டிஸ்டர்ப் செய்து விட்டதாக ரத்னகுமார் ட்வீட் போட்டுள்ளார். ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும் பொதுமக்களும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படத்தை இந்த ஆண்டின் சிறந்த படம் என பாராட்டி வருகின்றனர். விஜய் சேதுபதி தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இப்படி ஒரு திரைக்கதையை செதுக்கி இருப்பது மிகப்பெரிய விஷயம் என பலரும் நித்திலனை கொண்டாடி வருகின்றனர்.

Vijay Sethupathi Natty Natraj Maharaja

நட்டி நட்ராஜ் பேட்டி: ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என அழைக்கப்படும் நட்ராஜ் மகாராஜா படத்தில் வரதராஜன் என்னும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் அவரது கதாபாத்திரம் ஒரு மாதிரி செல்லும், ஒரு கட்டத்தில் திடீரென வேறு ரூபத்தை அவர் எடுப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. விஜய் சேதுபதியுடன் படம் முழுக்கவே டிராவல் செய்யும் கதாபாத்திரத்தில் நட்ராஜ் நடித்துள்ளார். இந்நிலையில், தனது கதாபாத்திரம் பற்றியும் படக்குழுவினர் பற்றியும் யூடியூப் சேனல் ஒன்றுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார்.

படத்தின் ஹீரோ இவர் தான்: மகாராஜா படத்தின் ஹீரோ விஜய் சேதுபதி என சிலர் கூறுவார்கள், சிலர் படத்தின் இயக்குநர் நித்திலன் தான் ஹீரோ என்பார்கள். ஆனால் என்னைப் பொருத்த வரையில் இந்தப் படத்தின் ஹீரோ என்றால் அது படத்தின் எடிட்டர் பிலோமின் ராஜ் தான் எனக் கூறியுள்ளார். படத்தில் எது பிரசன்டில் நடக்கிறது எது பாஸ்ட்டில் நடக்கிறது என்பதே தெரியாத அளவுக்கு எடிட் செய்து அசத்தி விட்டார். அவர் விரைவில் இயக்குநராக வருவார் என எதிர்பார்க்கிறேன் எனக் கூறியுள்ளார்.

Vijay Sethupathi Natty Natraj Maharaja

விஜய் சேதுபதி கிட்ட கத்துக்கலாம்: விஜய் சேதுபதியிடம் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். பழைய வெற்றியை கொண்டாட மாட்டார். நாளை கிடைக்கப் போவது குறித்து நினைக்க மாட்டார். தற்போது என்ன செய்கிறோம் என்பதில் மட்டுமே வாழும் ஒரு அருமையான நபர். யாராவது புதுசா ஒரு வார்த்தை சொன்னாலும் அதை ரசித்துக் கேட்டு இதை நான் எங்கேயாவது பயன்படுத்திக் கொள்ளட்டா எனக் கேட்பார் என நட்டி நட்ராஜ் விஜய் சேதுபதி பற்றியும் பேசியுள்ளார்.

நித்திலன் வெரி டேலன்ட்: குரங்கு பொம்மை படத்தில் நடித்த என்னுடைய நண்பர் குமரவேல் நித்திலன் பற்றி சொன்னதும் படத்தை கூட பார்க்காமல் அவரிடம் போனில் பேசி பாராட்டினேன். அதன் பின்னர் இந்த படத்தில் நடிக்கும் போது அவர் எனக்கு கதை சொன்ன விதம் என்னுடைய கதாபாத்திரத்தை விவரித்த விதம் எல்லாமே ரொம்பவே எக்ஸலன்ட்டாக இருந்தது. சாதாரணமாக ஒரு காட்சியில் நடந்து வந்தேன். இப்படி நடக்காதீங்க, ஒரு பெரிய பிரச்சனையை யோசித்துக் கொண்டிருக்கும் வரதராஜனாக நடங்க என்றார். அந்த அளவுக்கு படத்தையும் ஒரு காட்சியையும் அவர் செதுக்கிய விதம் எக்ஸ்ட்ராடினரி என இயக்குநரை பாராட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X