என்ன செய்வது என தெரியாமல் நடு ரோட்டில் நின்றேன்.. மாஸ்டர் மகேந்திரனின் அனுபவம்!
சென்னை: விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோஹனன், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது மாஸ்டர் திரைப்படம்.
இந்த படத்தில் மகேந்திரன் விஜய் சேதுபதியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடத்தில் நல்ல ஆதரவை பெற்றுள்ளார்.
தன்னுடைய அனுபவங்கள் குறித்து Close Call நிகழ்ச்சிக்கு மகேந்திரன் அளித்த பிரத்யேக பேட்டி வைரலாகி வருகிறது.

மறக்க முடியாத தருணங்கள்
தன்னுடைய 26 வருட சினிமா வாழ்க்கையில் நாட்டாமை படத்தில் அறிமுகமானது, 15 வயதில் என்ன செய்வது என்று தெரியாமல் நடு ரோட்டில் நின்றது, மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜால் நடிக்க தேர்வு செய்யப்பட்டது என இந்த மூன்றும் தன் வாழ்வில் மறக்க முடியாத தருணம் என பேட்டியளித்துள்ளார்.

வாய்ப்பளிக்க தவறினார்கள்
ஒரு கட்டத்தில் படத்தின் விநியோகஸ்தரிடம் மதிப்பில்லாமல் போனது வருத்தமளித்தது எனவும், தனக்கு திரையரங்கில் சரியான காட்சிகளை கொடுக்காமல் போனதால் வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது எனவும் கூறியுள்ளார் மகேந்திரன்.

நல்ல மனதிற்கான வெற்றி
மாஸ்டர் படத்தை தொடர்ந்து KGF 2 படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், முன்னர் தொழில்நுட்ப ரீதியாக பின் தங்கியிருந்த கன்னட சினிமா தற்போது பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது எனவும் கூறினார். KGF 2 டீசர் யாஷின் நல்ல மனதிற்கான வெற்றி எனவும் பாராட்டினார்.

நடிகர் சங்கம் உண்ணாவிரதம்
நடிகர் அஜித் குறித்த கேள்விக்கு, கடைசியாக அஜித்தை நடிகர் சங்கம் உண்ணாவிரதத்தில் பார்த்த போது அவர் காலில் ஆப்ரேஷன் செய்திருந்தும் துணை நடிகர்களை அங்கே சந்தித்து பேசியது, தன்னை சந்தித்து நன்றாக வரவேண்டும் என வாழ்த்தியது போன்ற செயல்கள் அவருடைய சிறந்த Quality என பாராட்டினார் மகேந்திரன்.

பில்மி பீட் யூ டியூப்
தன்னுடைய அனுபவங்கள் குறித்தும் இன்னும் பல விஷயங்களையும் இந்த பேட்டியில் கூறியுள்ளார் மகேந்திரன். இந்த வீடியோவை மறக்காமல் பில்மி பீட் யூ டியூப் சேனலில் கண்டு களியுங்கள்.


Click it and Unblock the Notifications











