»   »  எஸ்.ஜே.சூர்யா நல்லவர்: மாளவிகா

எஸ்.ஜே.சூர்யா நல்லவர்: மாளவிகா

Subscribe to Oneindia Tamil

வியாபாரி படத்தின் கொசு கடிக்குது பாடல் காட்சியின்போது எஸ்.ஜே.சூர்யா தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக நான் புகார் கூறவேஇல்லை, சூர்யா எனக்கு நல்ல நடிகர் என்று கூறியுள்ளார் மாளவிகா.

எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா, நமீதா, தமன்னா ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் வியாபாரி. இப்படத்தை ஷக்தி சிதம்பரம் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள கொசு கடிக்குது பாடல் காட்சியைப் படமாக்கியபோது மாளவிகாவிடம், சூர்யா அத்துமீறி கை வைத்து விட்டதாகவும்,இதனால் மாளவிகா கொதித்தெழுந்து சூர்யாவைத் திட்டியதாகவும் செய்திகள் கசிந்தன.

இதை மாளவிகாவும், சூர்யாவும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இதுதொடர்பாக மாளவிகா கூறுகையில், ஏன் இப்படி ஒரு நியூஸ் வந்ததுன்னேதெரியவில்லை. நானும், சூர்யாவும் நல்ல நண்பர்கள். சூர்யா என்னிடம் தவறாக நடக்கவும் இல்லை, நான் திட்டவும் இல்லை, புகார் கூறவும்இல்லை.

யார் இப்படிப்பட்ட அபாண்டமான வதந்திகளைப் பரப்புகிறார்கள் என்றே தெரியவில்லை. ஏற்கனவே திருமகன் படத்தில் சூர்யாவுடன் நான்இணைந்து நடித்துள்ளேன். இப்போது வியாபாரியில் நடிக்கிறேன், இன்னொரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன்.

இப்போது எங்களது நட்பை களங்கப்படுத்துவது போல இந்த செய்தி வெளியாகி வேதனையை அளித்துள்ளது. கொசுகடிக்குது பாட்டு கிழக்குக்கடற்கரைச் சாலையில் உள்ள பங்களாவில் படமாக்கப்பட்டது உண்மைதான்.

3 நாட்களுக்கு படமாக்கினார்கள். அதில் நான் மாமி வேடத்தில், அதாவது மடிசார் அணிந்து நடித்தேன். படப்பிடிப்பின்போது எனக்கும்,சூர்யாவுக்கும் எந்தப் பிணக்கும் இல்லை. இருவரும் ஜாலியாக அரட்டை அடித்தபடிதான் நடித்தோம்.

எனக்கு இயற்கையிலேயே துணிச்சல் அதிகம். தவறு என்று தெரிந்தால் அங்கேயே தட்டிக் கேட்பேன். முன்பு கூட தெலுங்கில் நடிகர்ராஜேந்திரபிரசாத்துடன் நடித்தபோது கண்டபடி முத்தம் கொடுக்க முயன்றார். அவரை அத்தனை பேர் முன்னிலையில் வைத்து அங்கேயே நன்றாகதிட்டித் தீர்த்து விட்டேன்.

அதேபோல இப்போது சூர்யா தவறு செய்திருந்தாலும் எதற்கும் பயப்படாமல் அப்படித்தான் செய்திருப்பேன், வெளியிலும் சொல்லியிருப்பேன்.எதையும் மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

எனக்கு சூர்யா நல்ல நண்பர், சக நடிகர் ஒருவருடன் என்னை இணைத்து இப்படி ஒரு அசிங்கமான வதந்தியை யார் கிளப்பி விட்டார்களோதெரியவில்லை என்று புலம்பினார் மாளவிகா.

சூர்யாவும் இப்படித்தான் புலம்பினார். இந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் மாளவிகா எனக்குப் போன் பண்ணி அழுதுச்சு. நான் அவருக்குஆறுதல் கூறினேன். எனக்கு இந்த வதந்தி எந்தவிததிலும் பாதிக்கவில்லை. ஆனால் மாளவிகா ஒரு பெண், கல்யாணம் ஆகப் போகிறவர். அவருக்குகடும் மன வேதனை ஏற்பட்டுள்ளது.

ஆனால் இதெல்லாம் பொய்யான தகவல்கள், மன வேதனைப்பட வேண்டாம் என ஆறுதல் கூறினேன். எனது வளர்ச்சியை தடுக்கவே இந்த வதந்திஎன நினைக்கிறேன். ஆனால் அது முடியாது. ஆண்டவன் அருளும், பெற்றோர்களின் ஆசியும் இருக்கும் வரை யாராலும் என்னை ஒன்றும் செய்யமுடியாது என்றார் சூர்யா படு போல்டாக.

வதந்தியால் நொந்து போயிருந்த மாளவிகாவை திசை திருப்பி கல்யாணத்திற்குப் பிறகும் கிளாமராக நடிப்பீங்களா என்று கேட்டேபாது, என்னைக்கட்டிக்கப் போகிறவரே அதை ஆட்சேபிக்கவில்லை. உங்களுக்கு என்ன அதில் சந்தேகம்? கண்டிப்பாக கிளாமர் நடிப்பை தொடருவேன் என்றார்மாளவிகா.

அப்ப சரி!

Please Wait while comments are loading...