»   »  என் ஆளுக்கு எல்லாம் தெரியும்-மாளவிகா!

என் ஆளுக்கு எல்லாம் தெரியும்-மாளவிகா!

Subscribe to Oneindia Tamil

எனக்கு கணவராக வரப்போகும் சுமேஷ் மேனனுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும், எல்லாம் தெரியும் என்று கூறி கலங்கடிக்கிறார் மாளவிகா.

தனது இத்தனை ஆண்டு கால கலையுலக சேவையை சி றப்பாக முடித்துக் கொண்டு கேரளத்து சுமஷை கல்யாணம் செய்து கொள்ள ரெடியாகிவிட்டார் மாளவிகா. இவர்களது காதல் பிளஸ் அரேன்ஞ்ட் கல்யாணம் மார்ச் 3ம் தேதி பெங்களூரில் நடைபெறுகிறது.

அன்று பிற்பகல் 12.05 மணிக்கு முகூர்த்தம். கோவிலில் வைத்து கல்யாணத்தை செய்கின்றனர். அன்று மாலையே வரவேற்பாம். தனது திருமணம்குறித்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து மனம் விட்டுப் பேசி அனைவரையும் கல்யாணத்திற்கும் அழைத்தார் மாளவிகா.

விளாங்கு மீனாக இத்தனை காலம் துள்ளி விளையாடிக் கொண்டிருந்த மாளவிகா, கல்யாண சாகரத்தில் குதித்து, சந்தோஷக் கடலில் நீச்சலடிக்கப்போவதால் ரசிகர்கள் கலங்கிப் போய் விட வேண்டாம். கல்யாணத்திற்குப் பிறகும் வழக்கம் போலவே நடிப்பாராம் மாளவிகா.

எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். என்னைப் பற்றி நல்ல விஷயங்களும், என்னைப் பற்றிய மோசமான விஷயங்களையும் சுமேஷ் நன்குஅறிவார். அவருக்கு என்னைப் பற்றிய எல்லாமும் நன்றாகவேத் தெரியும். நான் வெளிப்படையானவள், எதையும் ஒளித்து வைக்க மாட்டேன்.

திரையுலகில் எனக்கு எதிரிகள் யாரும் கிடையாது, நானும் யாரையும் எதிரிகளாகவே நினைத்ததில்லை. என்னை வார்த்தைகளாலும்,செயல்களாலும் எரிச்சல் படுத்தியவர்கள், காயப்படுத்தியவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அனைவரையுமே எனது திருமணத்திற்குஅழைத்துள்ளேன்.தி

தென்னிந்தியத் திரையுலகில் உள்ள அத்தனை பேரும் எனது கல்யாணத்திற்கு வர வேண்டும் என ஆசைப்படுகிறேன்.தி

திருமணத்திற்குப் பிறகும் நான் நடிப்பேன், கிளாமராகவும் நடிப்பேன் என்று சுமேஷிடம் கூறியபோது, அதை அவர் தடை சொல்லவில்லை.என்னைப் போலவே அவரும் வெளிப்படையான ஆள்தான். எங்களுடையது காதல் பிளஸ் இரு வீட்டாரும் சேர்ந்து நிச்சயித்த திருமணம்.

திருமணத்திற்குப் பிறகும் நடிப்பதில் எந்தத் தவறும் இருப்பதாக தெரியவில்லை. பாலிவுட்டில் கல்யாணத்திற்குப் பிறகும் நடித்து முத்திரைபதித்தவர்கள் நிறையப் பேர் உள்ளனர்.

நான் எப்போதும் கிளாமர் ரோல்களிலேயே நடிப்பதாக சிலர் குறைபட்டுக் கொள்கிறார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. உண்மையைச்சொல்லனும்னா, எந்தப் படத்திலும் நான் இன்னும் கிளாமர் காட்டி நடிக்கவே ஆரம்பிக்கவில்லை (அய்யய்யோ!)

குத்துப் பாட்டில் நடிப்பதில் தவறில்லை. வாளமீனு பாட்டு ரொம்பப் பிரபலமானது. எதிர்காலத்திலும் தேவைப்பட்டால் குத்துப் பாட்டில் நடிப்பேன்.

சமீபத்தில் என்னைப் பற்றி வந்த (அதாங்க, எஸ்.ஜே.சூர்யா கை விட்டு விட்டதாக வந்த செய்திதான்!) கிசுகிசுக்கள் குறித்துக் கருத்துக் கூறவிரும்பவில்லை. வாழ்க்கையின் மிகவும் சந்தோஷமான தருணத்தில் இருக்கிறேன். இப்போது எதற்கு அது? என்றார் புன்னகையுடன் மாளவிகா.

தொடர்ந்து கிளாமராக நடிப்பேன் என்று மாளவிகாவே சொல்லிட்டார், கவலை தீர்ந்துச்சா ரசிக கண்மணிகளா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil