For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  4 கேட்கும் மாளவிகா ! கானா உலகநாதனின் புண்ணியத்தால் வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்பாட்டு ஹிட் ஆனாலும் கூட என்னோட ஹாட்டான ஆட்டத்தால்தான் பாட்டு சூப்பர்ஹிட் ஆனது என்று கூறி மாளவிகா அலப்பறை பண்ண ஆரம்பிச்சுட்டாராம்.எங்க பார்த்தாலும் இப்போது வாள மீனும், விலாங்கு மீனும்தான்.சின்னப் புள்ளைக முதல் பெருசுகள் வரை இந்தப் பாட்டை உச்சரிக்காத வாயேதமிழ்நாட்டில் கிடையாது. அந்த அளவுக்கு பாட்டு சூப்பர் ஹிட் ஆகி விட்டது. இதனால் சந்தோஷமாகியிருப்பவர்கள் இரண்டு பேர். ஒருவர், எல்லோ டிரஸ்போட்டு, உடம்பை முறுக்கு கம்பி கணக்கில் படு ஸ்டிராங்காக வைத்துக் கொண்டுசெம எஃபக்ட் கொடுத்த கானா உலகநாதன், இன்னொருத்தர் நம்ம மாளவிகா.படு ஒயிலாக மாளவிகா போட்ட குத்தாட்டம், பூவோட சேர்ந்த நாரும் மணக்கும்என்பது மாதிரி, பாட்டோட சேர்ந்த அவரது ஆட்டமும் அட்டகாசமாகி விட்டது.இந்தப் பாட்டின் வெற்றியால், ஏகப்பட்ட கானா பிளஸ் குத்தாட்டப் பாட்டு வாய்ப்புமாளுவைத் தேடி ஓடி வருகிறதாம்.தமிழில் ஒரு படம் கூட இல்லாமல் இந்தி, கன்னடம் என ஒதுங்கிக் கிடந்த மாளவிகா,அலை அலையென பாட்டு வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதால் ஜாலியாகிப் போய்வருகிற வாய்ப்புகளில் நல்ல வாய்ப்பாக தேடிப் பிடித்து ஒத்துக் கொண்டுவருகிறாராம்.வாள மீனைத் தொடர்ந்து அதே டைப்பிலான இன்னொரு குத்துப் பாட்டுக்கு அவர்அடுத்து ஆட்டம் போடவுள்ளார். பாண்டியராஜன் இயக்கத்தில் அவரது மகன் நடிக்கும்கை வந்த கலை படத்தில் தான் இந்த கானா பாட்டாம்.இந்தப் பாட்டும் செம குத்தாக அமையும் என்று பெரும் நம்பிக்கையில் உள்ளார்மாளவிகா.அதே போல திருமாவளவன் நடிக்கும் அன்புத் தோழி படத்திலும் ஒரு சிறுத்தையை சீண்டாதடா, சிறு நரிக்கூட்டம் தாங்காதடா என்று ஒரு பாடலுக்கும் செம குத்து போட்டிருக்கிறார் மாளவிகா.கானா பிளஸ் குத்துப் பாட்டுக்கு ஆட தயாராக இருக்கும் அதே நேரத்தில் தொடர்ந்துஒரே டைப்பிலான பாட்டுக்களில் ஆட விருப்பம் இல்லை என்கிறார் மாளவிகா. கவர்ச்சி கோலத்தில் மட்டுமே என்னை ரசிகர்கள் பார்க்கக் கூடாது என நினைக்கிறேன்.அதனால்தான் தொடர்ந்து கானா பாட்டு, குத்துப் பாட்டுக்கு ஆட வேண்டாம் எனமுடிவு செய்துள்ளேன்.சில ஹீரோயின் வாய்ப்புகளும் என்னைத் தேடி வந்துள்ளன என்கிறார் மாளு.வாள மீனு ஹிட் ஆனதால் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி விட்டார். ஒருபாட்டுக்கு ஆட இனிமேல் ரூ. 4 லட்சம் சம்பளம் தர வேண்டுமாம். கிளாமர் தூக்கலாகவேண்டும் என்றால் டப்பையும் கூட்டித் தர வேண்டுமாம்.இதுதவிர, பெங்களூரிலிருந்து வந்து போக பிளைட் டிக்கெட், ஸ்டார் ஹோட்டலில்ரூம், கேரவன் என அடுக்கிக் கொண்டே போகிறாராம் மாளவிகா.கிளாமர் மட்டுமே பண்ண மாட்டேன் என்று கூறுகிறீர்களே, அப்புறம் எதுக்கு சியூ அட்9 இந்திப் படத்தில் பச்சக் பச்சக் காட்சிகளில் நடித்தீர்கள் என்று நாம்அங்கலாய்த்தபோது, அட, அது தேசிய அளவிலான படம் சார், காட்சி அப்படி இருந்தாலும், காட்சியைபடமாக்கியபோதும், படப்பிடிப்பின்போதும் அனைவரும் என்னிடம் ரொம்படீசன்ட்டாக நடந்து கொண்டனர்.எனவே அந்த காட்சியில் நடிக்க நான் தயக்கம் காட்டவில்லை. காட்சியைபடமாக்கியபோது எனக்குள் எந்த உணர்வும் இல்லை. அது நடிப்புதானே என்றுசமாளித்தார்.அப்ப, சர்வதேச அளவில் அவார்டுக்காக ஒரு படம் எடுத்து, அதில் எப்புடி நடிக்கச்சொன்னாலும் ஒப்புக்குவீங்களா என்று மாளுவிடமிருந்து 50 அடி தள்ளிப் போய்,வெகு ஜாக்கிரதையாக ஒரு கேள்வியைக் கேட்டோம்.யூ ..யூ ..யூ.. என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டே அடிக்க ஓடி வந்தார்மாளவிகா.நாம் வாளமீனுக்கும் பாடலைப் பாடியபடியே எஸ்கேப் ஆனோம்.

  By Staff
  |

  கானா உலகநாதனின் புண்ணியத்தால் வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்பாட்டு ஹிட் ஆனாலும் கூட என்னோட ஹாட்டான ஆட்டத்தால்தான் பாட்டு சூப்பர்ஹிட் ஆனது என்று கூறி மாளவிகா அலப்பறை பண்ண ஆரம்பிச்சுட்டாராம்.

  எங்க பார்த்தாலும் இப்போது வாள மீனும், விலாங்கு மீனும்தான்.

  சின்னப் புள்ளைக முதல் பெருசுகள் வரை இந்தப் பாட்டை உச்சரிக்காத வாயேதமிழ்நாட்டில் கிடையாது. அந்த அளவுக்கு பாட்டு சூப்பர் ஹிட் ஆகி விட்டது.


  இதனால் சந்தோஷமாகியிருப்பவர்கள் இரண்டு பேர். ஒருவர், எல்லோ டிரஸ்போட்டு, உடம்பை முறுக்கு கம்பி கணக்கில் படு ஸ்டிராங்காக வைத்துக் கொண்டுசெம எஃபக்ட் கொடுத்த கானா உலகநாதன், இன்னொருத்தர் நம்ம மாளவிகா.

  படு ஒயிலாக மாளவிகா போட்ட குத்தாட்டம், பூவோட சேர்ந்த நாரும் மணக்கும்என்பது மாதிரி, பாட்டோட சேர்ந்த அவரது ஆட்டமும் அட்டகாசமாகி விட்டது.

  இந்தப் பாட்டின் வெற்றியால், ஏகப்பட்ட கானா பிளஸ் குத்தாட்டப் பாட்டு வாய்ப்புமாளுவைத் தேடி ஓடி வருகிறதாம்.

  தமிழில் ஒரு படம் கூட இல்லாமல் இந்தி, கன்னடம் என ஒதுங்கிக் கிடந்த மாளவிகா,அலை அலையென பாட்டு வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதால் ஜாலியாகிப் போய்வருகிற வாய்ப்புகளில் நல்ல வாய்ப்பாக தேடிப் பிடித்து ஒத்துக் கொண்டுவருகிறாராம்.

  வாள மீனைத் தொடர்ந்து அதே டைப்பிலான இன்னொரு குத்துப் பாட்டுக்கு அவர்அடுத்து ஆட்டம் போடவுள்ளார். பாண்டியராஜன் இயக்கத்தில் அவரது மகன் நடிக்கும்கை வந்த கலை படத்தில் தான் இந்த கானா பாட்டாம்.

  இந்தப் பாட்டும் செம குத்தாக அமையும் என்று பெரும் நம்பிக்கையில் உள்ளார்மாளவிகா.

  அதே போல திருமாவளவன் நடிக்கும் அன்புத் தோழி படத்திலும் ஒரு சிறுத்தையை சீண்டாதடா, சிறு நரிக்கூட்டம் தாங்காதடா என்று ஒரு பாடலுக்கும் செம குத்து போட்டிருக்கிறார் மாளவிகா.

  கானா பிளஸ் குத்துப் பாட்டுக்கு ஆட தயாராக இருக்கும் அதே நேரத்தில் தொடர்ந்துஒரே டைப்பிலான பாட்டுக்களில் ஆட விருப்பம் இல்லை என்கிறார் மாளவிகா.


  கவர்ச்சி கோலத்தில் மட்டுமே என்னை ரசிகர்கள் பார்க்கக் கூடாது என நினைக்கிறேன்.அதனால்தான் தொடர்ந்து கானா பாட்டு, குத்துப் பாட்டுக்கு ஆட வேண்டாம் எனமுடிவு செய்துள்ளேன்.

  சில ஹீரோயின் வாய்ப்புகளும் என்னைத் தேடி வந்துள்ளன என்கிறார் மாளு.

  வாள மீனு ஹிட் ஆனதால் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி விட்டார். ஒருபாட்டுக்கு ஆட இனிமேல் ரூ. 4 லட்சம் சம்பளம் தர வேண்டுமாம். கிளாமர் தூக்கலாகவேண்டும் என்றால் டப்பையும் கூட்டித் தர வேண்டுமாம்.

  இதுதவிர, பெங்களூரிலிருந்து வந்து போக பிளைட் டிக்கெட், ஸ்டார் ஹோட்டலில்ரூம், கேரவன் என அடுக்கிக் கொண்டே போகிறாராம் மாளவிகா.

  கிளாமர் மட்டுமே பண்ண மாட்டேன் என்று கூறுகிறீர்களே, அப்புறம் எதுக்கு சியூ அட்9 இந்திப் படத்தில் பச்சக் பச்சக் காட்சிகளில் நடித்தீர்கள் என்று நாம்அங்கலாய்த்தபோது,


  அட, அது தேசிய அளவிலான படம் சார், காட்சி அப்படி இருந்தாலும், காட்சியைபடமாக்கியபோதும், படப்பிடிப்பின்போதும் அனைவரும் என்னிடம் ரொம்படீசன்ட்டாக நடந்து கொண்டனர்.

  எனவே அந்த காட்சியில் நடிக்க நான் தயக்கம் காட்டவில்லை. காட்சியைபடமாக்கியபோது எனக்குள் எந்த உணர்வும் இல்லை. அது நடிப்புதானே என்றுசமாளித்தார்.

  அப்ப, சர்வதேச அளவில் அவார்டுக்காக ஒரு படம் எடுத்து, அதில் எப்புடி நடிக்கச்சொன்னாலும் ஒப்புக்குவீங்களா என்று மாளுவிடமிருந்து 50 அடி தள்ளிப் போய்,வெகு ஜாக்கிரதையாக ஒரு கேள்வியைக் கேட்டோம்.

  யூ ..யூ ..யூ.. என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டே அடிக்க ஓடி வந்தார்மாளவிகா.

  நாம் வாளமீனுக்கும் பாடலைப் பாடியபடியே எஸ்கேப் ஆனோம்.


   உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
   Enable
   x
   Notification Settings X
   Time Settings
   Done
   Clear Notification X
   Do you want to clear all the notifications from your inbox?
   Settings X
   X