“எனக்கும் கோபம் வரும்“ … விஜய் பற்றி அந்த நடிகர் சொன்ன சுவாரசியத் தகவல்!
சென்னை : நடிகர் விஜய் குறித்து மலையாள நடிகர் பகிர்ந்த சுவாரசியத் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை அடுத்து தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படம் ஏப்ரல் 13ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

பீஸ்ட்
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை ரசிகர்கள் தாண்டி பல பிரபலங்களும் திரையில் காண காத்திருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் பல பிரபலங்களும் பீஸ்ட் படத்தினுடைய அப்டேட்டை சமூகவலைதளங்களில் கேட்டு வந்தனர்.

ஜாலியோ ஜிம்கானா
இப்படத்தை மிக பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற அரபி குத்து பாடல் உலக அளவில் பிரபலம் அடைந்தது. விஜய் பாடிய ஜாலியோ ஜிம்கானா பாடல் குறுகிய நேரத்திலேயே சமூக வலைதளங்களில் வைரலாகி புதிய சாதனை படைத்தது. தற்போது இப்பாடலின் முழுநேர வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அம்மாவுடன் பேசினார்
பீஸ்ட் திரைப்படத்தில் மலையாள நடிகர், ஷைன் டாம் சக்கோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற போது, என் அம்மா விஜய்யை பார்க்க வேண்டும் என்று கூறினார். நான் படப்பிடிப்பு தளத்திற்கு எனது அம்மாவை அழைத்து வந்தேன் என் அம்மாவுடன் விஜய் அன்பாக பேசினார் என்றார்.

சுவாரசியத் தகவல்
அப்போது என் அம்மா விஜய்யிடம் தம்பி உனக்கு கோபமே வராதா? என்று கேட்டுள்ளார். அதற்கு விஜய் நானும் சாதாரண மனிதன் தான்மா எனக்கும் கோபம் வரும். ஆனால், நான் அதை வெளிக்காட்ட மாட்டேன், அப்படியே அமைதியாக இருந்து விடுவேன் என்று கூறினாராம். அந்த நடிகர் கூறிய இந்த சுவாரசியத் தகவல் இணையத்தில் தற்போது பேசு பொருளாக உள்ளது.


Click it and Unblock the Notifications











