போதைப் பழக்கத்தை கைவிட காரணம் சொல்லும் மலையாள நடிகர் சாக்கோ.. சகோதரியையும் இழுத்து விடுறாரே!
கொச்சி: சில வாரங்களுக்கு முன்னர் மலையாள நடிகர் ஷான் டாம் சாக்கோ, இந்தியாவில் தடை செய்யப்பட்ட போதைப்பொருளை பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். இவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் இந்த முறையும் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் ஜாமீனில் ரிலீஸ் செய்யப்பட்டாலும், அவரது நிலையைப் பார்த்த காவல்துறை அவரை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க சொன்னது. அவரும் தற்போது போதை மறுவாழ்வு மையத்தில் உள்ளார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
தென்னிந்திய சினிமா உலகில் போதைப்பொருள் பயன்பாட்டில் அதிகம் கைதாகும் நடிகர்கள் என்றால், ஒப்பீட்டு அளவில் மலையாள சினிமா நடிகர்களை குறிப்பிடலாம். இந்த வரிசையில்தான் நடிகர் ஷைன் டாம் ஷாக்கோ கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர் ஷான் டாம் சாக்கோ ஏற்கனவே அதாவது 10 ஆண்டுகளுக்கு முன்னர் படப்பிடிப்புத் தளத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகை ஒருவர் அளித்த புகாரில் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் ஜாமீனில் வெளிவந்த ஷைன் டாம் சாக்கோ, மலையாளம் மட்டுமல்லாமல், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு மலையாளத்தை அடுத்து தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படியான நிலையில் அவர் மீது மீண்டும் போதைப்பொருள் பயன்பாடு குறித்து புகார் அளிக்கப்பட்டது.

ஷைன் டாம் சாக்கோ: இதற்கிடையில் கேரள மாநில காவல்துறை நடத்திய சோதனையில் போதைப்பொருள் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களை விசாரித்ததில் நடிகர் ஷான் டாம் சாக்கோ மற்றும் நடிகர் ஸ்ரீ நாத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் ஷான் டாம் சாக்கோ ஜாமீனில் வெளியானார். மேலும் அவர் போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
பழக்கம் வந்தது இப்படித்தான்: அவரது பேட்டியில், " யாரையும் எளிதில் நம்ப கூடாது என்று எனது பெற்றோர்கள் எனக்கு அடிக்கடி கூறுவார்கள். ஆனால் நம்பிக்கையின் பேரில் தான் எனக்கு இந்த போதைப்பொருள் பழக்கம் ஏற்பட்டது. பத்து ஆண்டுகளுக்கு முன்னரும் நான் போதைப்பொருள் பயன்படுத்தி காவல்துறையிடம் சிக்கியுள்ளேன். அப்போது என்னை விடவும் எனது பெற்றோர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். அந்த தருணத்தில் என்னைப் பார்க்க எர்ணாகுளம் காவல் நிலையத்தில் எனது அப்பா அழுதது எனக்கு இப்போது நினைவில் உள்ளது. அந்த நாளில் எனது அப்பா கதறி அழுதார். அவர் அப்படி அழுது நான் பார்த்ததேயில்லை.
போதையை கைவிட: போதைப்பொருள் பழக்கத்தினால் நான் கைது செய்யப்பட்டது, வெளிநாட்டில் உள்ள எனது தங்கையையும் பாதித்தது. நான் தடை செய்யப்பட்ட போதைப்பொருளை பயன்படுத்தியதால் நான், எனது உடல், எனது குடும்பம் ஆகியவற்றை சீரழித்துள்ளேன். ஆனால் நான் மற்றவர்களை துன்புறுத்தும் தில்லை. இப்போது எனது மனதில் உள்ள விஷயம் என்றால், எனக்காக இந்த பழக்கத்தை விடச் சொன்னால் கூட விடுவேனா என்று தெரியவில்லை. ஆனால் எனது குடும்பத்தினர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் அன்பிற்காக இந்த பழக்கத்தை நான் அடியோடு விடப்போகிறேன்" என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











