twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெரிய படங்களாக இருந்தாலும், கதையில்லாவிட்டால் எங்க நாட்டில் எடுபடாது! - மலேசிய நடிகர் ஹரிதாஸ்

    By Shankar
    |

    இன்று உலகம் சுருங்கிவிட்டது. நாடு விட்டு நாடு சென்று பிற நாடுகளில் தொழில் செய்வதும் கலைப் பணி செய்வதும் சுலபமாகிவிட்டது; சகஜமாகி விட்டது.

    ஹாலிவுட் நடிகர் அர்னால்டு 'ஐ' படவிழாவில் கலந்து கொள்வது முதல் மலேசிய நாட்டு நடிகர்கள் தமிழில் நடிப்பது வரை இந்தப் பரிவர்த்தனை பரந்து விரிந்து பரவுகிறது.

    இந்த வகையில் நடிகர் ஹரிதாஸைக் கூறலாம்.

    நீ நான் நிழல்

    அண்மையில் வெளியாகி பெரிய விளம்பரம் இல்லாமல் நல்ல படம் என்று ஊடகங்கள் முதல் உள்ளூர்வாசிகள் வரை பாராட்டுகிற படம் 'நீ நான் நிழல்'. இப்படத்தில் 'செக்யூரிட்டி அங்கிள்' பாத்திரத்தில் வந்து பிரதான வில்லனாக நடித்திருப்பவர்தான் இந்த ஹரிதாஸ். பார்த்தவர்களின் வசவுகளையே வாழ்த்தாக எண்ணி மகிழ்ந்து வருகிற இவர், ஒரு மலேசிய நடிகர். மலேசிய நாட்டில் தமிழ், மலாய் மொழிகளில் டிவி தொடர்களிலும் சுமார் 40 படங்களிலும் நடித்திருப்பவர் இவர்.சிறந்த நடிகர் விருதை ஆறுமுறை பெற்றிருப்பவர்.

    படத்திற்கான ப்ரமோஷனுக்கு தமிழகம் வந்திருந்தார். இனி அவருடன் பேசலாம்.

    அறிமுகம் பற்றி, இதுவரையிலான நடிப்பு அனுபவம் பற்றி?

    "நான் மலேசியாவில் 15 ஆண்டுகளாக நடித்து வருகிறேன். என் முதல் படம் 'பிராணா' அடிப்படையில் நான் ஒரு டான்சர். எனக்கு நடனம் என்றால் அவ்வளவு பிடிக்கும். தமிழ்,மலாய் என இரண்டு மொழிகளில் சுமார் 40 படங்களில் நடித்து இருக்கிறேன். பல டிவி தொடர்களிலும் நடித்துள்ளேன். "

    Malaysian actor Haridass interview

    நடித்த படங்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படியானவை எவை?

    "எனக்கு திருப்தி தராத வேடங்களில் நான் நடிப்பதில்லை. எவ்வளவு நேரம் வருகிறோம் என்பது முக்கியமில்லை. எவ்வளவு தூரம் கவர்கிறோம் என்பதுதான் முக்கியம்.

    நான் நடித்த படங்களில் 'மிஸ்டர் கார்த்திக்' மறக்க முடியாதது. அதில் ஒரு டாக்டராக வருவேன். ஏஎல்எஸ் என்கிற நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப் போராடுவேன். கடைசியில் மருந்து கண்டு பிடிப்பேன். அந்த நோய் எனக்கே வந்து விடும். அது பிரமாதமான கேரக்டர்.

    'யாந்த்ரா' படத்தில் கோவிலில் காவல் பணி புரியும் கால் ஊனமானவனாக வருவேன்.

    'உருவம்' படத்தில் இரட்டை சகோதரர்களாக நடித்திருப்பேன். இது ஒரு திகில்படம். 'சொல்லாதது ' படத்தில் போலீஸ் அதிகாரியாக தோன்றினேன். 'உணர்வு' படத்தில் தத்துக் குழந்தையை வளர்க்கும் அப்பாவாக வருவேன். இவை அனைத்தும் எனக்கு அந்நாட்டில் சிறந்த நடிகர் விருது வாங்கிக் கொடுத்தவை."

    'நீ நான் நிழல்' பட அனுபவம் பற்றி ?

    "மலேசியாவில் நான் நடித்த 'சொல்லாதது' என்கிற தமிழ்ப் படம் பார்த்துவிட்டு 'நீ நான் நிழல்'' இயக்குநர் ஜான் ராபின்சன் பேஸ்புக்கில் தொடர்பு கொண்டார். அப்படி நடித்தபடம் தான் இது. இதன் படப்பிடிப்பு பெரும்பகுதி மலேசியாவில்தான் நடந்தது. அதனால் எனக்கு பிரச்சினை இல்லை. எல்லாம் சுலபமாக இருந்தது-"

    மலேசியா- தமிழ்நாடு இடையே திரையுலகத் தொடர்புகள் இப்போது எப்படி உள்ளன?

    "கால மாற்றத்தில் இரு நாட்டு மக்களும் நெருக்கமாகி உள்ளனர். தமிழ்ப் படங்களின் வெளிநாட்டு வியாபாரத்தில் மலேசியா பெரிய இடம் வகிக்கிறது. இங்கிருந்து படங்கள் அங்கு வெளியாவதைப் போல அங்கிருந்தும் 'அடுத்த கட்டம்,' 'மைந்தன்' போன்ற படங்கள் இங்கு வெளியாவது மகிழ்ச்சியளிக்கிறது. மலேசிய படைப்பாளிகள் இங்குள்ளவர்களுடன் இணைந்தும் படம் உருவாக்கி வருகிறார்கள். இருவரும் இணைவது நல்ல மாற்றம். இப்படி உருவாகும் ஒரு புதிய படத்தில் நான் நடிக்கிறேன். அதன் படப்பிடிப்பு 70 சதவிகிதம் இங்கே காரைக்குடியில் நடக்க இருக்கிறது. ''

    மலேசிய ரசிகர்கள் எப்படி?

    "மலேசிய ரசிகர்கள் நட்சத்திர நடிகர்களை நேசிப்பவர்கள்தான். அதற்காக கதை இல்லாத மேலோட்டமான படங்களை ஏற்றுக் கொள்வதில்லை. புதிய பாணியில் வரும் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', 'சூது கவ்வும்' போன்ற படங்களையும் வரவேற்கத் தயங்குவதில்லை. அவர்களை ஏமாற்ற முடியாது.''

    மலேசியாவில் எப்படி செட்டிலானீர்கள்..?

    ''எங்களுக்குப் பூர்வீகம் தமிழ்நாடுதான். எங்கள் கொள்ளுத்தாத்தா காலத்தில் மலேசியா போனவர்கள். எங்கள் அப்பா அம்மாவுக்கு 3 பிள்ளைகள். எனக்கு 2 அண்ணன்கள். நான் கடைசி. எனக்குத் திருமணமாகி விட்டது.3 வயதில் பெண்குழந்தை உள்ளது.

    நான் சினிமாவில் நடிக்க என் குடும்பம் ஆதரவும் ஊக்கமும் தருகிறது. இல்லாவிட்டால் என்னால் நடிக்க முடியாது. நான் எளிமையானவன். சாதாரண வாழ்க்கை முறையை பின்பற்றுபவன். நாளைக்கே இறந்தால் நான் ஹரிதாஸ் அல்ல. வெறும் உடல்தான். நடிப்பு என்பதை ஒரு தொழிலாக மட்டுமே பார்ப்பவன் நான்.

    எப்படிப்பட்ட படங்களில் நடிக்க ஆசை?

    சிறிய அளவில் வந்தாலும் பேசப்பட வேண்டும். பாஸிடிவ் நெகடிவ் பற்றிக் கவலைப்பட வில்லை. எஃபெக்டிவ்வாக இருக்கவேண்டும். அவ்வளவுதான்.

    வேறுதுறை ஆர்வம்?

    எனக்கு இயக்குவதில் ஆர்வம் உண்டு. 'பாப்பா' 'நல்லதோர் வீணை செய்தே' என்று 2 குறும் படங்கள் இயக்கியுள்ளேன். இப்போது 3 படங்கள் கையில் உள்ளன. . இப்போது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்துகிறேன்," என்கிறார் ஹரிதாஸ்.

    English summary
    Here is an interview with Malaysian actor Haridass, who played crucial role in Nee Naan Nizhal.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X