»   »  நான் தமிழச்சி.. பொங்கும் ராகினி!

நான் தமிழச்சி.. பொங்கும் ராகினி!

Subscribe to Oneindia Tamil


என்னை வேற்று மொழிக்காரியாக சிலர் வதந்தி பரப்பி விடுகிறார்கள். நான் பச்சைத் தமிழச்சியாக்கும் என்று பொறுமுகிறார் 'தீ' ராகினி.


சுந்தர்.சி.க்கு ஜோடியாக தீ என்ற படத்தில் நடிக்கிறார் ராகினி. வாவ் என்று சொல்லும் அளவுக்கு படு அழகுப் பெண் இவர். மலேசியாவிலிருந்து வந்தவர் என்பதால் மலைக்க வைக்கும் கலருடனும், தித்திக்கும் அழகுடனும் தீ படத்தில் சுந்தர்.சியுடன் ஜோடி போட்டு நடிக்கிறார்.

இவரை மிஸ்.மலேசியா பட்டம் பெற்றவர் என்று சிலர் கூறுகிறார்களாம். ஆனால் உண்மையில் நான் மிஸ்.மலேசியா பட்டம் பெற்றவள் இல்லை என்று தன்னடக்கத்தோடு கூறுகிறார் ராகினி.

மலேசியாவில் உள்ள முன்னணி மாடல்களில் ராகினியும் ஒருவராம். ஆனாலும் ரகளையான அழகுடன் இருப்பதால் ராகினிக்கென்று மாடல்கள் வட்டாரத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும், கெளரதையும் இருக்கிறதாம். அங்குள்ள பல நிகழ்ச்சிகளில் ராகினி கண்டிப்பாக கலந்து கொள்வாராம். ஏராளமான விளம்பரப் படங்களிலும் கூட நடித்துள்ளாராம்.

சரி உங்களுக்கு மலாய் நல்லாத் தெரியுமா என்று கேட்டால், சாரி, எனக்கு தமிழ்தான் நன்றாகத் தெரியும் என்று கூறி நம்மை திகிலில் ஆழ்த்தினார் ராகினி. அது எப்படி என்று கேட்டால், நான் பச்சை தமிழச்சி சார், அப்புறம் தமிழ் தெரியாமல் எப்படி என்று கேட்டு அசத்துகிறார்.

ராகினிக்கு சொந்த ஊர் வேலூர் பக்கமாம். ரொம்ப காலத்திற்கு முன்பே மலேசியாவில் போய் செட்டிலாகி விட்ட குடும்பமாம். எனவே தமிழ் சினிமா என்றால் ராகினிக்கு ரொம்ப இஷ்டமாம். அத்தோடு மாடலிங்கில் வேறு பிரபலமாகி விட்டதால் மீடியேட்டர்கள் மூலம் கோலிவுட்டுக்குப் ஆல்பங்களை அடுக்கி அனுப்பி வைக்க, வந்தது சுந்தர்.சி.யுடன் ஜோடி போடும் வாய்ப்பு.

அழகோடு, அசத்தலாக நடிக்கவும் செய்கிறாராம் ராகினி. இது சுந்தர்.சி.க்குப் பிடித்துப் போக தனது அடுத்த படத்திலும் நீங்கதான் ஹீரோயின் என்று கூறி விட்டாரம் சுந்தர்.சி. அத்தோடு ராகினியின் திறமைகளைப் பாராட்டவும் செய்தாராம்.

தமிழில் ஒரு கலக்கு கலக்குவதுதான் எனது லட்சியம். கிளாமர், நடிப்பு, கேரக்டர் என சகலகலா துறைகளிலும் கலகலக்க வைக்கப் போகிறேன் என்று முண்டா தட்டிக் கூறுகிறார் மலேசிய ராகினி.

Read more about: rakini

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil