பொது இடத்தில் அடிவாங்கினாரா விஜய்?.. எஸ்.ஏ.சி துரோகியா? புஸ்ஸி ஆனந்த் தான் காரணம்.. பிரபலம்!

சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்கிற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி, 234 தொகுதியில் தனித்து போட்டியிட்டுள்ளார். விஜயின் வருகையால் தேர்தல் களம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பாக இருந்தது. இந்த தேர்தலில் 85 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். இதில், ஆட்சியை பிடிக்கப்போகிறார்கள் என்பதுமே 4 ந் தேதி தெரிந்துவிடும்.

இந்நிலையில் Puthiya Sinthanai யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து இருக்கும் அரசியல் ஆலோசகர் மணிகண்டன் வீராசாமி, விஜயின் அரசியல் குறித்து வெளிப்படையாக பல விஷயத்தை பேசி உள்ளார். அதில், அரசியல் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி அதை நேர்மையாக அணுகினால் அதற்கு நல்ல தீர்வு கிடைக்கும். சினிமாவில் விஜய் கடுமையாக உழைத்தார் உச்சத்திற்கு வந்தார். அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. அதேபோல விஜய் கட்சியை ஆரம்பித்து தொண்டர்களுக்கு எல்லாம் மாவட்ட செயலாளர் பதவி கொடுத்தார். தனக்கு தெரிந்த சிலருக்கு பதவி கொடுத்தார். ஆனால், பெரும்பாலும் புஸ்ஸி ஆனந்து தனக்கு தெரிந்தவர்களுக்கு தான் பதவி கொடுத்தார்.

Vijay SA chandra sekar bussy anand

எஸ்.ஏ.சி துரோகியா?: இந்த கட்சியை ஆரம்பித்தது எஸ்.ஏ. சந்திரசேகர். ஆனால் இடையில் வந்தால் புஸ்ஸி ஆனந்த் அவர்களை எல்லாம் துரோகிகள் என்று சொல்லி அவர்களை வெளியில் அனுப்பிவிட்டார். அதில், முதலில் காலியானது யாரென்றால் விஜயின் அப்பா எஸ்.எஸ் சந்திரசேகரை தான். அப்பாவிற்கும் மகனுக்கும் ஏற்கனவே ஒரு ஈகோ பிரச்சனை இருந்திருக்கிறது. அதாவது ஒரு பொது இடத்தில் அப்பாவும் மகனும் பேசிக்கொண்டு இருக்கும்போது விஜய் அப்பாவை எதிர்த்து சில வார்த்தைகளை பேசி இருக்கிறார். அது தவறான முடிவு என எஸ்.ஏ.சந்திரசேகர் பலமுறை சொல்லியும் கேட்காததால் கோபத்தில் விஜய்யை எஸ்.ஏ.சி அடித்துவிட்டார்.

புஸ்ஸி தான் காரணம்: இதன் பிறகு தான் விஜய் எஸ்.ஏ.சந்திரசேகர் இடையே பிரச்சனை இருந்து கொண்டே இருந்தது. இதை தெரிந்து கொண்ட புஸ்ஸி ஆனந்த், அப்பா கட்சிக்கு எதிராக செயல்படுகிறார், துரோகம் செய்கிறார் என சின்ன விஷயத்தி ஊதி பெரிதாக்கி கட்சிதொடங்குவதற்கு முன்பே இவரை கழட்டி விட்டு விட்டார். புஸ்ஸி அப்பா பற்றி சொல்லும் போதே விஜய் அதை கண்டித்து இருக்க வேண்டும் இதை விஜய் செய்ய தவறிவிட்டார் மணிகண்டன் வீராசாமி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

Read more about: vijay bussy anand விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X