»   »  2 வருஷத்துக்கு தமிழுக்கு நோ: மணிரத்னம்

2 வருஷத்துக்கு தமிழுக்கு நோ: மணிரத்னம்

Subscribe to Oneindia Tamil

இன்னும் 2 வருடங்களுக்கு தமிழ்ப் படங்கள் எதையும் இயக்கும் ஐடியாவே இல்லை என்று கூறியுள்ளார் மணிரத்னம்.

சர்ச்சைக்குரிய விஷயங்களை எடுத்து படங்களாக்கி பரபரப்பை ஏற்படுத்துவதில் மணிரத்னத்துக்கு இணை அவேரதான். பம்பாய், ரோஜா, இருவர்,குரு என அவரது படங்களில் முக்கால்வாசி சர்ச்சைகளைக் கிளப்பிய படங்கள்தான்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு குரு என்ற படத்தை இந்தியில் உருவாக்கிய மணி, தமிழ் படங்களைப் புறக்கணிக்கிறார் என்ற புலம்பலைத் தணிக்ககுருவை தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட்டார்.

குரு வெற்றிகரமாக முடிந்தும் கூட அடுத்துத் தமிழ்ப் படத்தை இயக்கப் போவதில்லையாம். அடுத்த படமும் இந்தியில்தானாம் (ராஜீவ், சோனியாகாதல் கதை என்று சிலர் கிசுகிசுக்கிறார்கள்)

இன்னும் 2 வருடங்களுக்குத் தமிழில் படம் எதையும் இயக்கும் ஐடியா மணியிடம் இல்லையாம். இந்தியில் எடுக்கும் படங்களை அப்படியேதமிழிலும் டப் செய்து வெளியிடுவாராம்.

மணி இயக்கத்தில் வெளியான குரு, 50 நாட்களைத் தொட்டு விட்டது. சென்னையில் மொத்தமே 124 பேர் மட்டுமே உட்கார்ந்து பார்க்கக் கூடியஐனாக்ஸ் தியேட்டரில் (இங்கு மட்டும்தான் படம் ஓடுகிறது!) குரு 50 நாட்களைத் தாண்டியுள்ளதைத் தொடர்ந்து தியேட்டருக்கு மணி வருகைதந்தார்.

அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த மணி, வழக்கம் போல மூடு மந்திரமாக பேசினார். குரு ரசிகர் கூட்டத்தை கவரவில்லை என்பதை நான்உணர்கிறேன். இருந்தாலும் கூட்டத்தைக் கூட்ட மட்டுமே படங்களை எடுக்க முடியாது.

குருவை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பும் ஐடியா இல்லை. இந்தப் படத்தின் கதைக்கும், நிஜ கேரக்டர்களுக்கும் இடையே ஒற்றுமை இருப்பதாக நான்நினைக்கவில்லை.

ஆஸ்கர் விருதுக்கு ஏன் அனுப்பப் போவதில்லை என்ற கேள்விக்கு மணி பதிலளிக்கையில், ஆஸ்கர் விருது என்பது ஹாலிவுட் படங்களை மட்டுமேகருத்தில் கொண்டு அமெரிக்கர்களால் நிர்மாணிக்கப்பட்ட ஒரு விருது.

பிற நாட்டுப் படங்களுக்கு வெளிநாட்டுப் படம் என்ற ஒரே பிரிவின் கீழ் மட்டுமே அவர்கள் விருது தருகிறார்கள். இந்தியப் படங்களை விருதுப்பட்டியலில் சேர்க்கவே அமெரிக்கர்கள் தயங்குகிறார்கள் என்று நான் கேள்விப்பட்டுள்ளேன்.

எனவே ஆஸ்கரை குறி வைத்து இயங்குவது என்பது சரியான செயலாக இருக்காது. அதேபோல விருது தர மறுக்கிறார்கள் என்று அவர்களை குறைசொல்வதும் சரியல்ல. நமது கலாச்சாரம், வரலாறு, பழக்க வழக்கம் ஆகியவை அவர்களுக்குத் தெரியாது, புரியாது என்றார் மணி.

உங்ளது அடுத்த படத்தில் ரஜினி அல்லது கமல் இடம் பெறக் கூடுமா என்ற கேள்விக்கு, அப்படி ஒரு சிந்தனையை நான் கற்பனை கூட செய்துபார்க்கவில்லை. இதெல்லாம் பத்திரிக்கைகள் கிளப்பும் செய்திகள் என்றார் மர்மப் புன்னகையுடன்.

இந்தியில் காட்டும் மோகத்தை அப்படியே தமிழ் பக்கமும் காட்டினால் நல்ல சில படங்களை காணும் பாக்கியம் தமிழ் ரசிகர்களுக்குக் கிடைக்கும்.கவனிப்பீங்களா மணி?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil