70 வயது கமலுக்கு 42 வயது த்ரிஷா ஜோடியா?.. மணிரத்னத்திடமே கேட்டுட்டாங்க.. என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: 1954ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி பிறந்த கமல்ஹாசன் கடந்த ஆண்டு தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த ஆண்டு நவம்பர் மாதம் வந்தால் 71வது பிறந்தநாளை கொண்டாட காத்திருக்கிறார். நடிகை த்ரிஷா இந்த மே மாதம் 4ம் தேதி தனது 42வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். தக் லைஃப் படத்தில் த்ரிஷா சிம்புவுக்கு ஜோடி என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு டிரைலரில் வெளியான ஒரு சில சீன்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

70 வயது கமல்ஹாசனுக்கு த்ரிஷா ஜோடியா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. த்ரிஷாவை விட அபிராமி ஒரு வயது இளையவர் என்றும் 41 வயது அபிராமியும் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிப்பது குறித்த விமர்சனங்களை எப்படி பார்க்கிறீங்க என இயக்குநர் மணிரத்னத்திடமே சமீபத்திய பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும், வயதான நபருடன் இளம் பெண் உறவில் இருப்பதை எல்லாம் திரைப்படத்தில் காட்டலமாஅ? என்கிற கேள்விக்கு நறுக்கென பதில் அளித்துள்ளார் மணிரத்னம்.

Thug Life kamal trisha

சூடு பறக்கும் தக் லைஃப் புரமோஷன்: பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழா சாய் ராம் கல்லூரியில் முடிந்த கையோடு ஓய்வெல்லாம் எடுக்காமல் அடுத்த நாளே நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் கமல்ஹாசன், மணிரத்னம் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் பங்கேற்றது எல்லாம் முரட்டுத்தனமான புரமோஷன். விக்ரம் படத்துக்குப் பிறகு கமல்ஹாசன் இந்த அளவுக்கு தக் லைஃப் மீது நம்பிக்கை வைத்து இறங்கி அடித்து வருகிறார் என்றே தெரிகிறது.

சமூகத்தில் இருந்து விலகி போறாங்க: 'சுகர் பேபி' பாடல் மணிரத்னம் படத்தில் இடம்பெற்றதை பார்த்து பலரும் ஷாக் ஆகியுள்ளனர். "மேடம் ஐ ஆம் யுவர் ஒன்லி ஆடம்" என கமல்ஹாசன், த்ரிஷாவிடம் ஜாயின்ட் அடிக்க டிரை பண்ணும் காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள் ஏகப்பட்ட ட்ரோல்களை பதிவிட்டு வருகின்றனர். இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த மணிரத்னம் சமூகத்தில் இதெல்லாம் இல்லை என நினைத்து சமூகத்தை விட்டே விலகிச் செல்கின்றனர். உலகம் முழுவதும் வயதானவர்கள் தங்களின் வயதை விட பல மடங்கு சிறிய வயதினருடன், அது ஆணாக இருக்கட்டும் அல்லது பெண்ணாக இருக்கட்டும் உறவு கொள்வது உலகத்தில் எங்கேயும் நடக்காத விஷயம் ஒன்றும் இல்லையே என்று நச்சென பதில் அளித்துள்ளார்.

Thug Life kamal trisha

70 வயது கமலுக்கு 42 வயது த்ரிஷா ஜோடியா?: நடிகர்கள் எப்போதும் கமல்ஹாசன், த்ரிஷா என நினைத்துப் பார்த்து நடிக்க மாட்டார்கள். அந்த கதாபாத்திரங்களை மட்டுமே உள்வாங்கி நடிப்பார்கள். ரசிகர்களும் எவால்வ் ஆக வேண்டும், நீங்க யாருமே அது கமல்ஹாசன் என்றோ த்ரிஷா என்றோ பார்ப்பதை தவிர்த்துவிட்டு அந்த கதாபாத்திரங்கள் குறித்து பார்த்தால் கண்டிப்பாக இந்தளவுக்கு சர்ச்சைக்குரிய அல்லது விவாதப் பொருளாகவோ இது மாறியிருக்காது என அழகாக பதிலளித்துள்ளார் மணிரத்னம்.

தக் லைஃப் ரிலீஸ்: வரும் ஜூன் 5ம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, சிம்பு, அபிராமி, அசோக் செல்வன், நாசர், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் வெளியாகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவி. கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்திய சினிமாவே பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ஒரு படமாக இது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X