மஞ்சள் வீரன் படத்துல நான் நடிக்கவே இல்லை.. இயக்குநர் என்னை ஸ்பாயில் பண்ணிட்டாரு.. இளம் நடிகை பகீர்!

சென்னை: மஞ்சள் வீரன் படத்தை ஆரம்பித்ததில் இருந்தே சர்ச்சை மேல் சர்ச்சையாக கிளம்பி வரும் நிலையில், அந்த படத்தின் ஹீரோ என அறிவிக்கப்பட்ட டிடிஎஃப் வாசனையே படத்தில் இருந்து அதிரடியாக இயக்குநர் செல்அம் நீக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மஞ்சள் வீரன் படத்தில் டிடிஎஃப் வாசனுக்கு நண்பராக நடிக்க வந்த கூல் சுரேஷ் தான் படத்தின் புது ஹீரோ என்றும் அறிவிக்கப்பட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. செல்அம் ஒரு இயக்குநரே கிடையாது என்றும் ஒரு நாள் கூட ஷூட்டிங்கே நடக்கவில்லை என்றும் டிடிஎஃப் வாசன் பேசியது பகீர் கிளப்பிய நிலையில், அதைவிட பெரிய குண்டை இளம் நடிகை பிராணா போட்டுள்ளார்.

manjal veeran actress brana cool suresh

மஞ்சள் வீரன் படத்தில் தான் நடிக்கவே இல்லை என்றும் செல்அம் தனது பெயரை டேமேஜ் செய்து விட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

டிடிஎஃப் வாசன் வெளியேற்றம்: யூடியூப் சேனல் மூலமாக பைக் சாகச வீடியோக்களை போட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமான டிடிஎஃப் வாசன் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்த நிலையில், கடைசியாக மஞ்சள் வீரன் படத்தில் இருந்தும் அவர் நீக்கப்பட்டது பெரும் பரபரப்பை கோலிவுட் வட்டாரத்தில் கிளப்பியது.

கூல் சுரேஷ் தான் ஹீரோ: டிடிஎஃப் வாசன் சென்ற நிலையில், கூல் சுரேஷை வைத்து செல்அம் படம் இயக்கப் போகிறார் எனக் கூறப்பட்டது. மஞ்சள் வீரனாக கூல் சுரேஷ் இருக்கும் புதிய போஸ்டர் ஒன்றும் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. ஆனால், இதுவரை அந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்கவில்லை என்றும் தான் அந்த படத்தில் நடிக்கவே இல்லை என்றும் அது எல்லாமே ஒரு செட்டப் தான் என நடிகை பிராணா வெளிப்படையாக பேசியுள்ளார்.

நான் அந்த படத்தில் நடிக்கவே இல்லை: ஹரா படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் மகேஷ்வரா படத்தில் நடித்து வருகிறேன். இன்னுமொரு பெயரிடாத பேய் படத்தில் நடித்து வருகிறேன். அந்த படத்தில் கூல் சுரேஷ் உடன் நடித்து வருகிறார். திடீரென ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு செல்அம் வந்த நிலையில், கூல் சுரேஷ் மாலை எல்லாம் ஏற்பாடு செய்து போட்டு போட்டோ எடுத்தனர். அதை தவிர எனக்கு வேறு ஒன்றும் தெரியாது. ஆனால், நான் மஞ்சள் வீரன் படத்தில் கூல் சுரேஷ் ஜோடியாக நடிப்பதாக கிளப்பி விட்டனர். ஆனால், அது சுத்தப் பொய் அந்த படத்தில் நான் கமிட்டே ஆகவில்லை என வெளிப்படையாக இயக்குநர் செல்அம் செய்தது பித்தலாட்டம் என பேசியுள்ளார் பிராணா.

அவரெல்லாம் டைரக்டரே கிடையாது: செல்அம் எல்லாம் ஒரு டைரக்டரே கிடையாது. தேவையில்லாமல் பில்டப் கொடுத்து ஊரை ஏமாற்றி வருகிறார். மஞ்சள் வீரன் படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்தால் கூட நடிக்க மாட்டேன். படம் ஆரம்பிக்கும் முன்னதாகவே இத்தனை நெகட்டிவிட்டி இருக்கும் ஒரு படத்தில் இணைந்து என் வாழ்க்கையை நாசமாக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை என நடிகை பிராணா பளிச்சென பேசி பரபரப்பைக் கூட்டியுள்ளார். கூல் சுரேஷ் நடிப்பில் செல்அம் இயக்கத்தில் மஞ்சள் வீரன் என்கிற படமே வராது என்பதை போலவே பிராணா பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X