விஜய் கூட நடிக்க ஆசை... பப்ளி பேபி மஞ்சிமா மோகனின் பிரத்யேக பேட்டி!
சென்னை: தமிழ், மலையாளம் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை மஞ்சிமா மோகன்.
தற்போது ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் களத்தில் சந்திப்போம் திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது.
களத்தில் சந்திப்போம் படத்தை குறித்தும் தன்னுடைய அனுபவங்கள் குறித்தும் பல செய்திகளை க்ளோஸ் கால் நிகழ்ச்சிக்கு பேட்டியளித்துள்ளார் மஞ்சிமா மோகன்.

நடிக்க காரணம்
இந்த படத்தில் நடித்ததற்கான முக்கிய காரணம் என்ன என்ற கேள்விக்கு, இந்த சமயத்தில் ஒரு நல்ல கமர்சியல் படத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாகவும், இந்த படமானது சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 90வது படம் என்பதாலும் நடிக்க முடிவு செய்தேன் என கூறியுள்ளார்.

பிடித்த பாடல்
ஜீவா - யுவன் காம்போவில் எப்போதும் பாடல்கள் ஹிட்டாகும். இந்த படத்தில் பிடித்த பாடல் என்னவென்ற கேள்விக்கு, படக்குழு முதலில் வெளியிட்ட Friendhship பாடலும், மற்றொரு சோகப் பாடலும் தனக்கு பிடிக்கும் எனவும் பேட்டியளித்துள்ளார் மஞ்சிமா மோகன்.

லாக்டவுனில் நல்ல காரியம்
லாக்டவுனில் பன்முகத்தன்மை கொண்ட திறமைசாலிகளை தனது இன்ஸ்டாகிறாம் பக்கத்தில் பதிவிட்டு அடையாளம் காட்டியிருக்கிறார். இந்த ஆசை கல்லூரி படிக்கும் போதிலிருந்தே இருந்ததாம். லாக்டவுன் முடிந்த பின்னர் வேலைகள் அதிகமானதால் அதை தொடர முடியவில்லை எனவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மஞ்சிமா விருப்பம்
பெரிய திரை பிரபலங்களுடன் நடித்துள்ள மஞ்சிமா மோகனுக்கு யாருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது என்ற கேள்விக்கு, இது போன்ற கேள்விக்கு நான் எப்போதும் தளபதி விஜய் என்று தான் பதிலளிப்பேன் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

முதல் பாகம்
இந்த முதல் பாக பேட்டியில் மஞ்சிமா மோகன் இன்னும் பல கேள்விகளுக்கு ரசிக்கும் படியாக பதிலளித்துள்ளார். இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் ஃபில்மி பீட் யூ டியூப் சேனலில் கண்டு களியுங்கள்.


Click it and Unblock the Notifications











