அசுரனில் குடும்பமாகவே வாழ்ந்துட்டோம்... பாசத்தை பிரிக்க முடியாது - மஞ்சுவாரியர்
Recommended Video
சென்னை: அசுரன் படத்தில் யாருமே நடிக்கலை ஒரு குடும்பமாகவே வாழ்ந்துட்டோம் என்று நடிகை மஞ்சுவாரியாரும் அவரது மகனாக நடித்த கென் கருணாசும் கூறியுள்ளனர். அசுரன் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. பல பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்ததால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தில் தனுஷ் மனைவியாக நடித்த மஞ்சுவாரியரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது. அதே போல கென் கருணாஸ் நடிப்பும் பலராலும் பாராட்டப்படுகிறது. இருவரும் இணைந்து நமது பிலிமி பீட் இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ளனர்.
படப்பிடிப்பில் மட்டுமல்ல சூட்டிங் முடிந்த பின்னரும் குடும்பமாகவே பேசிக்கொண்டிருந்தோம். ஜாலியாகவே இருந்தோம் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டோம். பாசமாக தொடர்கிறது எங்களின் உறவு.

விடிய விடிய மெசேஜ் செய்வோம் அந்த பாசம் இன்னமும் தொடர்கிறது என்று முடிக்கிறார் கென். அம்மாவும் மகனும் போல நாங்க இன்னமும் பேசிக்கொள்வோம்.
நான் வெற்றி மாறனின் படம் எல்லாம் பார்த்தாலும் அனைத்துமே தனித்துவமானவே. அவர் எடுத்துக்கொண்ட படங்கள் எல்லாமே தனித்து தெரியும். ஐந்து படங்களுமே அற்புதமானவை. தனுஷ் வெற்றிமாறன் இரண்டு பேருமே சாதனையாளர்கள். சினிமா சம்பந்தப்பட்ட விசயங்களை பேசாமலேயே நிறைய சாதித்திருக்கிறார்.
வெற்றிமாறன் சொல்வதை தனுஷ் விசுவலாக கொண்டுவருவார். டைரக்டர் சொல்வதை டெடிகேட்டடாக செய்வார் என்று தனுஷ் பற்றி பெருமையாக பகிர்ந்து கொண்டார் மஞ்சுவாரியார்.
அசுரன் தவிர்த்து வேறு பக்கம் பேச்சு திரும்பியது. ஷோபானா என்றால் எனக்கு உயிர் அவருடன் இணைந்து நடிக்க ஆசையக இருக்கிறேன். கீர்த்தியின் மகாநடி பார்த்து அசந்து போயிருக்கிறேன். சிறு வயதில் இருந்து தெரிந்தவர் என்றாலும் அவர் தேசிய விருதுக்கு தகுதியானவர்தான்.
கேரளாவில் இருந்து வந்து ரேவதி, ஊர்வசி, நித்யா மேனன், நயன்தாரா, அமலாபால் என பலரும் நன்றாக நடிக்கிறார்கள். எல்லோரும் ரொம்ப டேலண்ட் என்று கூறி புகழ்ந்தார் மஞ்சுவாரியார். தமிழ் சினிமாவில் மேலும் நிறைய படங்கள் நடிக்க நன்றியும் வாழ்த்துக்களும் கூறி விடை பெற்றோம்.


Click it and Unblock the Notifications











