கல்யாணமான இரண்டே மாசத்துல அந்த ஆளு...: ஊர்வசி பரபர பேட்டி
திருவனந்தபுரம்: திருமணமான இரண்டே மாதத்தில் மனோஜ் கே ஜெயன் தன்னை கட்டாயப்படுத்தி படங்களில் நடிக்க வைத்ததாக நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார்.
[Read This: எனக்கு குடிப்பழக்கத்தை கற்றுக் கொடுத்ததே 'அவர்' தான்: நடிகை ஊர்வசி]
நடிகை ஊர்வசி தனது கணவரான மலையாள நடிகர் மனோஜ் கே ஜெயனை பிரிந்து விவாகரத்து பெற்றார். இதையடுத்து இரண்டாவது திருமணம் செய்த ஊர்வசி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அளித்த பேட்டி என்று மலையாள ஊடகங்களில் கூறப்பட்டிருப்பதாவது,

மனோஜ்
எனக்கு திருமணமாகி இரண்டே மாதத்தில் மனோஜ் என்னை கட்டாயப்படுத்தி படங்களில் நடிக்க வைத்தார். அவருடன் வாழ்ந்த காலத்தில் என்னை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தினார் தெரியுமா?

குடி
எனக்கு குடிப்பழக்கம் ஏற்படவும் மனோஜ் மற்றும் அவரது குடும்பத்தார் தான் காரணம். அவர்கள் குடும்பத்தோடு சேர்ந்து உட்கார்ந்து மது அருந்துவார்கள்.

சுயசரிதை
நான் சுயசரிதை எழுத முடிவு செய்துள்ளேன். அதில் மனோஜுடன் வாழ்ந்த காலத்தில் நான் பட்ட கஷ்டங்களை எல்லாம் குறிப்பிடுவேன் என ஊர்வசி தெரிவித்துள்ளார்.

விவாகரத்து
விவாகரத்து வழக்கு நடந்தபோது ஊர்வசி மது அருந்திவிட்டு நீதிமன்றத்திற்கு வந்ததாக கூறப்பட்டது. மேலும் பொது நிகழ்ச்சி ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக வந்த ஊர்வசி குடிபோதையில் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் தனது குடிப் பழக்கத்திற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











