For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இந்த பாட்டெல்லாம் இவங்களா வாசிச்சாங்க? மிரளவைக்கும் மனோன்மணி... சாரங்கி இசைக்கலைஞர் !

  |

  சென்னை: உணர்ச்சிமயமான காட்சிகளைக் கொண்ட திரைப்படங்கள் உலகளவில் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுவிடும். அதிலும் சில இசைகள் மனதை புரட்டிப்போட்ட பிறகுதான் பாடலே துவங்கும்.

  கணவர் வாங்கித்தந்த முதல் சாரங்கி | Sarangi Player Manonmani p-03| சாரங்கி மனோன்மணி| Filmibeat Tamil

  7ஜி ரெயின்போ காலனி படத்தில் கனாக்காணும் காலங்கள், தளபதி திரைப்படத்தின் சின்னத்தாயவள் போன்ற பாடல்களில் வரும் துளைத்தெடுக்கும் இசை கிடைப்பது "சாரங்கி" என்ற இசைக்கருவியிலிருந்துதான்.

  வாழ்வின் அதி உன்னதத்தை உணர்த்துகிறது'ஹோம்'… அற்புதமான படம்… நெகிழ்ந்த வசந்தபாலன் !வாழ்வின் அதி உன்னதத்தை உணர்த்துகிறது'ஹோம்'… அற்புதமான படம்… நெகிழ்ந்த வசந்தபாலன் !

  வட இந்திய இசைக்கருவியாக இருந்தாலும் தமிழ்த்திரைப்படங்களில் நங்கூரமாய் மனதைப்பிசையும் சூழலை கொடுக்கக் கூடியது. தாத்தா, அம்மா, மகள் என மூன்று தலைமுறையாக தில்ருபா, ஷனாய் ,சாரங்கி போன்ற இசைக்கருவிகளோடு தொடர்புடைய மனோன்மனி குடும்பம் நிறையவே சாதித்து உள்ளனர் . தென்னிந்திய திரைப்படங்ளுக்கு சாரங்கி இசைக்கருவி வாசிக்கும் ஒரே பெண் கலைஞர் என்று பாரும் பாராட்டி உள்ளனர் . நமது பிலிம்பீட்க்கு கொடுத்த சுவாரஸ்யமான சிறப்பு பேட்டி இதோ..

  சாரங்கியே சகலமும்

  சாரங்கியே சகலமும்

  கேள்வி : சாரங்கிதான் எனக்கு சகலமும்ன்னு முடிவெடுத்தது எப்போது?"

  பதில் : சின்ன வயசுலஇருந்தே ரொம்ப ஆர்வம். தில்ரூபா கூட வாசிச்சிருக்கேன். 10வது படிக்கிறப்பவே சீரியல்களுக்கெல்லாம் வாசிச்சேன். சாரங்கி மேலயும் ஆர்வம் அதிகம். ஆனா வீட்ல, இப்போதைக்கு படிப்ப பாருன்னு சொல்லிட்டாங்க. நானும் ஐடி, சாப்ட்வேர்ன்னு வேற ஃபீல்டுல இருந்தேன். கல்யாணத்துக்கு அப்பறமா எனக்கு பிடிச்ச விஷயத்த பண்ணனும்ன்னு முடிவெடுத்து சாரங்கி வாசிக்கிறதயே முதன்மையா ஆக்கிட்டேன்.

  சின்னத்தாயவள்.. தந்த ராசாவே

  சின்னத்தாயவள்.. தந்த ராசாவே

  கேள்வி: மனச உருக்கும் இசைக்கு மட்டும்தான் சாரங்கியா?"

  பதில் : அப்படி சொல்லிட முடியாது. அதுவும் கூட. ரொம்ப ஹார்ட் டச்சிங் ஆன சீன்னெல்லாம் அழுகையே வர வச்சிடும் இந்த சாரங்கி. ஆனா அதுக்கு மட்டும்தான்னு இல்லாம, அம்மா செண்டிமெண்ட்ல்லாம் மாத்தி.. ஃபோக் சாங் க்கும் கூட பயன்படுத்த முடியும்ன்னு காமிச்சார் ஏ ஆர் ரகுமான். உதாரணத்துக்கு ஊர்வசி ஊர்வசி பாட்டு. அப்பறம் இமான் சாரும் ஒரு வெரைட்டி காமிச்சிருப்பாரு. ரம்மி படத்துல, கூடமேல கூடவச்சிங்கிற பாடலுக்கு சாரங்கி வாசிச்சிருப்பேன். அதுகூட ரொம்பவே டிப்ரண்ட்டா இருக்கும்." என சொல்லி நமக்காக அந்த பாடல்களை வாசித்தும் காண்பித்தார்.

  முதல் குருஜி

  முதல் குருஜி

  கேள்வி : உங்க இசை குரு பத்தி சொல்லுங்களேன்

  பதில் : நிச்சயமா சொல்லியே ஆகனும். என் முதல் குருஜி மதுரை டி சீனிவாசன். அடுத்தது குல்தீப் சாகர். ரெண்டு பேர் கிட்டயும் ரொம்ப வருஷமா நான் கர்னாடிக் கத்துகிட்டேன். அப்பறம் சாரங்கி கத்துக்க குருவ தேடித்தேடி டெல்லிக்கு போயி "உஸ்தாத் குலாம் சாபிர்கான்"ங்கிறவர் கிட்டதான் கத்துகிட்டேன்"

  இளையராஜா மனோன்மனி?

  இளையராஜா மனோன்மனி?

  கேள்வி: உங்க தாத்தா, அம்மா-ன்னு ரெண்டுதலைமுறையும் இளையராஜா ம்யூசிக்ல வாசிச்சிருக்காங்க. நீங்க எப்போ அவருக்கு வாசிக்க போறீங்க?"

  பதில் : நிச்சயமா நடக்கும். காத்துகிட்டு இருக்கேன். நான் வாசிப்பேன்னு அவருக்கு தெரியாது. அது கூட ஒரு காரணமா இருக்கலாம். ஆனா நிச்சயம் வாசிப்பேன்.என்று தன்னம்பிக்கையுடன் பதில் அளித்தார் .

  விஜய் ரசிகர்களை கட்டிப்போட்ட இசை

  விஜய் ரசிகர்களை கட்டிப்போட்ட இசை

  கேள்வி: ஏ ஆர் ரகுமான் கூட மெர்சல், பிகில் படத்துலல்லாம் வாசிச்ச உங்க அனுபவம் எப்படி இருந்துச்சு?

  பதில் : முதல்ல மெர்சல்ல தான் ஏஆர் ரகுமான் கிட்ட அறிமுகமானேன். மேட்சோ மேட்சோ பாட்டு வாசிச்சேன். ரொம்பவே பிடிச்சது எல்லாருக்கும். விஜய் ரசிகர்களும், ரகுமான் ரசிகர்களும் ரொம்பவே ரசிச்சாங்க. நல்ல வரவேற்பு குடுத்துச்சு என சொல்லிக் கொண்டிருந்தவரை விடமால் பிகில் படத்தில் மாதுரே பாடலை வாசிக்க சொல்ல.. மிக உற்சாகமாய் அதையும் வாசித்து உருக வைத்தார் மனோன்மனி.

  இசைப்பயணம்

  இசைப்பயணம்

  கேள்வி : வேற யார் யாருக்கெல்லாம் உங்க சாரங்கி சங்கீதம் பாடுது?

  பதில்: ஹிப்ஹாப் தமிழா, ஜிப்ரான், ப்ரதீப் குமார்ன்னு எல்லாருக்குமே வாசிச்சிட்டு இருக்கேன். ஷான் ரால்டன்க்கு கூட சூர்யா நடிச்சிருக்க ஒரு படத்துக்கு வாசிச்சிருக்கேன். ரொம்ப அழகா வந்துருக்கு. ரிலீஸ்க்கு வெய்ட்டிங்." அதுக்கு அப்புறம் சாரங்கி க்ளாஸ் எடுக்குற ஐடியா இருக்கு.இப்பதான் எல்லாரும் லாக்டவுன் முடிஞ்சி கொஞ்சம் மூச்சு விடறாங்க. நானும் ஒர்க் பிசில இருக்கேன். எல்லாம் இன்னும் கொஞ்சம் நார்மல் ஆன பிறகு, நிச்சயமா யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறும்.

  அப்பவே அப்படி

  கேள்வி : மனோன்மனியின் இசை வம்சம் பத்தி நம்ம ரசிகர்களுக்கு சொல்லுங்களேன்.."

  பதில் : என்னோட தாத்தா பேரு பிவி ஷண்முகம். நாடோடி மன்னன் படத்துலயே தபேலா வாசிச்சிருப்பாரு. தமிழகத்தின் முதல் தபேலா வித்வான் அவரு. அதுமட்டும் இல்லாம தில்ருபா, ஷனாய், தார்ஷனாய்ன்னு பல கருவிகள் பல படங்கள்ல வாசிச்சிருக்காரு.அம்மாவோட பேரு "தில்ரூபா சரோஜா". அவங்களும் MSV காலத்துல இருந்தே வாசிச்சிருக்காங்க. ராஜா, ரகுமான்னு வாசிக்காத கலைஞர்களே இல்லை. எல்லா ம்யூசிக் டைரக்டர்ஸ் கிட்டயும் வாசிச்சிருக்காங்க. அதுல ஒன்னுதான் பம்பாய் படத்துல உயிரே உயிரே.." என்று சொல்லி, அம்மா தில்ருபாவில் வாசித்ததை மகள் சாரங்கியில் வாசித்துக்காட்ட சில நிமிடம் அந்த இடமே பிரம்மித்து போனது.

  மொழிகள் கடந்த சாரங்கி

  கேள்வி: தமிழ் தவிர வேற என்ன மொழிகளுக்கு வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் ?"

  பதில்: மலையாளம்ல ஜெயச்சந்திரன், மற்றும் நிறைய பேர்.லிஸ்ட் பெருசு . இன்னும் நிறைய மியூசிக் டைரக்டர்ஸ்க்கு வாசிச்சிருக்கேன். இசையமைப்பாளர்கள் தேவி ஸ்ரீப்ரசாத்,கீரவாணி எல்லாருக்கும் வாசிச்சிருக்கேன். RRR Movie, KGF க்கும் வாசிச்சிருக்கேன். நிறைய வேற்று மொழி படங்களுக்கு சென்னைக்கு வந்து வாசிச்சிகிட்டு போவாங்க. நிறைய அது போல வாசிச்சி குடுத்துருக்கேன். அது ரொம்ப சந்தோஷமாவும் பெருமையாவும் இருக்கும் என்று சொல்லி கொண்டு இருந்த மனோன்மணியிடம் ... உங்க மனசுக்கு இதமா வாசிக்கனும்ன்னா எந்த பாடல் முதல்ல வாசிப்பீங்க.. அப்படியே ஒரு துள்ளலான இசை ஒன்னும் வாசிச்சி காட்ட முடியுமா? என்று கெஞ்சலாக கேட்க ... உடனே ஆர்வமாகவும் உருக்கமாகவும் வாசித்து நெகிழ்த்தினார் சாரங்கி இசைக்கலைஞர் மனோன்மனி. மனதை மயக்கும் இசையை தாத்தா, அம்மா என தொடர்ந்து அவர்கள் ஆசிகளுடன் இத்தனை ஸ்ருதி சுத்தமாக, ரம்யமான இசையை இசையுலகத்திற்கு கொடுத்துக்கொண்டிருக்கும் மனோன்மனியின் அந்த இசைத்தேனை நீங்களும் பருகிட நமது பிலிம்பீட் தமிழ் யூடுயூப் சேனல் மூலம் பல பாகங்களாக வந்து உள்ள சாரங்கி விடியோக்களை கிளிக் செய்து காணலாம் .

  English summary
  Manonmani comes from a family of musicians – her mother Saroja and her grandfather PV Shanmugam were both dilruba players.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X