திருமணத்துக்குப் பிறகு அஜித்திடம் அந்த சேட்டையை பார்க்கல.. ஆளே மாறிட்டாரு.. மந்த்ரா சொன்ன ரகசியம்!

சென்னை: 90ஸ் கிட்ஸ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக கவர்ச்சிப்புயலாக படங்களில் நடித்து வந்த நடிகை மந்த்ரா பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அதனை முன்னிட்டு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஜய் மற்றும் அஜித் குறித்து பல்வேறு சுவாரஸ்ய விஷயங்களை மந்த்ரா தனது பேட்டியில் பேசியுள்ளார்.

அஜித்துடன் இணைந்து ரெட்டை ஜடை வயசு படத்தில் நடித்த மந்த்ரா அப்போது நடிகர் அஜித் குமார் சரியான சேட்டை பிடித்தவராக செம ஜாலியாக இருந்தார். ஆனால், ராஜா படத்தின் ஷூட்டிங்கின் போது அவருக்கு திருமணம் ஆகி படப்பிடிப்புக்கு ஷாலினி வந்திருந்த நிலையில், அஜித் ஆளே மாறியிருந்தார் என மந்த்ரா ஓபனாக கூறியுள்ளார்.

manthra ajith kumar interview

நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறேன் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், லவ் டுடே படத்தில் பாட்டுக்கு மட்டும் ஆடும் வாய்ப்பு கிடைத்ததால் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டேன் என்றார்.

கவர்ச்சியாக மட்டுமே பயன்படுத்துனாங்க: தெலுங்கு சினிமாவில் தன்னை நடிகையாக பார்த்தார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் வெறும் கிளாமர் குயினாக மட்டுமே பார்த்து அதே போன்ற கதாபாத்திரங்களை மட்டுமே வழங்கினர். ஒரு படத்தில் ஹீரோயினாகவும் இன்னொரு படத்தில் துணை நடிகையாகவுமே நடித்து வந்தேன். முதல் படத்தில் எப்படி ஒரு நடிகையை பார்க்கின்றனரோ அதே போல முத்திரை குத்தி விடும் பழக்கம் கோலிவுட்டில் உள்ளது. பிரியம் படத்தில் கிளாமர் தூக்கலாக கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட நிலையில், தொடர்ந்து தமிழ் சினிமாவில் எனக்கு அதுமாதிரியான கதாபாத்திரங்கள் மட்டுமே குவிந்தன என்றார்.

அஜித் சரியான சேட்டை: 1997ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி சிவகுமார் இயக்கத்தில் அஜித், மந்த்ரா நடித்த ரெட்டை ஜடை வயசு படம் வெளியானது. அந்த படத்தில் நடிக்கும் போது தனக்கு வெறும் 14 வயது தான் என்றார் மந்த்ரா. அஜித்துக்கு பெரிதாக டான்ஸ் ஆட எல்லாம் அப்போது வராது. பீச்சில் இருவரும் நடிக்கும் காட்சியில் திடீரென மணலில் எதையோ எழுதிக் கொண்டிருந்தார். அதனை பார்த்த உடனே செமையா சிரித்து விட்டேன். அந்தளவுக்கு சேட்டை பிடித்தது போல ஒரு விஷயத்தை அஜித் சொல்லியிருந்தார்.

நல்லா சைட் அடிப்பேன்: அஜித் படப்பிடிப்புக்கு வந்து விட்டாலே அவரது அழகை மயங்கிப் போய் பார்த்துக் கொண்டிருப்பேன். இப்போது இருப்பது போல எல்லாம் அப்போ பேசவே முடியாது. அப்பா மற்றும் அம்மா இருவருமே சூட்டிங்கிற்கு வந்து விடுவார்கள். சீன் முடிந்ததும் சும்மா உட்கார்ந்துக் கொண்டு அஜித்தை பார்த்துக் கொண்டே இருப்பேன். நல்லா சைட் அடிப்பேன். என்னை பார்த்து எங்கம்மா என்னம்மா பண்றன்னு கேட்டதும் அப்படியே தலை குனிந்துக் கொண்டு ஒன்றுமில்லைம்மான்னு சொல்லிவிடுவேன் என்றார்.

திருமணத்துக்குப் பிறகு மாறிட்டார்: ராஜா படத்தின் சூட்டிங்கின் போது பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தான் கேரவன்கள் எல்லாம் நடிகர்களுக்கு கிடைத்தன. நடிகை ஷாலினி அந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு வந்திருந்தார். ரொம்பவே அன்பாக பேசினார். ஆனால், அந்த ஷூட்டிங்கின் போது அஜித்திடம் எந்தவொரு குறும்புத்தனத்தையோ சேட்டையையோ பார்க்கவில்லை. ரொம்பவே புரொபஷனலாக வந்து நடித்துக் கொடுத்து விட்டு சென்றார் என மந்த்ரா தனது புதிய பேட்டியில் அஜித் பற்றி பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X