twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ''நீ ஒரு வேலைக்கும் ஆக மாட்ட''என்று திட்டு வாங்கினேன்... டான் பட எடிட்டர் நாகூரான் பேட்டி

    |

    சென்னை: நான் ஒரு வேலைக்கும் ஆகமாட்டேன் என்று எடிட்டர் ஒருவர் தன்னை திட்டியதாக டான் படஎடிட்டர் நாகூரான் ராமச்சந்திரன் கூறினார்.

    Recommended Video

    Nagooran Ramachandran | நான் Edit பண்ணிய படங்களை அப்பா பார்க்கவில்லை | Filmibeat Tamil

    மேலும் அவர் கூறுகையில், இரவு நேர காட்சிகளை, இரவு நேரங்களில் ஷூட் பண்ணினால் நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

    நடிகர் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா மோகன் ஆகியோரது நடிப்பில் உருவான டான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் எடிட்டராக பணிபுரிந்துள்ள நாகூரான் ராமச்சந்திரன், நமது பிலிம்பீட் வினோத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

    தலைவரே.. தலைவரே.. வரி கட்டி ஆகணும் தலைவரே.. எஸ்.ஜே. சூர்யா வருமான வரி வழக்கு.. கோர்ட் அதிரடி!தலைவரே.. தலைவரே.. வரி கட்டி ஆகணும் தலைவரே.. எஸ்.ஜே. சூர்யா வருமான வரி வழக்கு.. கோர்ட் அதிரடி!

    டான் கிளைமாக்ஸ் காட்சி

    டான் கிளைமாக்ஸ் காட்சி

    கேள்வி:நீங்கள் பணிபரிந்த 4 படங்களில் எந்த காட்சியை ஆர்வமாக எடிட் செய்தீர்கள்?

    பதில்: 8 தோட்டாக்கள் படத்தில் பாங்க் கொள்ளை சம்பவம், சாணிக்காகிதத்தில் கோர்ட் சீன், டான் படத்தில் இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள், ராக்கியில் இடைவேளை சண்டை காட்சிகள் போன்றவற்றை எடிட் செய்வதற்கு ஆர்வமாக இருந்தது.

    மாத சம்பளம்

    மாத சம்பளம்

    கேள்வி:நீங்கள் எடிட்டிங் செய்வதை எவ்வாறு கற்றுக் கொண்டீர்கள்?

    பதில்:நான் பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவன். பிலிம் இன்டிடியூட்டின் 6 மாத பயிற்சியின் போது விகடன் டெலிவிஸ்டர்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். படிப்பு முடித்தவுடன் இரண்டு மாதங்கள் எடிட்டர் ஒருவரிடம் வேலைக்கு சேர்ந்தேன். குடும்ப சூழ்நிலை காரணமாக, கற்றுக்கொள்ள கூடிய சூழ்நிலை இருந்தபோதிலும் அதை நான் பயன்படுத்தி கொள்ளவில்லை. அத்துடன் அவர்"" நீ ஒரு வேலைக்கும் ஆக மாட்டாய்"" என்று திட்டி என்னை அனுப்பி விட்டார். பிறகு மாத சம்பளத்திற்கு வேலைக்கு போகலாம் என்ற எண்ணத்தில் நடிகர் கமலஹாசன் அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு விஸ்வரூபம்1, விஸ்வரூபம் 2 படத்தின் மேக்கிங் எடிட்டிங் செய்தேன். பின்னர் உத்தமபுத்திரன் படத்தில் அசிஸ்டென்ட் எடிட்டராக வேலை பார்த்தேன்.

    ஸ்ரீகணேஷ் மூலம் 8 தோட்டாக்கள் படத்தில் எடிட்டராக பணிபுரிய ஆரம்பித்தேன். நான் பணிபுரிந்த 4 படங்களில் சீன்களை குறைப்பது மட்டுமே இருந்தது. சீன்கள் சேர்ப்பது தொடர்பான எந்தவொரு வேலையையும் நான் செய்யவில்லை.

    கோலா பாஸ்கர் பிடிக்கும்

    கோலா பாஸ்கர் பிடிக்கும்

    கேள்வி: உங்களுக்கு பிடித்த எடிட்டர் யார்?

    பதில்:லெனின், ஸ்ரீகர்பிரசாத், ஆண்டனி, கோலா பாஸ்கர், ராஜா முகமது, ரூபன் போன்ற எடிட்டர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னை பிலிம் இன்டிடியூட்டில் ஸ்ரீகர்பிரசாத் அவர்கள் தான் என்னை இன்டர்வியூ செய்தார். அப்போது உங்களுக்கு பிடித்த எடிட்டர் யார் என்று கேள்வி எழுப்பினார். அப்போது எனக்கு கோலா பாஸ்கர் தான் பிடிக்கும் என்று கூறினேன். அப்போது எனக்கு தெரியாது என்னை இன்டர்வியூ செய்வது ஸ்ரீகார்பிரசாத் என்று. அது மட்டும் அல்லாமல் பின்னர் தான் அது தெரியவந்தது. ஆனால் என் உண்மையான பதிலை ரசித்து ஏற்று கொண்ட திறமைசாலி அவர். அதே போல்

    பிலிம் இன்ஸ்டிடியூட்டில் நான் படிக்கும்போது, லெனின் அவர்கள் தேசிய குறும்படம் தொடர்பான செமினார் எடுத்தார்கள். நன்றாக இருந்தது.

    நெகிழ்ச்சியான தருணம்

    நெகிழ்ச்சியான தருணம்

    கேள்வி: டான் படம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: டான் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது எனக்கு சந்தோஷமாக உள்ளது. தியேட்டர்களில் நான் ரசிகர்களுடன் படம் பார்த்து நல்ல விமர்சனம் கொடுப்பது என்னை பொறுத்தவரை நெகிழ்ச்சியான தருணம். என்னால் ரசிகர்களின் எண்ணத்தை புரிந்து கொள்ள முடிந்தது. தியேட்டரில் நான் எடிட் செய்த டான் படத்தை எங்க அம்மா பார்த்தார்கள். எங்க அப்பா இல்லை. அவர் பார்த்து இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றார்.

    பிடித்த நடிகர்கள்

    பிடித்த நடிகர்கள்

    கேள்வி:உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?

    பதில்: 8 தோட்டாக்கள் படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர், ஜெய்பீம் படத்தில் நடித்த மணிகண்டன், ராக்கியில் பாரதிராஜா, அஷ்ரப், சாணிக்காகிதத்தில் செல்வராகவன் ஆகியோரையும் பிடிக்கும். டான் படத்தில் சமுத்திரக் கனி, எஸ்.ஜே. சூர்யா, பாலசரவணன், சிவகார்த்திகேயனை பிடிக்கும் என்றார்.

    கலர் கிரேடிங்

    கலர் கிரேடிங்

    கேள்வி:நீங்கள் எடிட்டிங் செய்யும்பொழுது, எந்த காட்சிகளுக்கு அதிகம் நேரம் எடுத்து கொள்வீர்கள்?

    பதில்: பெரிய சண்டைக்காட்சிகளை எடிட் பண்ணும்போது நேரம் அதிகமாக எடுக்கும். இதற்கு அடுத்தபடியாக சேசிங் போன்ற காட்சிகளுக்கும், டிராமா காட்சிகளில் எமோஷன் உருவாக்குவதற்கும் நேரம் எடுக்கும் என்றார். மேலும் கூறுகையில், காலையில் ஷூட் பண்ணி இரவு நேரமாக மாற்றுவதை தவிர்த்தல் நன்றாக இருக்கும். இரவு நேர காட்சிகளை, இரவு நேரங்களில் ஷூட் பண்ணினால் நன்றாக இருக்கும். வேலையும் குறைவாக இருக்கும் என்றார். எனக்கு பொதுவாக கலர் கிரேடிங் ரொம்ப பிடிக்கும். ராக்கியும், சாணிக்காகிதமும் Adobe Premier ல் எடிட் செய்தேன். FCP ( FINAL CUT PRO) வீடியோ எடிட்டிங் செய்வதற்கு நல்ல சாப்ட்வேர். டாவின்சி சாப்ட்வேரில் கலர் கிரேடிங் செய்வதற்கு அதிகமாக பயன்படுத்தப்படும்.

    கேமரா மற்றும் கேமராமேன் சொல்லி கொடுத்த பாடம்

    கேமரா மற்றும் கேமராமேன் சொல்லி கொடுத்த பாடம்

    கேள்வி: உங்களுக்கு பிடித்த கேமிராமேன் யார்?

    பதில்: என்னை பொறுத்தவரை நான் பணிபுரிந்த 4 படத்தினுடைய கேமிராமேன்களும் திறமைசாலிகள். 8 தோட்டாக்கள் படத்தில் கேமிராமேன் தினேஷ் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன். ராக்கி படத்தில் கேமிராமேன் வைடு ஆங்கிள் அதிகமாக வைத்திருப்பார். சாணிக்காகித மேமிராமேன் யாமினி நல்ல திறமைசாமி. டான் கமர்ஷியல் படம். கலர்புல்லான படம். குளோஸ் அப் ஷாட்ஸ் அதிகம் இருக்கும். என்னுடைய சீனியர் பாஸ்கர் தான் கேமிராமேன். அதனால் அவரிடம் நான் எளிதாக பேசி எனக்கு தேவையான காட்சிகளை வாங்க முடிந்தது என்றார்.

    10 வருட நண்பர்... இவர்

    கேள்வி:சினிமாத்துறையில் ஜெயிக்க உங்கள் அனுபவத்தில் என்ன செய்ய வேண்டும்?

    பதில்:கே.ஜி.எப்.2 படத்தை 19வயது பையன் படத்தை எடிட் செய்திருக்கிறார். இந்த வயதில் இந்த சாதனை புரிந்திருக்கும் அவர், இன்னும் பல உயரத்தை அடைவதற்கு நான் வாழ்த்துகிறேன் என்றார். சினிமாத்துறை பொறுத்தவரை குரூப்பாக வந்தால் கண்டிப்பாக ஜெயிக்க முடியும். உதாரணமாக 10 வருடமாக சிபியும் நானும் நண்பர்கள். அவர் அப்போது கூறுகையில், நான் படம் எடுக்கும்போது நீ தான் எடிட்டர் என்றார். ஆகவே டீம் உருவாக்கி வந்தால் நல்ல வாய்ப்பு அமையும் என்றார்.

    நல்ல எடிட்டிங் செய்திருக்கிறார் என்று சொல்லாமல் இருந்தாலே மிகப்பெரிய விருது தான். விருது கொடுத்தால் மேலும் ஊக்கமளிக்கும் என்றார்.இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/Latq6NWXMuo இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத், டான் பட எடிட்டர் நாகூரான் ராமச்சந்திரன் இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.

    English summary
    Many of them scolded me like you are not fit for any job says don editor nagooran
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X