For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நான் ஐஸ்வர்யா ராய் போல் இருப்பதாக பல பேர் கூறியுள்ளனர்.. கலகத்தலைவன் நிதி அகர்வால் ஸ்பெஷல் பேட்டி!

  |

  சென்னை: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் உதயநிதி, நடிகை நிதி அகர்வால், பிக்பாஸ் புகழ் ஆரவ் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் கலகத்தலைவன்.

  இப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

  இந்நிலையில் படத்தின் நாயகி நித்தி அகர்வால் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

  240 நாடுகளில் என் வெப்சீரிஸ் வெளியாகுது.. வதந்தி டிரைலர் ரிலீஸ்.. குஷியில் எஸ்.ஜே. சூர்யா! 240 நாடுகளில் என் வெப்சீரிஸ் வெளியாகுது.. வதந்தி டிரைலர் ரிலீஸ்.. குஷியில் எஸ்.ஜே. சூர்யா!

  பேவரைட் காபி ஷாப்

  பேவரைட் காபி ஷாப்

  கேள்வி: நீங்கள் சென்னையில் அடிக்கடி செல்லும் இடம் எது?

  பதில்: நான் அடிக்கடி சென்னையில் செல்லும் இடம் காதர் நவாஸ்கான் சாலை தான். என்னுடைய Different Exercise Philotic பயிற்சி மையம் அங்கு தான் உள்ளது. மேலும் என்னுடைய பேவரைட் காபி ஷாப்பும் அங்கு தான் இருக்கிறது என்றார்.

  Admirable Lady

  Admirable Lady

  கேள்வி: நீங்கள் எந்த நடிகை போல் இருப்பதாக உணருகிறீர்கள்?

  பதில்: என்னை உலக அழகி ஐஸ்வர்யாராயுடன் ஒப்பிடுவார்கள். அவரது கண்கள் போன்று எனது கண்களும் இருப்பதாக கூறுகிறார்கள். எனக்கு பொதுவாக ஐஸ்வர்யாராயை ரொம்ப பிடிக்கும். அவர் நடித்த தேவதாஸ் உள்ளிட்ட படங்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் ஒரு admirable lady.

  நான் கடவுள்

  நான் கடவுள்

  கேள்வி: உங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் பின்தொடர என்ன காரணம்?

  பதில்: என்னுடைய சிலையை valentines day பரிசாக தெலுங்கு, தமிழ் ரசிகர்கள் கொடுத்தார்கள். அது கொஞ்சம் ஓவராக இருந்தாலும் கூட எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. என் மீதுள்ள அன்பு காரணமாக அவர்கள் கொடுத்தார்கள். திரைப்படங்களில் கதாநாயகன், கதாநாயகி மீதுள்ள அன்பு காரணமாக ஆக்ஷன் காட்சிகள் இடம்பெறுகிறது. அன்பு அதிகமாக இருக்கும்பொழுது, எது செய்தாலும் தவறு கிடையாது. எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 2.6 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்கிறார்கள். இதற்கு காரணம் அன்பு மட்டும் தான் என்றார்.

  அவர் ஒரு நைட்டிங்கேர்ள்

  அவர் ஒரு நைட்டிங்கேர்ள்

  கேள்வி: நீங்கள் தற்போது தமிழில் அழகாக பேசக் என்ன காரணம்?

  பதில்: தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகள் தெரியும். எனக்கு பாடல்கள் கேட்பது ரொம்ப பிடிக்கும். தமிழ், தெலுங்கு மொழியை நான் பேசுவதற்கு காரணம் என்னவென்றால், பாடல்கள் தான். என்னுடைய பிளே லிஸ்டில் நான்கு மொழி பாடல்களும் இருக்கும். திரும்ப, திரும்ப கேட்பதால் இது சாத்தியமானது என்றார். மேலும் அவர் கூறுகையில், என்னுடைய பேவரைட் பாடகி ஸ்ரேயா கோஷல். அவர் ஒரு நைட்டிங்கேர்ள். அவருடைய குரலுக்கு ஈடு இணை எதுவும் கிடையாது. கலகத்தலைவன் படம் மூலம் எனக்கு மூன்றாவது முறையாக பாடியுள்ளார். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

  மிகவும் பாதிக்கப்பட்டேன்

  மிகவும் பாதிக்கப்பட்டேன்

  கேள்வி: லவ் டுடே படம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

  பதில்: லவ்டுடே படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. என்னுடைய பேவரைட் என்னவென்றால், படத்தோட காமெடி வருவது ரொம்ப பிடிக்கும். ஜாலியான என்டர்டெய்ன்மென்ட் நிறைந்த சிறந்த காமெடி படம் லவ்டுடே. ஒவ்வொருவரின் வாழ்க்கையில் நல்ல எண்ணங்களும், தீய எண்ணங்களும் வரும். நல்லவற்றை எடுத்துக் கொண்டு, தீயவற்றை விலக்கி விட வேண்டும். அது போல் காதலிலும் வெற்றி, தோல்வி, எதிரிகள் போன்றவை உருவாகும். நான் பொதுவாக எனக்கு வரக்கூடிய குறுந்தகவல்களை ஓரளவு படிப்பேன். ஆனால் நல்லதை மட்டும் எடுத்துக் கொள்கிறேன். தவறான கருத்துக்களால், ஒரு காலக்கட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்டேன். ஆனால் தற்பொழுது நான் அனுபவம் வாய்ந்த பெண்ணாக இருக்கிறேன் என்றார்.

  இந்த ஜோடி பிடிக்கும்

  கேள்வி: உங்களுடைய பாய் பெஸ்ட்டி யார்?

  பதில்: என்னுடைய பாய் பெஸ்ட்டி அபிஷேக் திரிபாதி. அவர் இங்கு இல்லை. அமெரிக்காவில் இருக்கிறார். பெண் பெஸ்ட்டி சந்தானா. பெஸ்ட்டி கிடைப்பது என்பது ஒவ்வொருவரின் குணநலனை பொறுத்து மாறுபடும் என்றார். மேலும் அவர் கூறுகையில், தனக்கு சேலையை பிடிக்கும் என்றும், ஷாருக்கான் காஜல் ஜோடி பிடிக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் காதலை வெளிப்படுத்தும் படங்களில் அலைபாயுதே படமும், தனக்கு அப்பாவை தான் ரொம்ப பிடிக்கும் என்றும் தெரிவித்தார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://www.youtube.com/watch?v=hqDgUrZa3Cs இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

  English summary
  Directed by Magizh Thirumeni, Kalaga thalaivan is a film starring actor Udhayanidhi, actress Nidhi Agarwal and Aarav of Bigg Boss fame. The film has been released in theaters and has been well received by the audience. In this case, the film's heroine Nidhi Agarwal gave a special interview to our filmibeat channel.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X