twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    95 படங்கள் 40 வருஷ சினிமா...எனக்கு சொல்லி கொடுத்தது என்ன தெரியுமா? ப்ரியதர்ஷன் பேட்டி

    |

    சென்னை : நாற்பது வருட அனுபவத்துல கத்துக்கிட்ட ஒருவிஷயம்தான் என் வெற்றிக்கு காரணம் - மனத்திறக்கும் மரைக்கையார் பட இயக்குனர் ப்ரியதர்ஷன் . 90 கோடி செலவில் உருவாகியிருக்கும் மலையாள பிரம்மாண்ட திரைப்படம் "மரைக்கையார்" பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்து வருகிறது.

    Recommended Video

    Director Priyadharsan Interview About Marakkar Movie | Mohan Lal | Keerthi Suresh | Filmibeat

    ராகுல்ராஜ், லயல் எவான்ஸ் ரோடர், ரோனி ரஃபேல், அன்கித் சுரி ஆகியோர் இசையமைக்க, மோகன்லால், சுனில்ஷெட்டி, அர்ஜூன், சுஹாசினி, மணிரத்னம் போன்ற பிரம்மாண்ட நடிகர் பட்டாளமே களமிறங்கியுள்ளது.

    மலையாள புகழ்பெற்ற இயக்குனர் பிரியதர்ஷன் இயக்க, அவரது மகன் சித்தார்த் விஷிவல் எஃபகட் பணிகளை செய்து, இப்படத்திற்கான கேரள அரசுவிருதும் பெற்றுத்தந்திருக்கிறார்.

    மேலும் பல சுவாரஸ்யங்களை இயக்குனர் பிரியதர்ஷன் நம்மோடு பகிர்ந்து கொண்டபோது..

     யானை படத்தின் டப்பிங்கை தொடங்கிய அருண் விஜய்... போட்டோவுடன் வெளியானது சூப்பர் அப்டேட்! யானை படத்தின் டப்பிங்கை தொடங்கிய அருண் விஜய்... போட்டோவுடன் வெளியானது சூப்பர் அப்டேட்!

    40 வருஷமா நான் கத்துகிட்டது

    40 வருஷமா நான் கத்துகிட்டது

    கேள்வி : உங்கள் வெற்றிப்படங்களோட மக்கள் கருத்துக்களை, எப்படி எடுத்துக்குறீங்க?

    பதில் :நாம எடுக்கிற படம் மேல நமக்கு நம்பிக்க இருந்தா, அதை ரசிகர்கள் ஏத்துப்பாங்க-ங்கிற நம்பிக்கை இருந்தா நிச்சயம் அந்த படம் ஹிட் ஆகும். அதனாலதான் மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தின்னு பல மொழிகள் ல படம் எடுத்துருக்கேன். மக்களுக்கு ரசிக்கும்படியா இருந்துச்சுன்னா, என்ன நெகடிவ் பப்ளிசிட்டி குடுத்தாலும் படம் ஓடும். படம் நல்லா இல்லன்னா எவ்வளவு பாசிடிவ் பப்ளிசிட்டி குடுத்தாலும் படம் ஒர்க்கவுட் ஆகாது. அதனால இந்த தியரில நான் தெளிவாகவும் நம்பிக்கையாவும் இருக்கேன்.40 வருஷமா இதுதான் நான் சினிமாவுல படிச்சது.

    இதுக்கு இது போதும்.

    இதுக்கு இது போதும்.

    கேள்வி : காதல் காட்சிகளெல்லாம் ரொம்ப பிரமாதமா இருந்துச்சே.. இன்னும் வச்சிருக்கலாமே ?

    பதில் : ஒரு வரலாற்றயே சொல்லி முடிக்கும் போது, ஒரு டைம் லிமிட் இருக்குல்லயா? நிறைய கதாப்பாத்திரங்கள் வேற இருக்கு இந்த படத்துல. அதுல எவ்வளவு கொடுக்க முடியுமோ அத சரியா குடுத்துருக்கு. படத்த்துக்கு முன்னாடியே இவ்வளவுதான் வேணும்ன்னு முடிவு பண்ணியாச்சு. அதனால எந்த காட்சிகளையும் எடிட்ல தூக்கவோ, புதுசா இணைக்கவோ செய்யல.

    உறுதியான வரலாற்று ஆதாரம்

    உறுதியான வரலாற்று ஆதாரம்

    கேள்வி : இதேபோல இன்னொரு ஹிஸ்டாரிக்கல் படம் பண்ண திட்டம் இருக்கா?

    பதில் : அப்படியெல்லம் இல்ல. ஒன்னும் ப்ளான் பண்ண முடியாது லைஃப் ல. எதுவருதோ அத ஏத்துக்கனும், அவ்வளவுதான். அதுதான் என்னோட தியரி

    கேள்வி : படத்துல முக்கியமான அந்த சைனீஸ் கேரக்டர் பத்தி சொல்லுங்களேன்

    பதில் : அந்த கேரக்டர் ஒரிஜினலா வரலாற்றிலயே இருக்குற கதாப்பாத்திரம் தான். ரொம்ப முக்கியமான கேரக்டர். சிலபேர் அவர் போர்லயே இறந்துட்டதா சொல்றாங்க. சிலர் கிறிஸ்டியனா மாறிட்டாருன்னும் சொல்றாங்க. இந்த படத்துக்கு ஒரு இயக்குனரா எது சரியானதோ, என் பார்வையில அத குடுத்துருக்கேன். குஞ்சாலி மரக்கையார் வழில வந்தவங்க யாரும் இன்னும் இருக்கறதா எந்த உறுதியான வரலாற்று ஆதாரமும் இல்ல.

    ரிலீசுக்கு முன்பே விருதுகள்

    ரிலீசுக்கு முன்பே விருதுகள்

    கேள்வி : இந்த படத்துக்கான விருதுகள் பற்றி ?

    பதில் : மக்கள் படத்தை சந்தோஷமா ஏத்துக்கிறதுதான் உண்மையான விருது. அது கிடைச்சது ரொம்பவே சந்தோஷம். அதுமட்டும் இல்லாம படம் ரிலீஸ் ஆகறதுக்கு முன்னதாகவே விருதுகள் அறிவிச்சிட்டாங்க. 2019க்கான சிறந்த தேசியபடம், சிறந்த ஸ்பெஷல் எபக்ட்ஸ், சிறந்த ஆடைவடிவமைப்புன்னு பல விருதுகள் வந்துருக்கு என்று மனம்திறந்து மகிழ்ந்தார் மரைக்கையார் இயக்குனர் பிரியதர்ஷன். இந்த பேட்டியின் முழு வீடியோவை பில்மி பீட் தமிழ் யூட்யூப் சேனலில் காணலாம் .

    25 ஆண்டுகளை கடந்து

    25 ஆண்டுகளை கடந்து

    இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான படம் தான் காலாபானி .மோகன்லால் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரபு நடித்த முதல் மலையாள படமும் அதுதான்.இப்படத்தை தமிழில் 'சிறைச்சாலை' என்ற பெயரில் கலைப்புலி S தாணு வெளியிட்டார். தற்போது காலாபானி வெளியாகி 25 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் மீண்டும் மோகன்லாலும் ,பிரபுவும் மலையாள படமான "மரைக்கார் அரவிபிக்கடலிண்டே சிம்ஹம்"படத்தில் இணைந்து மிரட்டி உள்ளார்கள் . இந்த படத்தையும் பிரதர்ஷனே இயக்கி உள்ளார் . மேலும் இத்திரைப்படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ் ,நெடுமுடி வேனு , அசோக் செல்வன்,பைசால் , சித்திக் . சுரேஷ் கிருஷ்ணா , போன்ற நட்சத்திரப்பட்டாளமே நடித்து உள்ளார்கள் .திருநாவுக்கரசு ஒளிப்பதிவு , MS ஐயப்பன் நாயர் படத்தொகுப்பினை கவனிக்க .ரோனி நபேல் இசையமைத்துள்ளார் .RP பாலா இப்படத்திற்கு வசனங்களை எழுதியுள்ளார் . இதற்கு முன்பு மோகன்லால் படடங்களான புலி முருகன் , லூசிபர் ஆகிய பிரமாண்ட வெற்றி படங்களுக்கு வசனங்களை எழுதியுள்ளார் என்பது .குறிப்பிடத்தக்கது .

    English summary
    Marakkar movie Director Priyadharshan Special Interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X