நடிகர், நடிகைகள் எல்லாம் பிச்சைக்காரர்கள் போன்று: சொல்கிறார் ராணி முகர்ஜி

By Siva

மும்பை: நடிகர், நடிகைகள் பிச்சைக்காரர்கள் போன்று அவர்களால் பலவற்றில் இருந்து எதையாவது தேர்வு செய்ய முடியாது என்று நடிகை ராணி முகர்ஜி தெரிவித்துள்ளார்.

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா சோப்ராவை அண்மையில் திருமணம் செய்து கொண்ட இந்தி நடிகை ராணி முகர்ஜி மர்தானி என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் அறிமுக விழாவில் ராணி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

பெண்ணை மையமாக

பெண்ணை மையமாக

பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் வெற்றி பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது போன்ற படங்கள் பல வெளியாகி வெற்றி பெற வேண்டும். அப்படி அவை ஹிட்டானால் தான் தயாரிப்பாளர்கள் அது போன்ற படங்களை மேலும் தயாரிப்பார்கள்.

பிச்சைக்காரர்கள்

பிச்சைக்காரர்கள்

நாங்கள் நடிகர், நடிகைகள் எல்லாம் பிச்சைக்காரர்கள் போன்று. நாங்கள் எதையும் தேர்வு செய்வது இல்லை. இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர்கள் தான் எங்களை தேர்வு செய்கிறார்கள்.

படங்கள்

படங்கள்

பெண்களை மையமாகக் கொண்ட படங்களில் நான் நிச்சயம் நடிப்பேன். இனி சிறப்பான கதாபாத்திரங்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

கான்கள்

கான்கள்

எனக்கு அனைத்து கான்களையும் பிடிக்கும். என் முதல் சில படங்கள் கான்களுடன் தான். குலாம் படத்தில் ஆமீர் கானுடனும், குச் குச் ஹோத்தா ஹை படத்தில் ஷாருக்கானுடன் நடித்தேன். அந்த படங்களில் எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தன.

ஜான்சி ராணி

ஜான்சி ராணி

மர்தானி படம் எனக்கு மிகவும் நெருக்கமானது. என் இளம் வயதில் நான் ஜான்சி ராணி பற்றியும், அவரது வீரம் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். நாம் பெண்கள் எல்லாம் சக்தியின் அவதாரம். இந்த படத்தில் பெண்களின் மனவலிமையை பற்றி பேசியுள்ளோம்.

அம்மா

அம்மா

என் அம்மா ஒரு பெண் புலி போன்று. அவர் மிகவும் வலிமையான குணம் கொண்டவர். என் குடும்பத்தில் உள்ள வலுவான பெண்கள் மற்றும் நான் பார்க்கும் பெண் போலீஸ் அதிகாரிகளை முன் உதாரணமாகக் கொண்டு நடித்துள்ளேன். இந்த படம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.

பெண் இன்ஸ்பெக்டர்கள்

பெண் இன்ஸ்பெக்டர்கள்

பெண் இன்ஸ்பெக்டர்கள் குறித்து நான் ஆய்வு செய்தேன். என் ஆய்வில் அவர்கள் ஆண் இன்ஸ்பெக்டர்களுக்கு நிகராக ஏன் அவர்களை விட நன்றாக வேலை செய்கிறார்கள் என்றார் ராணி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X