டிராகன் டிரைலரை பார்த்தே படத்தை பார்க்க வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்.. மாரி செல்வராஜ் ஓபன் டாக்!
சென்னை: இந்த ஆண்டு துருவ் விக்ரமை வைத்து பைசன் படத்தை கொடுத்த மாரி செல்வராஜ் சமீபத்தில் யூடியூப் விமர்சகர் நடத்திய ரவுண்ட் டேபிள் விவாதத்தில் பங்கேற்று பேசிய போது "டிராகன் பட டிரைலரை பார்த்தே படத்தை பார்க்க வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன் என்றார்.
அஸ்வத் மாரிமுத்து, மாரி செல்வராஜ் உள்ளிட்ட பல இயக்குநர்கள் பங்கேற்று இந்த ஆண்டு வெளியான தரமான படங்களின் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

காதலிக்க நேரமில்லை படத்தை இயக்கிய கிருத்திகா உதயநிதியும் அந்த கலந்துரையாடலில் பங்கேற்றார். பைசன் படத்தை பார்த்து மிரண்டு போனேன் என அஸ்வத் மாரிமுத்து பாராட்டிய நிலையில், டிராகன் படத்தை ஓடிடியில் தான் பார்த்தேன் என மாரி செல்வராஜ் பேசியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
டிரைலரை பார்த்தே: டிராகன் படத்தின் டிரைலரை பார்த்த பிறகு இந்த படத்தை பார்க்கக் கூடாது என்கிற முடிவுக்கே வந்துவிட்டேன். தியேட்டரில் படத்தை பார்க்கவே இல்லை. ஆனால், படம் வெளியான பின்னர், பலரும் படத்தை பார்க்க சொன்னார்கள். ஓடிடியில் தான் அந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. படத்தின் கிளைமேக்ஸில் இடம்பெற்ற Political Correctness பார்த்து வியந்தே போனேன்.

இப்படி படம் பண்ணுங்க: என்னுடைய உதவி இயக்குநர்கள் சிலர் கமர்ஷியல் படம் எடுக்கும் நோக்கில் இருக்கும் பட்சத்தில் அவர்களை அழைத்து கமர்ஷியல் படம் பண்ணாலும் டிராகன் மாதிரியான படத்தை பண்ணுங்க எனக் கூறினேன். சமூகத்துக்கு ஏதாவது ஒரு நல்ல கருத்தை நம் படங்கள் மூலம் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். கமர்ஷியல் படங்களை கல்லா கட்ட மட்டும் எடுக்கக் கூடாது என மாரி செல்வராஜ் பேசியதுமே அஸ்வத் மாரிமுத்து ஹேப்பி ஆகிவிட்டார். டிராகன் படத்தில் ஹீரோயினாக நடித்த அனுபமா பரமேஸ்வரன் தான் பைசன் படத்திலும் ஹீரோயின்.
2 நாள் தூங்கவே இல்லை: இந்த ஆண்டு இந்தியில் வெளியான ஹோம்பவுண்ட் திரைப்படம் தியேட்டரிக்கலாக வெற்றி பெறவில்லை. ஆனால், அந்த படத்தை பார்த்து விட்டு 2 நாள் தூங்கவே இல்லை என்றும் மாரி செல்வராஜ் பேசிய காட்சிகள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. ஹோம்பவுண்ட் தமிழ் சினிமாவில் வந்திருந்தால் நிச்சயம் ரசிகர்கள் கொண்டாடியிருப்பார்கள் என்றும் அங்கிருந்த இயக்குநர்கள் கூறினர்.


Click it and Unblock the Notifications











