இது பராசக்தி இல்ல பரதேசி.. தேர்தல் நேரத்தில் ஏன் வருதுனு தெரியாதா? பிரபலம் கருத்து!
சென்னை: இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக பராசக்தி திரைப்படம் இருக்கிறது. சுதா கொங்கராவின் இயக்கத்தில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, சிறப்பு தோற்றத்தில் பேசில் ஜோசப், ராணா ஆகியோர் நடித்துள்ளனர். முதலில் ஜனவரி 9ந் தேதி வெளியாக அறிவிக்கப்பட்ட இப்படத்தில் விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியானதால் 10ந் தேதிக்கு மாற்றப்பட்டது. இப்படம் குறித்து பேசிய பிரபல யூடியூபர் மாரிதாஸ் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், பிரபல யூடியூபர் மாரிதாஸ், பராசக்தி படம் பற்றிய தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அதில், படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இந்த படத்தை எடுப்பதற்கு பல காரணத்தை சொன்னாலும், கருணாநிதியின் புகழை பாடவேண்டும் என்பதற்காக "பராசக்தி படத்தை எடுத்து பொங்கலுக்கு தேர்தல் நேரத்தில் இப்படத்தை வெளியிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது திமுகவின் எண்ணம் இந்த எண்ணத்தை சுதா கொங்குரா நிறைவேற்றி இருக்கிறார். சுதா கொங்குரா புரட்சிகரமான பல வசனங்களை பேசி மக்களுக்கு பாடம் எடுக்கிறார். 250 கோடி பட்ஜெட்டில் பராசக்தி படத்தை எடுத்து இருக்கும் சுதா கொங்குரா அந்த பணம் நேர்மையான வழியில் வந்ததா என்று கூட யோசிக்காமல் படத்தை எடுத்து இருக்கிறார். அப்படி இருக்கும் போது மற்றவர்களுக்கு அறிவுரை கூற என்ன தகுதி இருக்கிறது.

பராசக்தி இல்ல பரதேசி: மற்றொரு முக்கியமான விஷயம், படத்தின் இயக்குநர் சுதா, தமிழ் சமூகத்தையும், தமிழர்களையும் எவ்வளவு கீழ் தனமாக பார்க்கிறார்கள் என்பதை இந்த படத்தின் மூலமே நாம் புரிந்து கொள்ள முடியும். இந்த படத்தை இயக்கும் சுதா கொங்கரா தெலுங்கு. படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் என பெரும்பாலானோர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள். சிலர் கேரளாவைச் சேர்ந்த நடிகர்களாக இருக்கிறார்கள், இவர்களுக்கு தமிழ் நடிகர்களை பார்த்தால் எப்படி தெரிகிறது. இந்தப் படத்துக்கு பராசக்தி என்று பெயர் வைக்காமல் பரதேசின்னு பெயர் வைச்சா மிகச்சரியான பெயராக இருக்கும் என்று பேசி உள்ளார். இந்த விமர்சனம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











