Vishal: கல்யாணம் பண்ணாததற்கு இதுதான் காரணம்.. மேடையில் ஓபனாக சொன்ன விஷால்!
சென்னை: கல்யாணம் செய்யாததற்கு இதுதான் காரணம் என்று நடிகர் விஷால் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகன் ஆவார்.
அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த மார்க் ஆண்டனி படம் சக்கைப்போடு போட்டு, வசூலை குவித்து வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில், எஸ்.ஜே. சூர்யா, சுனில், செல்வராகவன், ரிது வர்மா என பலரும் நடித்துள்ளனர்.

விஷால் பேட்டி: யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள விஷால், இதுவரை திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணத்தை மனம் திறந்து பேசி உள்ளார். அதில், திருமணம் என்பது சாதாரணமான விஷயம் இல்லை. அதற்கு புரிதல்,பக்குவம் வேண்டும். திடீரென ஒரு முடிவு எடுத்துவிட்டு பின், என்னடா இப்படி ஆகிவிட்டதே என்று யோசிக்கக்கூடாது. ஏன் என்றால் திருமணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை சம்மந்தப்பட்டது.
அது மட்டுமில்லாமல் ஒரு நடிகராக எனக்கு நிறைய பொறுப்பு இருக்கிறது. அந்த விஷயம் எல்லாம் முடிந்து, என் வாழ்க்கையிலும் திருமணம் நடக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தால், அது என் வாழ்க்கையில் நிச்சயமாக நடக்கும்.

முதியோர் இல்லம்: 19 ஆண்டு காலமாக மக்கள் என்னை ஒரு நடிகனாக மாற்றி இந்த உயரத்தில் அமரவைத்து அழகு பார்த்திருக்கிறார்கள். அவர்களுக்கு நான் நிச்சயமாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும், முதியோர் இல்லத்திற்கு செல்வதை வழக்கமாக வைத்து இருக்கிறேன். அதன் பிறகு தான் மற்ற இடத்திற்கு செல்வேன்.
வயிறார சாப்பாடு: மேலும், பசியோடு இருப்பவர்களுக்கு வயிறு நிறைய சோறு போட்டு அனுப்ப வேண்டும் என்பதை, நான், விஜயகாந்த் அவர்களிடம் கற்றுக்கொண்டேன். அவருடைய அலுவலகத்தில் எப்போதும் சமைத்துக்கொண்டே இருப்பார்கள், யார் போனாலும் வயிறார சாப்பாடு கிடைக்கும் அதைத்தான் நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன் தொடர்ந்து என்னால் முடிந்ததை நான் செய்வேன் என்று விஷால் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











