பிக்பாஸ் ஆரவ்க்கு முதல் படம் வெற்றி படமாக அமையுமா ?

Recommended Video

MARKETRAJA TEAM INTERVIEW | V-CONNECT | FIMIBEAT TAMIL

சென்னை : மாரக்கெட் ராஜா இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் .இந்த படத்தில் பிக்பாஸ் வெற்றியாளரான ஆரவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இயக்குனர் சரண் தமிழ் சினிமாவின் மிகபெரிய இயக்குனராவார் .இவர் தமிழில் மிகச்சிறந்த படங்களை இயக்கியுள்ளார் ,இவர் 1998ல் அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த காதல் மன்னன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் ,அதன் பின் அமர்களம் ,பார்த்தேன் ரசித்தேன்,அல்லி அர்ஜுனா ,ஜெமினி,ஜே ஜே ,வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் ,அட்டகாசம்,இதய திருடன் , வட்டாரம் என இவர் இயக்கிய அத்தனை படங்களும் மாபெரும் வெற்றி அடைந்திருக்கிறது .

MARKET RAJA IS READY FOR RELEASE AND AARAV IS THE BANG

மாபெரும் இயக்குனராக வழம் வந்த சரன் ,2009ல் மோதி விளையாடு படத்தை இயக்கி இருந்தார் அந்த படம் தான் அவருக்கு முதல் தோல்விப்படம் அது வரை தோல்வியை சந்திக்காத சரண் படங்கள் அப்போது தான் சரிவை சந்தித்தது. அதன் பின் சரண் இயக்கிய அசல் மற்றும் ஆயிரத்தில் இருவர் இரு படங்களுமே தோல்வியில் முடிந்தன .தற்போது மார்க்கெட் ராஜா படம் மூலம் ரீஎன்டரி கொடுப்பாரா சரண் என்பதை பார்ப்போம்.

பிக்பாஸ் வெற்றிக்கு பிறகு ஆரவ் மூன்று படங்களில் நடித்து வருகிறார். அதில் முதலில் இந்த மார்க்கெட் ராஜா வெளியாக போகிறது ,தற்போது படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது ,இதில் ஆரவ் மற்றும் படத்தின் கதாநாயகியான காவியா தாபரும் பேட்டியளித்தனர் .

MARKET RAJA IS READY FOR RELEASE AND AARAV IS THE BANG

அதில் படத்தின் மூலம் ஆரவ் மற்றும் காவியா மிகுந்த நண்பர்களாக மாறி விட்டார்கள் என்று தெரிவித்தனர் .மேலும் காவியாவுக்கு இது முதல் படம் ஆனாலும் தமிழை கற்று தமிழ் பேசி படத்தில் நடித்து இருக்கிறாராம் ,ஆரவ் தனது முதல் படத்திலே ஒரு தாதாவாக நடித்து வருவதாக கூறினார். மேலும் இந்த படக்கதையின் ஒரு வரியையும் கூறியிருக்கிறார் ஆரவ் ,படத்தின் கதைப்படி தாதாவாக ஆரவ் நடிக்கிறார் ,அவரது உடம்பில் பயம் அதிகம் உள்ள டாக்டர் ஆவி புகுந்து விடுகிறது அதற்கு பிறகு என்ன என்பதே கதையாகும் என்று கூறினார் .

இயக்குனர் சரண் இதற்கு முன் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, அதன் பின் மீண்டும் டாக்டர் கதாபாத்திரத்தை மைய கதாபாத்திரமாக கொண்டு இந்த படத்தை இயக்கி உள்ளார் .டாக்டர் சென்டிமெண்ட்பேய் செண்டிமெண்ட் எல்லாம் கலந்து வெற்றி பெற வேண்டும் . எல்லா சென்டிமென்டுகளையும் தாண்டி சரண் ஒரு அசுரத்தனமான போராளி. அவர் கே பாலசந்தர் பட்டறையில் இருந்து வந்தவர். வெற்றியை துரத்தி கொண்டிருப்பவர். விடா முயற்சி தான் அவருடைய தலை சிறந்த பண்பு.

MARKET RAJA IS READY FOR RELEASE AND AARAV IS THE BANG

ஆரவ் நடிக்கும் ராஜபீமா படத்திற்கு இந்த படத்தின் வெற்றி தான் ஒரு மிக பெரிய பரிசாக இருக்கும் ஒட்டுமொத்த குழுவும் அங்கீகாரத்திற்காக காத்து இருக்கின்றன. வெற்றி பெற வாழ்த்துவோம் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X