சரிகாவுக்கு திருமணம் அழகானது, கமலுக்கோ பழைய பஞ்சாங்கம்

By Siva

பனாஜி: திருமணம் என்பது பழைய கால பஞ்சாங்கம் என்று நடிகர் கமல் ஹாஸன் தெரிவித்தார். மேலும் திருமணம் அழகானது என்ற தனது முன்னாள் மனைவி சரிகாவின் கருத்தை ஏற்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.

கோவாவில் நடைபெற்று வரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் உலக நாயகன் கமல் ஹாஸன் கலந்து கொண்டுள்ளார். கடந்த 20ம் தேதி துவங்கிய விழாவில் கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் கமலை செய்தியாளர்கள் சந்தித்து பேட்டி எடுத்தனர். அதன் விவரம் வருமாறு,

ஸ்ருதி

ஸ்ருதி

ஸ்ருதி தைரியமான பெண். பெற்றோர் பிரிந்து வாழ்வதை தாங்குவது எளிதன்றது. அதை அவர் பார்த்துள்ளார். அதன் மூலம் அவர் பலவற்றை கற்றுக் கொண்டுள்ளார். இருப்பினும் அவர் பற்றி கவலையாக உள்ளது. எந்த தந்தைக்கும் அந்த கவலை இருக்கும். அவரை பத்திரமாக இருக்கமாறு கூறியிருக்கிறேன் என்றார் கமல்.

மகள்கள்

மகள்கள்

மகள்களின் கெரியரில் நான் அவ்வளவாக தலையிடுவதில்லை. என்ன செய்ய வேண்டும் என்று எப்பொழது பார்த்தாலும் அறிவுரை வழங்கும் தந்தை நான் இல்லை. அக்ஷராவுடன் ஒப்பிடுகையில் ஸ்ருதியின் கெரியர் பற்றி அவருடன் நிறைய பேசியிருக்கிறேன் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இறுதி முடிவு அவர்களுடையது தான் என்று கமல் தெரிவித்தார்.

விஸ்வரூபம்

விஸ்வரூபம்

விஸ்ரூபம் படத்திற்கு வந்த சர்ச்சை வேண்டும் என்றே ஏற்படுத்தப்பட்டது. அதை யார் ஏற்படுத்தினார்கள் என்பது பற்றி தற்போது பேசத் தேவையில்லை. விஸ்வரூபம் 2 படத்திற்கு சர்ச்சை எதுவும் கிளம்பாது என்று நம்புவதாக கமல் கூறினார்.

திருமணம்

திருமணம்

திருமணம் என்பது அழகானது என உங்களின் முன்னாள் மனைவி சரிகா கூறியிருக்கிறாரே, அதை ஒப்புக் கொள்கிறீர்களா என்று கமலிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் இல்லவே இல்லை என்று பதில் அளித்தார். திருமணம் என்பது பழைய கால பஞ்சாங்கம். அது உங்களை ஒருவருடன் சேர்ந்து வாழ வலியுறுத்தும் சட்டப்படியான ஒரு ஒப்பந்தம். ஒருவர் யாரையாவது உண்மையாக நேசித்தால், அவர்கள் பந்தத்தை இணைக்க பேப்பர் தேவையில்லை என்றார் கமல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X